ஆங்கில மூலம் : ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளன் என்ற தமிழ் அரசனைப் பற்றி ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீபவம்சம்’ என்னும் பாளி நூல் “ஆசை, குரோதம், அச்சம், தற்பெருமை ஆகிய மாயைகள் சூழ்ந்த வழிகளில் தன் மனதைச் செலுத்தாமல் அறவழி நின்று செங்கோல் ஓச்சினான்” என்று புகழ்ந்துரைக்கிறது. அம் மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு, மன்னன் எல்லாளன் வீழ்த்தப்பட்ட இடத்தில் […]
மலையக தமிழ் மக்கள் ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையை மாற்ற எத்தனையோ போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள், சாத்வீக சத்தியா கிரகங்கள் என்பவற்றையெல்லாம் மேற்கொண்டு அரசாங்கத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர். அடுத்தடுத்து பதவி வகித்த இனவாத அரசாங்கங்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அங்குலம் கூட இறங்கிவர தயாராக இருக்கவில்லை. நாட்டின் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தங்களது தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு பிரதேசத்தை ஒரு சுயாட்சியுடன் கூடிய […]
நன்னீர் நிலைகளின் பல்வகைமையும் அபிவிருத்தியும் வளமுள்ள நிலங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்கள் வெவ்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு உட்படுகின்றன. அவ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே அபிவிருத்தியும் நடந்தேறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கானது இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்கும் பிரதேசங்களாகும். மேடுபள்ளம் அதிகமுள்ள தரைத்தோற்றமாகையால் இப் பகுதியில் நடாத்தக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் இலகுவில் முன்னெடுக்கப்படக்கூடியவை. பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டமையால், இப் பாதைகளிலிருந்து எய்தக்கூடிய போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலும் […]
அண்மையில் இணையவழி ஊடகமொன்றில் சாவகச்சேரி பகுதியில் உள்ள கறவை மாட்டுப் பண்ணை தொடர்பான காணொளியை காணமுடிந்தது. 34 கலப்பின மாடுகளைக் கொண்ட அந்தப் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களை ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் செய்திருந்தார்கள். அங்குள்ள மாடுகள் உணவின்றி மெலிந்து போயிருந்தன. சிலது இறந்துமிருப்பதாக அந்தப் பண்ணையின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இந்தக் கட்டுரை இது தொடர்பானதே. ஒரு நாணயத்தின் இரு பக்கமாக உரிமையாளரின் ஊதாசீனத்தையும் ஊழியர்களின் நிலையையும் ஆராயப் போகிறேன். எங்களது தொடருக்கு […]
‘பண்பாட்டு ஏகாதிபத்தியமாகப் பிராமணியம்’ கட்டமைத்துள்ள சமூக முறைமைக்குள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இயங்கிக்கொண்டு வருகிறோம் எனச் சில சமூகவியலாளர்கள் வலியுறுத்துவர். ஏகாதிபத்தியம் எனும் வரலாற்றுக் கட்டம் இருபதாம் நூற்றாண்டில் இருந்து இயங்கி வருகிற ஒன்று. முன்னதாக இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஐந்து நூற்றாண்டுகளாக இலங்கையும் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்டதுண்டு. பிராமணிய மேலாதிக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிற ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஏகாதிபத்திய அமைப்பு மேற்கொள்வதைப்போல ‘ஏகபோக மூலதனத்தை’ பிற திணைகள் […]
தமிழில் : த. சிவதாசன் கமில்டன் ஆறுமுகம், லீக்க ஷ்றோடருடனான எனது சந்திப்பு தவறுதலாகவே நிகழ்ந்தது. ஒரு குறிக்கப்பட்ட வேலைத்திட்டமொன்றில் எங்கள் இருவருக்கும் ஆர்வம் இருக்கலாமெனக் கருதிய பொதுவான நண்பரொருவர் ஏற்பாடு செய்ததன்படி எனது அலுவலகத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. உண்மையில் நண்பர் கருதிய அவ்வேலைத்திட்ட விடயத்தில் எங்களுக்குள் எதுவித பொதுமையும் இருக்கவில்லை. ஆனாலும் அது ஒரு அதிர்ஷ்டவசமான தவறாக அமைந்துவிட்டது. இதன் மூலம் நான் இரண்டு அரிதான மனிதர்களைச் […]
17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணக் கட்டளையகத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படங்கள் கிடைக்கின்றன. 1698 ஆம் ஆண்டில் யான் கிறிஸ்டியாஸ் தூர்சி (Jan Christiaensz Toorsee) என்பவர் வரைந்த ‘யாழ்ப்பாணப் பட்டினத்தினதும் வன்னியினதும் நிலப்படம்’ என்று தலைப்பிட்ட நிலப்படம் ஒன்று நெதர்லாந்திலுள்ள மொழியியல், புவியியல், இனவியல் என்பவற்றுக்கான அரச நிறுவனத்தில் (Koninklijk Instituut voor taal-, Land- en Volkenkunde) உள்ளது.1 இந்நிலப்படத்தில் உள்ள தகவலின்படி ஏற்கெனவே 1679 […]
ஆங்கில மூலம் : யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER) அசமத்துவம் சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பு அசமத்துவ கட்டமைப்பை (சில கன்டன்களுக்கு கூடிய சுயாட்சியும் வேறு சிலவற்றுக்கு குறைந்த சுயாட்சியும்) உள்ளார்ந்த இயல்பாகக் கொண்டதன்று. ஆயினும் அச் சமஷ்டிச் செயற்பாட்டின் ஊடாக அசமத்துவ அம்சங்கள் வெளிப்பட்டுத் தெரிகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது? கன்டன்கள் மிகுந்த சுயாட்சி உரிமையுடையவையாதலால் தமது நிறுவனங்களை தாமே சுதந்திரமான முறையில் அமைத்துக்கொள்கின்றன. இவ்வாறான சுதந்திரம் கன்டன்களுக்கிடையே அசமத்துவத்தை […]
சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வுக் கட்டுரைகளின் உள்ளடக்கம் இந்த ஆய்வுத் தொகுப்பின் கோட்பாட்டு ரீதியான அடிப்படை என்பது டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பவையாகும். சிறுபான்மையினர், டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பன தொடர்பான பெரும்பாலான கல்வியியல் ஆய்வுகள் பெரும்பான்மை நோக்குநிலையில் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகளில் சிறுபான்மை நோக்குநிலை ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே இவ்வாய்வின் முதன்மையான தனித்துவம். நாடு கடந்த வாழ்வியலின் பல்பரிமாணங்களைக் கொண்ட யதார்த்தங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வு ஆறு ஆய்வுக் […]