Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

‘இலங்கையின் போரும் சமாதானமும்’ : நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள் – நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதிய நூல் – பகுதி 1

25 நிமிட வாசிப்பு

இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன.  நூலாசிரியர்: ஒய்வின்ட் புக்லறூட் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 2

16 நிமிட வாசிப்பு

இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையில் மேற்படி நிலப்படத்தில் வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோட்டைகளும் நகரங்களும் இந்த நிலப்படத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பெஸ்ச்சூட்டர் கோட்டை, பைல் கோட்டை என்பவற்றையும்; தீவுப் பகுதியில் ஊர்காவற்றுறைக் கடற் கோட்டையையும்; தலை நிலத்தில் பூநகரிக் […]

மேலும் பார்க்க

பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன்

18 நிமிட வாசிப்பு

கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. […]

மேலும் பார்க்க

நான்காம் வருடத்தைப் பூர்த்திசெய்யும் வட தொழில்நுட்ப நிறுவனம் (Northern Technical Institute)

16 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் இலங்கை பூராகவும் உள்ள இளைய தலைமுறையினர் உகந்த வேலையைப் பெறுவதில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரப்படி, 15 முதல் 19 வயது வரையுள்ள இளையவர்களில் 4 பேர்களில் ஒருவர் வேலையைப் பெறமுடியாது அவஸ்தைப்படுகின்றார். 20 முதல் 29 வயதுள்ளவர்களில் 7 பேர்களில் ஒருவருக்கு வேலை கிடைப்பது அரிது. ஒருவர் வேலை தேடி, அது கிடைக்காதபோது அவர் வேலையற்றவர் (unemployed) என்ற அந்தஸ்தைப் […]

மேலும் பார்க்க

இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சியும் மாற்றமும் 1750-1900 : கித்சிறி மலல்கொடவின் நூல் பற்றிய அறிமுகம்

17 நிமிட வாசிப்பு

இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY  1750 […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண இராசதானிக் காலத்திற்குப் புதிய அடையாளம் : அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொன், வெள்ளி நாணயங்கள்

11 நிமிட வாசிப்பு

இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாவது அரசாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு காணப்படுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சியில் இருந்த இவ்வரசின் ஆதிக்கத்துக்குள் வடஇலங்கையும் கிழக்கிலங்கையின் சில பாகங்களும், சில சந்தர்ப்பங்களில் தென்னிலங்கையும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறு ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவ்வரசின் வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் ஒன்றாக  அவ்வரசு காலத்தில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 10

16 நிமிட வாசிப்பு

காரைநகர்ச் சைவமகாசபை நூல்நிலையம் காரைநகர்ச் சைவமகாசபை பொன்விழா மலர் 1967 இல் வெளிவந்தது. இம்மலராசிரியராக வைத்தீஸ்வரக் குருக்கள் சிறப்புறப் பணியாற்றி சைவமகாசபையின் வரலாற்றை முடிந்தவரை பதிவுசெய்ய முயன்றுள்ளார்.   அவரது குறிப்புகளின்படி காரைநகர்ச் சைவமகாசபை 1926 ஆம் ஆண்டிலேயே  347 தமிழ்ப் புத்தகங்களும் 279 ஆங்கிலப் புத்தகங்களும் கொண்டதொரு நூலகத்தை தன்னகத்தே கொண்டிருந்துள்ளதென்ற செய்தியை அறியமுடிகின்றது. அந்த ஆண்டில் மாத்திரம் 126 புதிய புத்தகங்கள் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனவென்ற செய்தியும் காணக்கிடைக்கின்றது. 13 […]

மேலும் பார்க்க

3AxisLabs : யாழ். தகவல் தொழில்நுட்பச் சமூகத்திற்கு மேலுமொரு வருகை

15 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பம் செழித்தோங்குவதற்கு, Yarl IT Hub எனும் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் The Yarl Geek Challenge (YGC) எனப்படும் போட்டி நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகும். இந் நிகழ்வு இலங்கை முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நூற்றுக்கணக்கான அறிவுடையோரை உருவாக்கித் தந்ததுடன் இத் துறையில் பிரபலமான பல நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது. இதில் உள்ள விசேடம் என்னவென்றால் YGC தனியே தமது […]

மேலும் பார்க்க

வடக்குப் பிராந்தியத்தின் மழை வீழ்ச்சி அளவீட்டு முறைகளும் வானிலை அவதான நிலையங்களும்

13 நிமிட வாசிப்பு

வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய முறையிலான மழை வீழ்ச்சி அவதானிப்பு முறைகள் வடக்கு மாகாண மக்கள் மிக நீண்ட காலமாக மழை வீழ்ச்சி அவதானிப்பிற்கு என்று பல்வேறு வகைப்பட்ட உத்திகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வடக்கு மாகாண மக்கள் பல்வேறு வகையிலான கருவிகளைப் பயன்படுத்தி அவதானிப்புகளை மேற்கொண்டு இருப்பதை அறிய முடிகின்றது. அவர்கள் பின்வரும் கருவிகளைப் பயன்படுத்தி மழை வீழ்ச்சி அவதானிப்புகளை மேற்கொண்டு உள்ளார்கள். மரக்கால் மரக்கால் என்பது மிக […]

மேலும் பார்க்க

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 4

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் குற்றவியல் நீதி விசாரணை ஆணைக்குழு (CRIMINAL JUSTICE COMMISSION – சுருக்க எழுத்து : CJC) முன்னிலையில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர். அவ்வாணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த ரோஹண விஜயவீர தமது கட்சி ஏன் புதிய இடதுசாரி இயக்கம் (NEW LEFT MOVEMENT) ஒன்றை ஆரம்பித்தது என்பதற்கான விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டார்.  “பழைய இடதுசாரி இயக்கம் சோஷலிசப் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்