Blogs - Ezhuna | எழுநா

ஐ.நா இனப்படுகொலை நியதிச்சட்டத்தின் 75 வருடங்கள் : நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுவடியகங்கள்

18 நிமிட வாசிப்பு | 6539 பார்வைகள்

அநேக பெயர்களுள்அவனது பெயரை மறந்துவிடுவோம் என அஞ்சுகிறேன்அவனை மறக்க நான் அஞ்சுகிறேன்மாரி மழையிலும், புயலிலும்எம் இதயக் காயங்கள் ஆறக்கூடும்என நான் அஞ்சுகிறேன்… – மஹவுட் தர்வீஷ் (பலஸ்தீனம்) – “இனப்படுகொலை என்பது பாரிய எண்ணிக்கையிலான கொலைகளை மட்டும் குறிப்பதல்ல; திட்டமிடப்பட்ட வகையில் சுவடிக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் கல்லறைகள் உட்பட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படுகொலைதான்.” – சேராபிம் […]

மேலும் பார்க்க

மெய்யியல் மரபு : ஆசீவகம்

15 நிமிட வாசிப்பு | 12727 பார்வைகள்

தெற்காசிய மரபிற் தோன்றிய மெய்யியல் மரபுகளையும், பிறபகுதிகளிற் தோன்றி இந்தியத்துணைக் கண்டத்திற் பரவிய மெய்யியல் மரபுகளையும், தன்னகத்தே உருவான மெய்யியல் மரபுகளையும் ஆவணமாக்கி வைத்துள்ள ஒரே தெற்காசிய மொழி தமிழ் என்பதில் யாதொரு ஐயப்பாடும் எழுதலுக்கு வாய்ப்பில்லை. தமிழ்மொழி, நீண்ட வலாற்றுத் தொடர்பையும் சமயநிலைப் பயன்பாடு மற்றும் அறிவுப்புலத் தொடர்பையும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டே பெற்றுவந்துள்ளமையால் அதுவொரு மெய்யியல்தளமாக அமைந்துள்ளது எனலாம். அவ்வாறான மெய்யியற் கருத்துக்களின் தாக்கம் இன்றளவும் தமிழ் […]

மேலும் பார்க்க

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 3

21 நிமிட வாசிப்பு | 9971 பார்வைகள்

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல இலவசக் கல்வித் திட்டமும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர்களும் இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தோன்றிய கிராமப்புறத்தின் படித்த இளைஞர்களே, மக்கள் விடுதலை முன்னணியினைத் தோற்றுவித்தவர்கள் என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தொடர்பைச் சுட்டிக் காட்டியவர்கள் கல்வித் துறையில் ஏற்பட்ட இம்மாற்றங்களின் முக்கியத்துவத்தை சமூக வரலாற்று நோக்கு முறையில் விளக்குவதற்குத் தவறியுள்ளனர். இலங்கையில் கல்வி பரவலாக விரிவாக்கம் பெற்றமை […]

மேலும் பார்க்க

வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்

12 நிமிட வாசிப்பு | 7904 பார்வைகள்

வடக்குப் பிராந்தியத்தின் புவியியல் அமைவிடம் அதன் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றது. அந்த வகையில் பின்வரும் காரணிகள் வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றன.   1. தீபகற்ப தோற்றப்பாடு : வடக்குப் பகுதி மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் அரபிக் கடல் உள்ளது. வடக்கு எல்லை பாக்கு ஜலசந்தி, கிழக்கு எல்லை வங்காள விரிகுடாவாக உள்ளது. வடக்கு மாகாணத்தின் தீபகற்ப நிலவமைப்பு காரணமாக வடக்கு பிராந்தியத்தின் வளி வெப்பநிலை, கடல் நீரின் அருகாமையால் […]

மேலும் பார்க்க

கீழைக்கரையின் முதல் அரசு : பத்து உடன்பிறந்தோர் குலம்!

14 நிமிட வாசிப்பு | 8905 பார்வைகள்

ஒரு சமூகத்தில் உற்பத்தியும் செல்வமும் உபரியாகின்ற போது அந்த சமூகத்தில் அதிக செல்வத்தை வைத்திருக்கின்ற தனிநபர்கள் செல்வாக்குப் பெற்று ஆதிக்க வர்க்கமாக உருவெடுக்கிறார்கள். அப்படி ஆதிகாலத்தில் தோன்றிய முதல் செல்வாக்கான நபர்களிலிருந்தே நிலக்கிழார்களும் பின் அரசர்களும் தோன்றினார்கள் என்பதை போன அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி இலங்கையின் வடபாதியில் தோன்றிய தொல்லரசு அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டிருந்தது என்பதையும் அந்த முதல் அரசை உருவாக்கிய மூதாதையராக விசயன் என்ற இலாட நாட்டினன், சிங்களன் […]

மேலும் பார்க்க

சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்

20 நிமிட வாசிப்பு | 7761 பார்வைகள்

தமிழ் மக்களாக இயங்கும் எமது வாழ்வியலில் அடித்தளமாக அமைந்து தாக்கம் செலுத்தி வருகின்ற பணபாட்டுக் கோலங்களின் தொடக்கம் – மாற்றங்கள் – விருத்திகள் என்பவற்றை இந்தத் தொடரில் பார்த்து வருகின்றோம். ஏற்பட்டிருக்கும் ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டுமாயின் அதன் தொடக்கம் – ஊடுபாவு – முடிவிடம் என்பவை கண்டறியப்படுதல் அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட முடிச்சுகள் உள்ள நிலையில் அடிப்படையான மூலத்தை அவிழ்ப்பதனூடாக ஏனையவற்றையும் மீட்டெடுக்கும் இலகு வழியைக் கண்டடைவோம். எமக்கான […]

மேலும் பார்க்க

கறவை மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சி குறித்த அறிவூட்டலும் தடுப்பு நடவடிக்கைகளும்

14 நிமிட வாசிப்பு | 9074 பார்வைகள்

கோடை காலத்தில் கறவை மாடுகள் பல்வேறு அசெளகரியங்களைச் சந்திக்கின்றன. இந்த நாட்களில் ஏற்படும் அதிகரித்த வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஏற்படும் நீர் மற்றும் தீவனத்தின் பற்றாக்குறை கால்நடைகளின் வழமையான உடலியல்  தொழிற்பாடுகளை கடுமையாகப் பாதிக்கின்றன. இவற்றின் காரணமாக பால் உற்பத்தி குறைதல், இனப்பெருக்க ஆற்றல் குறைதல், உடல் எடை குறைதல் போன்ற துர் விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் இவற்றை நம்பி வாழும் பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்திக்கின்றனர். […]

மேலும் பார்க்க

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 2

18 நிமிட வாசிப்பு | 8242 பார்வைகள்

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல கிராமத்துத் தொழிலாளர்களையும் விவசாயக் குடியான்களையும் விட உயர் வருமானத்தைப் பெறும் வர்க்கமான கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், நகரத் தொழிலாளர் வர்க்கத்தோடு கொண்டுள்ள பிணைப்புகள் கிராம, நகர உறவுகளில் முக்கியத்துவம் பெற்றன. கிராமத்தில் சொத்துக்களை வைத்துக் கொண்டு நகரத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு நிலை மட்டுப்பாடுடையதாக விளங்கியது. இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியினர் குட்டி முதலாளித்துவ உணர்வு நிலையை உடையவர்களாகக் […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 4

13 நிமிட வாசிப்பு | 9386 பார்வைகள்

இருபதாம் நூற்றாண்டில் சோனக இனத்துவ அரசியல்  நவீன காலத்தில், கேரளா மற்றும் தமிழக முஸ்லிம்கள் – அவர்களுக்கிடையில் கலாச்சார பன்முகத்தன்மை, உள்ளக சமூகப் பிரிவுகள் இருந்தபோதிலும் – தாங்கள் ‘யார்’ என்பதில் ஒரு நியாயமான பாதுகாப்பு சார்ந்த அச்சத்தை உணர்ந்தனர். இதற்கு மாறாக, இலங்கைச் சோனகரின் முன்னணி சமூகத் தலைமைகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, அவர்களின் உயிரியல் – கலாசாரத் தோற்றம் மற்றும் வளர்ந்து வரும் இனக்குழும […]

மேலும் பார்க்க

புதிய வேலை உலகும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவும் (Generative AI)

12 நிமிட வாசிப்பு | 11804 பார்வைகள்

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச்சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு”-திருக்குறள் 358- மு.வரதராசனார் விளக்கம் : பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. இன்றைய உலகில் தொழில்நுட்ப மாற்றங்கள் மிகவும் துரிதப்பட்டுக்கொண்டு வருகின்றது. முதலாவது தொழில்துறை புரட்சி (Industrial Revolution) 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1900ம் ஆண்டுகளின் முற்பகுதிகளிலும் தொடங்கி உலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. 1900ம் ஆண்டுகளின் பின் பகுதிகளில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)