“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து”திருக்குறள் – 738 மு. வரதராசனார் விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். நான் கடந்த மாதம் இலங்கைக்குச் சென்று இரண்டு வாரங்கள் எனது வயதான தாயருடன் ஒன்றாக இருந்துவிட்டு வந்தேன். அவருக்கு தொண்ணூற்று நான்கு வயது. எமது தந்தையார் 42 வருடங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக மறைந்துவிட்டார். தந்தையார் […]
தமிழில்: த. சிவதாசன் ராஜ் ஜனனின் தந்தையார் முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் வெற்றிகரமான ஆலை அதிபர். அலுமினியத் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, தனியார் மருத்துவமனை, செய்திப் பத்திரிகை எனப் பல தொழில்களையும் நடாத்தியவர். அப்போது ஜனனுக்கு 11 வயது மட்டுமே. 1971 இல் நடைபெற்ற ஜே.வி.பி ஆயுதக் கலகம் சிறுவன் ஜனனின் அரும்பும் காலங்களைக் குழப்பிவிட்டது. கலகத்தின் விளைவாக குடும்பம் பிரிய நேரிட்டது. தாயும் சகோதரியும் கொழும்பில் மாட்டிக்கொள்ள தந்தையுடனும் […]
பௌத்த சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தின் தமிழர் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை நேரடிச் சாட்சியங்களுடனும், நேர்த்தியான தரவுகளுடனும் ஆவணப்படுத்தி, பதிவு செய்த நூலாக ‘தமிழினப் படுகொலைகள்: 1956 – 2008’ ஆவணம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் மையம் (North East Secretariat On Human Rights – NESOHR) இந்நூலினை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ‘மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் […]
அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள உகந்தை மலையின் தென்மேற்கு பக்கத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் நாகபர்வத மலை அமைந்துள்ளது. இலங்கையில் இரண்டு பெரிய வன விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று தீவின் வடமேற்கில் உள்ள வில்பத்து எனும் வனமாகும். அடுத்தது தென்கிழக்கில் உள்ள யால எனும் வனமாகும். யால வனத்தின் கிழக்குப் பகுதி குமண என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் நாகபர்வத […]
(ஜனவரி, 2025 இல் ‘சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்’ எனும் நூல் ‘எழுநா’ வெளியீடாக வரவுள்ளது. அந் நூலிற்கான முன்னுரை இங்கே தரப்படுகிறது.) இத்தொகுப்பில் 10 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் ‘எழுநா’ இணைய இதழில் 2022 – 24 காலத்தில் தொடராக வெளியிடப்பட்டவை. அரசியல் யாப்புச் சட்டம், அரசியல் கோட்பாடு, உலகின் தேசிய இனங்களின் பிரச்சினைகள், முரண்பாடுகளை இணக்கமான முறையில் தீர்வு செய்தல் ஆகிய துறைகளின் புலமையாளர்களும், […]
சிலப்பதிகார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணகி வழிபாடானது தமிழுலகெங்கும் பரவி இருந்ததெனலாம். இதனை “ஒருமா முலை இழந்த திருமா உண்ணி” என்னும் நற்றிணைப் பாடலடிக் குறிப்பின் வழியும் உணரலாம். சிலப்பதிகாரத்தின் பல பகுதிகளில் இளங்கோவடிகள் கண்ணகி வழிபாடு பல்லாண்டுகளாக இருந்து வருகின்றமைக்கான சான்றுகளைக் குறிப்பாக வழங்கிச் சென்றுள்ளமையினைக் காணலாம். கண்ணகி வழிபாடானது உலகம் முழுமையும் பரவிய நிலையினை, அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங்குடகக் கொங்கரு […]
புதிய சமூக சக்தியாக ஐரோப்பாவில் முதலாளி வர்க்கம் எழுச்சியடைந்து வந்த போது அரசையும் கல்வியையும் மதத்தினின்று பிரித்துச் சுதந்திரமாக இயங்க வழி கோலியதன் வாயிலாக ஆன்மிகத்தைத் தனிநபர் விவகாரமாக ஆக்கிக் கொண்டது. அதன் பேறாக விஞ்ஞான அறிவு எல்லைகள் தாண்டிப் புதிய தளங்களுக்குத் தொடர்ந்தும் விரிவாக்கம் அடையலாயிற்று. அதுவரை நிலப்பிரபுத்துவச் சமூக முறைமையில் அதியுச்சங்களைத் தொட்டு மேலும் முன்னேற இயலாமல் வீழ்ச்சியுறத் தொடங்கியிருந்தன இந்தியாவும் சீனாவும். தமது நாட்டுத் தொழிலாளர்களை […]
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் பல மலைத் தொடர்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல உயரமான மலைக் குன்றுகளும், தட்டையான மலைப் பாறைகளும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் தட்டையான மலைப் பாறைகளில் ஒன்று வேலோடும் மலை எனவும், அதன் அருகில் உள்ள மலை நாகமலை எனவும் அழைக்கப்படுகிறது. மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வந்தாறுமூலைக்கும், சித்தாண்டிக்கும் இடையில் மாவடிவேம்பு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி […]
ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே மட்டக்களப்பு பிரதேசத்தில் இனக்குழப்பங்கள் 20 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன உறவுகளைப் பாதித்த பல உள்ளூர் தமிழ் – சோனகக் கலவரங்கள் மற்றும் இடையூறுகள் ஆகியவற்றை பிரபலமான குறிப்புகள் விவரிக்கின்றன. உள்ளூர் தமிழ் – சோனக மோதல்களை நான் நேரடியாகக் காணவில்லை. என்றாலும், இதுபோன்ற மோதல்கள் பற்றிய வாய்வழிப் பதிவுகளை நான் சேகரித்தேன். இதற்கு உதாரணமான ஒரு […]
ஆதிகால மக்களின் நம்பிக்கைகளே சமயங்களாகப் பரிணமித்தன. மானுடர்களின் வாழ்வில் உருவான நம்பிக்கைகள் பல்வேறு நம்பிக்கைகளையும், கற்பனைகளையும், அச்சங்களையும் அவற்றினூடாகப் பல்வேறு ஐதிகக் கதைகளையும் புராணங்களையும் நீண்ட நெடுங்காலங்களுக்கு அளிக்கை செய்து வந்துள்ளன. அதன் வழி “ஓ! நம்பிக்கையே என்னை நம்பிக்கை உடையவனாக்கு” என இறைஞ்சுகின்ற நிலைக்கு மானுடரை உந்தித் தள்ளிற்று. அவை அகவியல், புறவியல் எனும் இரு தளங்களிலும் வாழ்வு முழுவதும் மானுடருடன் தொடர்ந்து பயணித்தன. அது இயற்கை வழிபாடு, […]