Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை – பகுதி 2

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER) சுயாட்சி தொடர்பான நிறுவனங்கள் சுவிற்சர்லாந்து 23 கன்டன்களாகவும், 3 அரைக்கன்டன்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அரைக்கன்டன்களும், ஏனைய 23 கன்டன்கள் போன்று முழுமையான அதிகாரங்களை உடையனவாக உள்ளன. அரைக்கன்டன்கள் ஏனையவற்றில் இருந்து வேறுபடுவது பின்வரும் இரு விடயங்களில் ஆகும். அ. அரசுகளின் சபை (Council of states) எனப்படும் செனற் சபையில் அரைக்கன்டன்களுக்கு ஒரு உறுப்பினரையே பிரதிநிதியாக அனுப்பலாம். ஏனைய 23 கன்டன்கள் […]

மேலும் பார்க்க

அரசியலமைப்பில் கிடைத்த சமவுரிமை

8 நிமிட வாசிப்பு

இலங்கையை இறுதியாக ஆட்சி செய்த அந்நியரான பிரித்தானியரிடமிருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அம் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. முதலில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. பின்னர், சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழர்களதும் தமிழ் பேசும் முஸ்லிம்களதும் மொழி உரிமை பறிக்கப்பட்டது. மேலும், பல […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 7

27 நிமிட வாசிப்பு

திருக்கோணமலையில் நீண்டகாலம் பணியாற்றியிருந்த திரு.வி.எஸ். தனபாலசிங்கம் அவர்கள், 1990 ஜனவரி மாதம் தொடக்கம் யாழ். மாநகர சபைப் பொது நூலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார். யாழ். நூலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தபோது, யாழ். நூலகம், கோட்டையிலிருந்து தொடர்ச்சியான ஷெல் தாக்குதலின் காரணமாக தனது பிரதான நூலகக்கட்டிடத்தை விட்டு வெளியேறியிருந்தது. அதன் சேர்க்கைகளும் சேவைகளும் பிரிக்கப்பட்டு ஆறு கிளை நூலகங்களாக செயற்பட்டுக் கொண்டிருந்தது. யாழ். நூலகத்தில் பணியாற்றும் உதவி நூலகர்கள் அனைவரிலும் […]

மேலும் பார்க்க

சர்க்கரை வள்ளி எனப்படும் வத்தாளங்கிழங்கு

8 நிமிட வாசிப்பு

பொதுவாக நிலத்தின் மேல் கொடியாகவும் நிலத்தின் கீழ் கிழங்காகவும் காணப்படும் தாவரங்களுக்கு ‘வள்ளி’ என்று பெயரிட்டனர் எமது முன்னோர்கள். கொடியைக் குறிக்கும் ‘வல்லி’ என்னும் வடமொழிப்பெயர் தமிழில் இருந்தே பெறப்பட்டிருத்தல் கூடும். வள்ளிக்கிழங்கு சங்க காலத்தில் நன்கு அறியப்பட்ட ஓர் உணவாக இருந்தது. நெல்லரிசிச்சோறு போதுமான அளவு கிடைக்கப்பெறாத சங்ககாலத்துக் குறிஞ்சி நிலமக்கள் தமக்குத் தேவையான கார்போஹைட்ரேட் (carbohydrate) எனப்படும் ஊட்டச்சத்தை மாச்சத்து நிறைந்த வள்ளிக்கிழங்கில் இருந்தே பெற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் […]

மேலும் பார்க்க

மன்னார், நானாட்டானில் கிடைத்த பண்டைய நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா ?

15 நிமிட வாசிப்பு

18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து 1904 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி 25.09.2020 அன்றிலிருந்து  ஊடகங்களில் முக்கிய செய்தியாக காணப்பட்டது. இந்நாணயங்களை அச்சத்துடன் பார்த்த அக்கிராம மக்கள்  பூதம் பாதுகாத்து வந்த இந்நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என கூறியதால் அவற்றால் அச்சமடைந்த நானாட்டான் பிரதேச […]

மேலும் பார்க்க

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் பேரம்

8 நிமிட வாசிப்பு

1978 ஆம் ஆண்டு, இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு, சுமார் 30 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவிடமிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானுக்கு ஒரு அழைப்பு வந்தது. தொண்டமான், ஜனாதிபதி மாளிகையில் ஜெயவர்த்தனவை சந்தித்தார். அச் சந்திப்பை அடுத்து தொண்டமான் அவர்களுக்கு அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்பட்டது. கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியைப் பெற்றுக்கொண்ட தொண்டமான், நீண்ட காலமாக தமது மக்களுக்கு […]

மேலும் பார்க்க

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : யொகான் பொய்றியர் (JOHANNE POIRIER) அறிமுகம் நாற் புறமும் தரைப் பகுதியாற் சூழப்பட்ட நாடாக விளங்கும் சுவிற்சர்லாந்து, ஐரோப்பாவின் இருதயம் போன்று அமைந்துள்ளது. உலகின் சமஷ்டி முறைகளில் சுவிற்சர்லாந்து சமஷ்டி முறையே அதி பழமை வாய்ந்தது. இற்றைக்கு 170 ஆண்டுகளுக்கு முன் சுவிற்சர்லாந்து சமஷ்டி முறை அரசியல் யாப்பைத் தழுவிக் கொண்டது. இந்த நீண்ட வரலாற்றில் அதன் அரசியல் யாப்பில் பலதடவைகள் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1999 […]

மேலும் பார்க்க

பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை

10 நிமிட வாசிப்பு

அறிமுகம் காலநிலை மாற்றம் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் (Mihailovic & Jovanovic, 2022) மற்றும் உலகளவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் தாக்கங்கள் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் அனைத்து முதன்மை மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கைத் துறைகளிலும் பரவலாக உணரப்படுகின்றன. பூகோள காலநிலை மாற்றம் காரணமாக வரட்சி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள், கடுமையான மழைப்பொழிவு, குளிர் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் நிகழ்வெண்ணிக்கை மற்றும் தீவிரத்தன்மை ஆகியன […]

மேலும் பார்க்க

சைவ சித்தாந்தம்

28 நிமிட வாசிப்பு

உலகச் சமநிலை மாற்றத்தைத் தீவிர நிகழ்வுகள் முனைப்புடன் வேகப்படுத்தியவாறுள்ள சூழலில் இந்தத் தொடரில் இணைந்து பயணிக்கிறோம். அதிலும் இந்த அத்தியாயம் மத்திய கிழக்கில் இயங்கி வருகின்ற உலக மேலாதிக்கச் சக்தியின் ஒரு குவிமையமான இஸ்ரேல் தனது மேலாதிக்க ஆற்றலின் பலவீனத்தை முதல் தடவையாக வெளிப்படுத்தியவாறு இருக்கும் 2023 நொவெம்பர் மாதத்துக்கு உரியதாக உள்ளது. ஏற்கனவே ஐந்தாறு வருடங்களாக ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத் திணையானது அதனது பொருளாதார வலுவில் […]

மேலும் பார்க்க

பால் மா உற்பத்தியும் மனித நுகர்வும்

17 நிமிட வாசிப்பு

இலங்கை மக்களில் பெரும்பாலானவர்களின் காலைத் தேநீரில் பால் சேர்க்கப்படுகிறது. எனினும் அதிகளவில் பொதி செய்யப்பட்ட பால் மா வடிவிலேயே சேர்க்கப்படுகிறது. திரவப் பால் வடிவில் அது சேர்க்கப்படுவது மிக மிகக் குறைவு. அதற்கு பல காரணங்கள் உள்ளன.  இலங்கையில் நுகரப்படும் பால் மா நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது. பால் மா இறக்குமதிக்கே பல பில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. இது  […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்