Blogs - Ezhuna | எழுநா

பனிக்கன்குளக் காட்டுப் பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

6 நிமிட வாசிப்பு | 8177 பார்வைகள்

கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்துக் கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கற்கால மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற் கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பனிக்கன்குளத்தில்  வாழ்ந்து வரும் திரு. கஜன், திரு. ஜெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய  கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தனர். இக்கருங்கலின்  வடிவமைப்பும் அதன் […]

மேலும் பார்க்க

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 2

16 நிமிட வாசிப்பு | 7137 பார்வைகள்

ஆங்கில மூலம் : ஜோர்ஜ் மத்தியு அண்மைக்கால அரசியல் இயங்கியலும் போக்குகளும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்மையும் பேணுதல் முதன்மையான பணியாக இருந்தது. இந்திய அரசியல் யாப்பு இந்திய ஐக்கியத்திற்கான ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்குமான ஒரே சீரான நிர்வாகத்தை செயற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நிர்வாகம், தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நிறுவனங்கள் ஊடாக நடத்தப்படுதல் வேண்டும். இந்நிறுவனங்கள் […]

மேலும் பார்க்க

இந்து மதத்தின் உச்ச வடிவம்

15 நிமிட வாசிப்பு | 7111 பார்வைகள்

‘தமிழ்ப் பண்பாடு : ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ என்ற தேடலின் இரண்டாம் பகுதியான ‘சாதிய வாழ்வியல்’ தோற்றம் பெற்று வளர்ந்தவாறினைக் கடந்த எட்டு இயல்களில் கண்டு வந்துள்ளோம். ஏனைய சமூகங்களில் ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமை ஏற்பட்ட பின்னர் சாத்தியப்பட்டு இருந்த பண்பாட்டு விருத்தியைத் தமிழகம் அதனது வேறுபட்ட புவிச் சூழல்கள் (திணைகள்) வழங்கிய வாய்ப்பில் சமத்துவத்தை உள்ளும் புறமும் பேணியபடியே எட்ட இருந்த பிரத்தியேகக் குணாம்சங்களை முதல் பகுதியில் பேசியிருந்தோம். விவசாயப் […]

மேலும் பார்க்க

இந்தியக் குடியரசின் அரசியல் யாப்பு – பகுதி 1

15 நிமிட வாசிப்பு | 7644 பார்வைகள்

ஆங்கில மூலம்: ஜோர்ஜ் மத்தியு சமஷ்டி முறையின் வரலாறும் வளர்ச்சியும் இந்தியா 3.287 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை உடைய நாடு. இங்கு 1.098 பில்லியன் மக்கள் (2002) வாழ்கிறார்கள். இனத்துவ பன்மைத்துவமுடைய இப் பரந்த தேசத்தில் பல்வேறு இனத்துவக் குழுமங்களும், மொழிகளும், பண்பாடுகளும் காணப்படுகின்றன. இந்தியாவில் 28 மாநில அரசுகளும் 7 ஒன்றியப் பிரதேசங்களும் (Union Territories) உள்ளன (2002). ஒன்றியப் பிரதேசம் என்பதில் தேசியத் தலைநகரான […]

மேலும் பார்க்க

கீழைக்கரையில் நாகரும் அனுரை அரசரும்

12 நிமிட வாசிப்பு | 9984 பார்வைகள்

கீழைக்கரையில் நாகர் “கலி கடந்து எண்ணூறு ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நாகர் இயக்கரோடு கலந்து ஓரினமானார்கள். அவர்கள் தனி இனமாக பல்வேறு நகரங்களை ஆளலாயினர். அவர்களது முதன்மை நகராக உகந்தம் எனும் நகர் விளங்கியது.” என்று ஆரம்பிக்கின்றது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். இலங்கையில் வாழ்ந்த நாகர் எனும் இனம் இயக்கர் என்னும் இன்னொரு குலத்தை வென்று கலந்ததும், அவர்கள் உகந்தையை அரசிருக்கையாக்கியமையையும் சொல்லும் பாடல் இது. நாகபாம்பை குலக்குறியாகக் கொண்டிருந்தோர் […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 3

10 நிமிட வாசிப்பு | 8190 பார்வைகள்

ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே இலங்கையில், மரைக்காயர் எனும் சொல் பெரும்பாலும் மரைக்கார் (மரிக்கார், மார்க்கார், முதலியன) என வழங்கப்படுகிறது. இது முன்னணி சோனகக் குடும்பப் பெயர்களிலும், பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருக்கு (அதாவது உள்ளூர் சோனக சமூகத்தின் தலைவர்) வழக்கமாக வழங்கப்படும் பெயராகவும் விளங்குகிறது (அலி 1981a; மஹ்ரூஃப் 1986a; மெக்கில்ரே 1974). தென் தமிழ்நாட்டின் மரக்காயர் நகரங்களுக்கும் இலங்கைச் சோனக குடியேற்றங்களுக்கும் இடையிலான வணிக, கலாச்சார […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 8

11 நிமிட வாசிப்பு | 7098 பார்வைகள்

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால நூலகங்கள் பற்றிய இக்கட்டுரைத் தொடரில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் வேளை ‘01.08.1934 முதல் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு சிறிய வாடகை வீட்டில் படிப்பகமும் நூலகமும் செயற்படத் தொடங்கின’ என்று அறிந்துகொண்டோம். ஆயின், இதுவே யாழ்ப்பாணத்தின் முதலாவது நூலகம் அல்லது முதலாவது பொதுசன நூலகம் என்ற பிம்பம் நீண்டகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளது. இது தவறானதாகும். யாழ்ப்பாணப் பொது நூலகம் வேரூன்றிய காலத்திலும் அதற்கு முன்னரும் […]

மேலும் பார்க்க

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு | 9217 பார்வைகள்

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன 1956 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றி பண்டாரநாயக்கவிற்கு நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பண்டாரநாயக்க செய்ய வேண்டிய சட்டப்படி நியாயமான (Legitimate) கடமைகள் பல இருந்தன. இவை அவசியமான கடமைகள் ஆகவும் இருந்தன. அவற்றைச் செய்யாமல் அப் பதவிக்குரிய பொறுப்புகளை அலட்சியமாகப் புறந்தள்ளும் அவரது நடத்தை மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின. நாம் இங்கு ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க வேண்டியதில்லை. […]

மேலும் பார்க்க

பசுமை என்ற எண்ணக்கரு: நல்லுணர்வா? கொடுங்கனவா?

10 நிமிட வாசிப்பு | 13806 பார்வைகள்

தொடக்கக் குறிப்புகள் காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நாம் வாழும் சூழல் குறித்து நாம் கவனங்கொள்ள வைத்துள்ளது. நகரமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், தூய்மையான வாழிடம் குறித்து எல்லோரும் அக்கறை செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இப்பின்புலத்தில் பசுமை என்ற எண்ணக்கரு தவிர்க்கவியலாத ஒன்றாக முன்னிலையடைந்துள்ளது. பசுமைக்கு மாறுதல் (Going Green) என்பது இன்று அநேகமான அனைவரதும் தாரக மந்திரமாகவுள்ளது. வேலைத்தலங்களில், பாடசாலைகளில், […]

மேலும் பார்க்க

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 2

12 நிமிட வாசிப்பு | 7280 பார்வைகள்

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் தொடர்பான அசமத்துவம், இந்திய சமஷ்டியின் நான்காவது அசமத்துவம் எனலாம் (உறுப்புரை 370, 371 A, 371 G). இவற்றுள் ஜம்மு காஷ்மீர் ஆகக்கூடிய அசமத்துவம் கொண்ட பகுதியாக இருந்து வந்துள்ளது (அண்மையில் ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது – மொ-ர்). இந்தியாவின் அரசியல் யாப்பின் உறுப்புரை 370 ‘தற்காலிக ஏற்பாடுகள்’ (Temporary Provisions) எனக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)