தமிழில் : த. சிவதாசன் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் புதிய பீடத் தலைவராக செப்டெம்பர் 2021 முதல் நியமனம் பெற்ற டாக்டர் ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன் (சுரேன்) அவர்களைச் சந்திக்கும்வரை சர்வதேசங்களுடனான ஊடாட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நான் அதிகம் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஒரு தொழில்துறையின் வெற்றிக்கு நிபுணத்துவம், அனுபவம், ஆராய்ச்சி, நிதியுதவி ஆகியன எவ்வளவு முக்கியமோ அதே போன்று கல்வித்துறையின் வெற்றிக்கும் அவை அவசியமானவை. தனது நண்பர்கள், சக பணியாளர்கள் என்ற […]
ஆனைக்கோட்டை முத்திரை தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகள் சிலவற்றில் முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்த சில எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்குப் புதிய வாசிப்பும், புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வந்திருப்பதைக் காணமுடிகின்றது. முத்திரையில் காணப்படும் எழுத்துக்களுக்கு அறிஞர்கள் வேறுபட்ட வாசிப்புக்களும், விளக்கங்களும் கொடுத்து வருவது அவர்களுக்குரிய சுதந்திரமாகவே நோக்கப்படும். ஆனால் அவற்றின் எழுத்துக்களை மாற்றிவிட்டு அதற்கு புதிய வாசிப்புகளும் விளக்கங்களும் கொடுப்பது திட்டமிட்ட வரலாற்றுத் திரிபாகவே பார்க்கப்படும். இத் தவறுகளை ஊடகங்கள் மூலம் […]
மே 2009 என்பது மிக முக்கியமான ஒரு காலப்புள்ளி; தமிழர்கள் எல்லோருக்கும். ஒரு யுத்த காலத்தின் முடிவையும், பல சகாப்தங்களாக யுத்தம் விதைத்த அளவிட முடியாத மொத்த அழிவுகளையும் கணக்கில் எடுக்கும் காலம்; பலருக்கு கனவுகளில் இருந்து விழித்தெழும் காலம். சிலருக்கு, எதிர்பார்க்காத ஒரு தோல்வியின் முழு வீச்சையும் ஆரத்தழுவி கால அசைவின் போக்கில் கரைந்து போகும் காலம்; அது முழு நம்பிக்கையும் புதைக்கப்பட்ட அசைவற்ற மனநிலை. ஆனால், கடந்த […]
ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா சாதி ஒதுக்குதலுக்கும் பாரபட்சம் காட்டுதலுக்கும் எதிரான சட்டப் பாதுகாப்பின்மை இலங்கையில் சாதி பாரபட்சம் காட்டுதலைத் தடுக்கக் கூடியதான அரசியல் யாப்புச் சட்டப் பாதுகாப்பின் போதாமை சுட்டிக் காட்டப்பட வேண்டியது. சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்கான நிறுவன ரீதியான தடைகளும் உள்ளன. இக் காரணங்களால் பொது வெளியில் கேள்விக்கு உட்படுத்தப்படாதனவான மறைமுகமான வெளித் தெரியாத காரணிகள் ஜனநாயக விலக்கலுக்குத் துணை புரிகின்றன. இலங்கையில் விளிம்பு […]
ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா விகிதாசாரத் தேர்தல் முறையும் சாதி வாக்குகளும் 1978 ஆம் ஆண்டின் அரசியல் திட்டம் முன்பிருந்த தேர்தல் முறையை மாற்றி விகிதாசார முறையைப் புகுத்தியது. முந்திய முறையில் பல வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடுவர். அவ் வேட்பாளர்களுள் ஆகக் கூடிய வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராகத் தெரிவு செய்யப்படுவார். இதனை ‘FIRST-PAST–THE-POST’ தேர்தல் முறைமை என அழைப்பர். முன்னைய முறையில் தேர்தல் தொகுதி […]
பௌத்தமும் சமணமும் தென்னகம் வருதலுக்கு முன்பே பண்டைத் தமிழகத்திலும் ஈழத்திலும் தழைத் தோங்கிய மெய்யியற் சமய மரபாக விளங்கியது ஆசீவகம் ஆகும். தேவனாம்பிரிய திசையன் என்னும் மன்னனுக்கு முன்பு இலங்கையை ஆண்ட மன்னர்களில் பலர் ஆசீவக சமய மரபினைப் பின்பற்றியவர்களே என்பதற்கான சான்றுகள் மகாவம்சத்தில் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் ஆசீவகக் கருத்தியலை உடையனவாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் முதல் முறையாக ‘அண்ணலாம் பெருந்தவத்து ஆசீவகர்கள்’ என ஆசீவகர்களின் பெயர் […]
தொடக்கக் குறிப்புகள் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் இன முரண்பாட்டின் கதையாடலில் சில முக்கியமான வரலாற்றுப் புள்ளிகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறுபட்ட விளைவுகளையும் உரையாடல்களையும் ஏற்படுத்தின. அவ்வாறான ஒரு வரலாற்றுப் புள்ளியே சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையில் தேசத்தின் பிதா என்று அழைக்கப்படும் டி.எஸ். சேனநாயக்கவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள். இவை அபிவிருத்தியின் பெயரால் முன்னெடுக்கப்பட்டன. நெற்பயிர்ச் செய்கையை அதிகரிப்பது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது, நிலமற்ற மக்களுக்கு நிலத்தை […]
ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா இலங்கையில் காலனிய காலத்தில் முதலாளித்துவம் மேலாண்மையுடைய முறையாக வளர்ச்சியுற்ற போதும் நிலமானிய உறவுகளை அது முற்றாக அழிக்கவில்லை. முதலாளித்துவத்திற்கு முந்திய நிலமானிய சமூக உறவுகளின் இயல்புகள் (PRE-CAPITALIST CHARACTERISTICS) தொடர்ந்து நீடித்தன. நிலமானிய சமூகம் சாதியை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவ வளர்ச்சியுடன் வர்க்கங்கள் தோற்றம் பெற்றன. இலங்கையில் சிங்கள சமூகத்தில் சாதியும் வர்க்கமும் ஒரு சேரக் கலப்புற்று இருப்பதைக் காண முடிகிறது. […]
உலக நாடுகளின் எதிரி சீனா என அடையாளம் காட்டி அனைத்துத் தேசங்களும் அதனை நிராகரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த ஐக்கிய அமெரிக்கா அண்மையில் மக்கள் சீன ஜனாதிபதியைத் அதனது மண்ணுக்கே வரவேற்று உரையாட வேண்டி இருந்தது. காலனித்துவ ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்து ‘உலகின் நோய்’ என்ற அடையாளத்தை இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறு வரை பெற்றிருந்த சீன தேசம் இன்று ‘உலகின் முதல் நிலை வல்லரசு’ எனும் அந்தஸ்துடன் திகழும் மேலாதிக்கவாத […]
இலங்கை, பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றது. 1956 தனிச் சிங்களச் சட்டம், இன்னொரு இனத்தின், மொழியின் மீதான வெறுப்பிற்கான மிகச் சிறந்த உதாரணமாகும். அதன் நீட்சியாக 1956, 1958 இல் தமிழர் மீதான படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஒரு சிறிய தீவு நாட்டின் அனைத்து இனங்களையும், அவர்களின் மொழி, கலாசாரங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பது அரச அதிகாரத்தை எடுத்துக் கொண்டவர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான், பின்னரான […]