Blogs - Ezhuna | எழுநா

நாகபர்வத மலை எனும் பம்பரகஸ்தலாவ மலையில் நாகர் பற்றிய கல்வெட்டுகள்

16 நிமிட வாசிப்பு

அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள உகந்தை மலையின் தென்மேற்கு பக்கத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் நாகபர்வத மலை அமைந்துள்ளது. இலங்கையில் இரண்டு பெரிய வன விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று தீவின் வடமேற்கில் உள்ள வில்பத்து எனும் வனமாகும். அடுத்தது தென்கிழக்கில் உள்ள யால எனும் வனமாகும். யால வனத்தின் கிழக்குப் பகுதி குமண என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் நாகபர்வத […]

மேலும் பார்க்க

சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்

10 நிமிட வாசிப்பு

(ஜனவரி, 2025 இல் ‘சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்’ எனும் நூல் ‘எழுநா’ வெளியீடாக வரவுள்ளது. அந் நூலிற்கான முன்னுரை இங்கே தரப்படுகிறது.)  இத்தொகுப்பில் 10 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் ‘எழுநா’ இணைய இதழில் 2022 – 24 காலத்தில் தொடராக வெளியிடப்பட்டவை. அரசியல் யாப்புச் சட்டம், அரசியல் கோட்பாடு, உலகின் தேசிய இனங்களின் பிரச்சினைகள், முரண்பாடுகளை இணக்கமான முறையில் தீர்வு செய்தல் ஆகிய துறைகளின் புலமையாளர்களும், […]

மேலும் பார்க்க

கண்ணகி வழிபாட்டின் பரவலாக்கம்

23 நிமிட வாசிப்பு

சிலப்பதிகார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணகி வழிபாடானது தமிழுலகெங்கும் பரவி இருந்ததெனலாம். இதனை “ஒருமா முலை இழந்த திருமா உண்ணி” என்னும் நற்றிணைப் பாடலடிக் குறிப்பின் வழியும் உணரலாம். சிலப்பதிகாரத்தின் பல பகுதிகளில் இளங்கோவடிகள் கண்ணகி வழிபாடு பல்லாண்டுகளாக இருந்து வருகின்றமைக்கான சான்றுகளைக் குறிப்பாக வழங்கிச் சென்றுள்ளமையினைக் காணலாம். கண்ணகி வழிபாடானது உலகம் முழுமையும் பரவிய நிலையினை, அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங்குடகக் கொங்கரு […]

மேலும் பார்க்க

சாதிகள், இனத் தேசியங்கள், தேசங்கள் இடையே சமத்துவமும் ஒப்பிலாத பொதுவுடமைப் புத்துலகும்

13 நிமிட வாசிப்பு

புதிய சமூக சக்தியாக ஐரோப்பாவில் முதலாளி வர்க்கம் எழுச்சியடைந்து வந்த போது அரசையும் கல்வியையும் மதத்தினின்று பிரித்துச் சுதந்திரமாக இயங்க வழி கோலியதன் வாயிலாக ஆன்மிகத்தைத் தனிநபர் விவகாரமாக ஆக்கிக் கொண்டது. அதன் பேறாக விஞ்ஞான அறிவு எல்லைகள் தாண்டிப் புதிய தளங்களுக்குத் தொடர்ந்தும் விரிவாக்கம் அடையலாயிற்று. அதுவரை நிலப்பிரபுத்துவச் சமூக முறைமையில் அதியுச்சங்களைத் தொட்டு மேலும் முன்னேற இயலாமல் வீழ்ச்சியுறத் தொடங்கியிருந்தன இந்தியாவும் சீனாவும். தமது நாட்டுத் தொழிலாளர்களை […]

மேலும் பார்க்க

மகா நாக மன்னன் பற்றிக் குறிப்பிடும் வேலோடும் மலை – நாகமலைக் கல்வெட்டு  

8 நிமிட வாசிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் பல மலைத் தொடர்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல உயரமான மலைக் குன்றுகளும், தட்டையான மலைப் பாறைகளும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் தட்டையான மலைப் பாறைகளில் ஒன்று வேலோடும் மலை எனவும், அதன் அருகில் உள்ள மலை நாகமலை எனவும் அழைக்கப்படுகிறது.  மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வந்தாறுமூலைக்கும், சித்தாண்டிக்கும் இடையில் மாவடிவேம்பு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 11

7 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே மட்டக்களப்பு பிரதேசத்தில் இனக்குழப்பங்கள் 20 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன உறவுகளைப் பாதித்த பல உள்ளூர் தமிழ் – சோனகக் கலவரங்கள் மற்றும் இடையூறுகள் ஆகியவற்றை பிரபலமான குறிப்புகள் விவரிக்கின்றன. உள்ளூர் தமிழ் – சோனக மோதல்களை நான் நேரடியாகக் காணவில்லை. என்றாலும், இதுபோன்ற மோதல்கள் பற்றிய வாய்வழிப் பதிவுகளை நான் சேகரித்தேன். இதற்கு உதாரணமான ஒரு […]

மேலும் பார்க்க

பெரும்படை என்னும் குலதெய்வம்

16 நிமிட வாசிப்பு

ஆதிகால மக்களின் நம்பிக்கைகளே சமயங்களாகப் பரிணமித்தன. மானுடர்களின் வாழ்வில் உருவான நம்பிக்கைகள் பல்வேறு நம்பிக்கைகளையும், கற்பனைகளையும், அச்சங்களையும் அவற்றினூடாகப் பல்வேறு ஐதிகக் கதைகளையும் புராணங்களையும் நீண்ட நெடுங்காலங்களுக்கு அளிக்கை செய்து வந்துள்ளன. அதன் வழி “ஓ! நம்பிக்கையே என்னை நம்பிக்கை உடையவனாக்கு” என இறைஞ்சுகின்ற நிலைக்கு மானுடரை உந்தித் தள்ளிற்று. அவை அகவியல், புறவியல் எனும் இரு தளங்களிலும் வாழ்வு முழுவதும் மானுடருடன் தொடர்ந்து பயணித்தன. அது இயற்கை வழிபாடு, […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 2

21 நிமிட வாசிப்பு

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் நாள் திருநெல்வேலியில் அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. அதற்கு முன்னரே 1974 இல் ஜூலை 10 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் இயங்கத் தலைப்பட்டுவிட்டதை அதன் முதலாம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கையின் கால எல்லைக் குறிப்பு தெரிவிக்கின்றது (இலங்கைப் பல்கலைக்கழகம் – யாழ்ப்பாண வளாகம் ஆண்டறிக்கை 1974.07.10 […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – சுண்டிக்குழி

10 நிமிட வாசிப்பு

சென்ற கட்டுரையில் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்தில் உள்ள விவரங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி யாழ்ப்பாண நகரத்தோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இன்னொரு கோவிற்பற்றான சுண்டிக்குழிக் கோவிற்பற்றைக் குறித்துப் பார்க்கலாம். இக் கோவிற்பற்றில் சுண்டிக்குழி, கரையூர், கொழும்புத்துறை, சிவியாதெரு, நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் ஆறு துணைப் பிரிவுகள் இருந்ததாக நிலப்படம் காட்டுகிறது. (படம்-1) இவற்றுள் கரையூர் தற்காலத்தில் குருநகர் எனவும், சிவியாதெரு இப்போது அரியாலை எனவும் அழைக்கப்படுகின்றன. நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் […]

மேலும் பார்க்க

வேலணை, சாட்டியில் பெருங்கற்காலப் பண்பாடு

7 நிமிட வாசிப்பு

அண்மைக்காலத்தில் வடஇலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள முக்கிய தொல்லியல் மையங்களில் தீவகத்தில் உள்ள சாட்டியும் ஒன்றாகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் வேலணைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இலங்கையின் வரலாற்றுப் பழைமை வாய்ந்த துறைமுகங்களைக் கொண்ட கிராமம் என்ற வகையில் சாட்டிக்குத் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. இதன் அமைவிடம் புவிச் சரிதவியல் அடிப்படையில் தமிழகத்திற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அமைந்திருப்பதால் இவ்விடம் பண்டுதொட்டு தென்னிந்தியாவுடனும், […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்