Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை – பகுதி 3

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER) அசமத்துவம் சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பு அசமத்துவ கட்டமைப்பை (சில கன்டன்களுக்கு கூடிய சுயாட்சியும் வேறு சிலவற்றுக்கு குறைந்த சுயாட்சியும்) உள்ளார்ந்த இயல்பாகக் கொண்டதன்று. ஆயினும் அச் சமஷ்டிச் செயற்பாட்டின் ஊடாக அசமத்துவ அம்சங்கள் வெளிப்பட்டுத் தெரிகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது? கன்டன்கள் மிகுந்த சுயாட்சி உரிமையுடையவையாதலால் தமது நிறுவனங்களை தாமே சுதந்திரமான முறையில் அமைத்துக்கொள்கின்றன. இவ்வாறான சுதந்திரம் கன்டன்களுக்கிடையே அசமத்துவத்தை […]

மேலும் பார்க்க

போரினால் புலம்பெயர்ந்த சமூகங்களின் தாயகத்துடனான உறவு : பணம் அனுப்புதலும் பண்பாட்டு நடைமுறைகளும் – பகுதி 2

35 நிமிட வாசிப்பு

சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வுக் கட்டுரைகளின் உள்ளடக்கம் இந்த ஆய்வுத் தொகுப்பின் கோட்பாட்டு ரீதியான அடிப்படை என்பது டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பவையாகும். சிறுபான்மையினர், டயஸ்போறா, நாடுகடந்த வாழ்வியல் என்பன தொடர்பான பெரும்பாலான கல்வியியல் ஆய்வுகள் பெரும்பான்மை நோக்குநிலையில் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகளில் சிறுபான்மை நோக்குநிலை ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே இவ்வாய்வின் முதன்மையான தனித்துவம். நாடு கடந்த வாழ்வியலின் பல்பரிமாணங்களைக் கொண்ட யதார்த்தங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  சர்வேந்திராவின் கலாநிதி ஆய்வு ஆறு ஆய்வுக் […]

மேலும் பார்க்க

உணவுத் தேவையில் தன்நிறைவு நோக்கிய பயணம்

12 நிமிட வாசிப்பு

தமிழில் : த. சிவதாசன் 2003 இல் தனது முதலாவது தொழிலை ஆரம்பிக்கும்போது கே. சுகந்தனுக்கு 21 வயது மட்டுமே. தோல்விகண்ட சமாதான ஒப்பந்தத்தின் மத்தியில் (2002-2006) இலங்கையின் இனப்போர் புழுங்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அவர் தனது சிறு கடையை ஆரம்பித்தார். நெருக்கமான கடைகளுக்கும் தெருவோர சாவடிகளுக்கும் பெயர்போன புறக்கோட்டைத் தெருவொன்றில் சமையலுக்குப் பாவிக்கும் பலவகை எண்ணைகளை விற்பதே அவரது தொழில். இன்று வரை அது சிறப்பாக […]

மேலும் பார்க்க

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையாவின் தேரவாத பௌத்தம் குறித்த ஆய்வுகள்

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையில் பிறந்தவரான தம்பையா இலங்கைப் பல்கலைக்கழகம், கொர்ணல், ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை விரிவுரையாளராக 1960 களில் கடமையாற்றினர். 1980 – 83 காலப்பகுதியில் ‘யுனெஸ்கோ’விலும் அதன் பின்னர் கேம்பிரிட்ஜ், சிக்காக்கோ, ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கடமையாற்றினார். உலக அளவில் செல்வாக்குள்ள கோட்பாட்டாளரும் தேரவாத பௌத்தம் […]

மேலும் பார்க்க

இரு தலைமுறை இரு உலகம் : எதிர்நோக்கும் சவால்கள்

13 நிமிட வாசிப்பு

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது”-திருக்குறள்- சாலமன் பாப்பையா விளக்கம்: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது. எமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கை, நாம் வாழ்ந்த வாழ்க்கையிலும் மிக வித்தியாசமானது. ஈழத்தில் வாழும் தமிழ்ச் சொந்தங்களானாலும் புலம்பெயர்ந்து வாழும் எம்மைப் போன்றவர்களானாலும், அவர்களது அடுத்த தலைமுறையுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஏராளம். இதற்கு சுற்றுச் […]

மேலும் பார்க்க

வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீன்பிடித் தொழிற்துறையின் வளங்களும் வாய்ப்புகளும்

11 நிமிட வாசிப்பு

இலங்கை நாட்டினுடைய 63 சதவீதமான கடற்கரைகளை கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் வட மாகாணத்தில் 40 சதவீதமான கடற்கரைகளும் கிழக்கு மாகாணத்தில் 23 சதவீதமான கடற்கரைகளும் காணப்படுகின்றன. இவ்விரு மாகாணங்களும் மிகச் சிறந்த மீன்பிடி வளத்தை கொண்ட கடல்பரப்பை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இக்கடற்கரைகள் மீன்பிடி, மீன் வளர்ப்பு, சுற்றுலா ஆகியவற்றுக்கு பொருத்தமாக உள்ளன. மீன்பிடித் தொழிலானது இவ்விரு மாகாணங்களிலும் விவசாயத்துறைக்கு அடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் துறையாகும். நாட்டின் மொத்த […]

மேலும் பார்க்க

கறுப்பு ஜுலையும் மலையகமும்

8 நிமிட வாசிப்பு

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து படிப்படியாக உரிமைகளை இழந்த மலையக தமிழ் மக்கள், 1977 ஆம் ஆண்டை தொடர்ந்து வந்த  தசாப்தத்திலேயே தமது சமூக,  அரசியல், பொருளாதார உரிமைகளை பறித்த அதே ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து தமது உரிமைகளை படிப்படியாகப் பெற ஆரம்பித்தனர். ஆனால் அரசியல் வரலாறு அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு முறை திசை திரும்பியது. தேசிய இனப் பிரச்சினையை மையமாகக் கொண்ட உள்நாட்டு யுத்தம், வடக்கு […]

மேலும் பார்க்க

நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும் – பகுதி 1

20 நிமிட வாசிப்பு

முதல் இரண்டு அத்தியாயங்களில் கடல், கரையோரங்கள், காடுகள் மற்றும் அங்குள்ள உயிரினங்கள், ஏனைய பல்வகைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இம் மூன்றாம் அத்தியாயம், தரையிலுள்ள முக்கியமான அம்சங்களை பல்வகைமையுடன் தொடர்புபடுத்தி ஆராயவுள்ளது. ஆகையால், இவ் அத்தியாயம் ‘நிலப்பயன்பாடும் நன்னீர் நிலைகளின் பல்வகைமையும்’ எனும் தலைப்பில் அமைகிறது. வட மாகாண நிலம், நன்னீர்நிலைகளின் பல்வகைமை வடக்கு கிழக்கு பிரதேசம் 8 மாவட்டங்களைக் கொண்டது. இலங்கையின் முதலாவது நிர்வாகக் கட்டமைப்பு வட மாகாணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 2

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே கேரளா, தமிழ்நாடு, இலங்கை முஸ்லிம்களின் வித்தியாசமான இனத்துவ வளர்ச்சி இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் பொதுவாகத் தங்களை தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இலங்கை முஸ்லிம்களிடையே அப்படியொரு எண்ணம் இல்லை. தம்மை இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுகின்ற தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதில் விருப்பமற்றுள்ளனர். இஸ்லாமிய இறையியல் தவிர, தமிழ் இலக்கியம், பண்பாட்டு மரபு போன்றவற்றுக்கு முழுமையான பங்களிப்புச் செய்வதாக […]

மேலும் பார்க்க

தமிழர்களின் வாழ்க்கைமுறையும் காலநிலையும்

10 நிமிட வாசிப்பு

வடக்கு மாகாண மக்கள், குறிப்பாக தமிழர்கள், காலநிலையுடன் இணைந்ததாகவே தங்களுடைய வாழ்க்கை முறைமைகளை கட்டமைத்துள்ளார்கள். மிக நீண்ட காலமாகவே காலநிலையினால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைப் பேணி உள்ளார்கள். தங்களுடைய அன்றாட நடவடிக்கைகள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள், விவசாய மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், தொழில் சார்ந்த நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகளை காலநிலையுடன் இணைந்ததாகவே மேற்கொண்டுள்ளார்கள். வானிலைச் செல்வாக்குகளுக்கு அதிகளவு உட்பட்ட மக்களாக இவர்கள் காணப்பட்டிருக்கின்றார்கள். இன்றும் நிலவுகின்ற பல்வேறு வகைப்பட்ட […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்