இத்தொடரின் முந்திய பகுதியில் இலங்கையைக் காட்டும் மிகப் பழைய நிலப்படத்தில் இலங்கையின் வட பகுதி தொடர்பாகக் காணப்படும் தகவல்களைக் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியிலே சில குடியேற்றவாதக்கால இலங்கைப் படங்களில் பொதுவாக இலங்கையின் வடபகுதி பற்றியும் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் தொடர்பாகவும் காணப்படும் தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால இலங்கை நிலப்படங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொலமி திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இலங்கையின் நிலப்படத்துக்குப் […]
இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான பிரஜாவுரிமைப் பறிப்புச் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படாமல் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பிக்க இலங்கை இந்திய காங்கிரஸ் தீர்மானித்தது தொடர்பில் அரசாங்கம் உள்ளூர மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும், இலங்கையின் தலை நகரமான கொழும்பு மாநகரத்தின் சுமுகமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை அரசாங்கத்தால் கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. பொலிசாரையும் காடையர்களையும் குதிரைப் படையையும் ஏவிவிட்டு, என்னதான் தடியடிப் பிரயோகம் நடத்தினாலும் அந்தப் பெரும் கூட்டத்தினரை […]
கடந்த சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அந்நியச் செலாவணியை உழைத்துக் கொடுப்பதிலும், 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களின் மீதான தீர்வைகள் அகற்றப்படும்வரை அரசாங்க வரிவருவாயின் பெரும்பங்கினை உழைத்துக் கொடுப்பதிலும் பெருந்தோட்டங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களித்து வந்தன. இத்துறையினது பொருளாதாரப்பங்களிப்பில் அண்மைக்காலங்களில் சற்றுத்தளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும் அது இன்னும் பொருளாதாரத்திற்குக் கணிசமான பங்கினை அளித்து வருகின்றது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. இத்துறையில் தொழில்புரியும் தொழிலாளர்கள் நாட்டினது சனத்தொகையில் மிகமோசமான […]
அறிமுகம் கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம் அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார். அவற்றுள் வரலாற்றுப் பழமைவாய்ந்த இரண்டு கருங்கற்தூண்களில் காணப்பட்ட தெளிவில்லாத சித்திரங்களின் புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தார். அவற்றில் வரலாற்றுத் தொன்மைமிக்க சில குறியீடுகளும், இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்களும் காணப்பட்டன. இவை வன்னியின் […]
ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட அரசு உருவாக்கச் செயல்முறையின் குறித்தவகைப் போக்கு ஒன்றாகவும், தனித்துவமான வரலாற்று அனுபவமாகவும் முன்னாள் சோவியத் யூனியனும் முன்னாள் யுகோசிலாவியாவும் விளங்குகின்றன. அங்கு முன்பு இருந்து வந்த அரசு முறை வீழ்ச்சியுற்றுப் புதிய அரசு உருவாக்கங்கள் மேற்கிளர்ந்தன. இவ்விரு நாடுகளும் புரட்சிக்குப் பிந்திய சமூகங்களாகவும் விசேடமான அரசு வடிவத்தைக் கொண்டனவாகவும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் உருவாக்கம் பெற்றன. இவ்வகையில் இந்நாடுகளின் அரசு உருவாக்க […]
இத்தொடரின் கடந்த வார அத்தியாயத்தில் ஒரு தொழிற்சங்கம் தன் தலையாய கடமை ஒன்றை நிறைவேற்றத் தவறியதால் இந்த நாட்டில் 150 ஆண்டுகாலமாக வசித்த ஒட்டுமொத்தமான இந்திய வம்சாவழிச் சமூகத்தினரே எவ்வாறு அரசியல் அனாதைகள் ஆகிப்போனார்கள் என்பதையும் அன்றைய சூழ்நிலையில் அப்படி ஒரு வேலை நிறுத்தம் செய்து இருந்தால் நமக்கு இருந்த சாதகமான காரணிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தொழிற்சங்கங்கள் இன்று வரை இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. […]
அறிமுகம் விவசாயம் என்பது வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான வருமானம் ஈட்டும் தொழிலாகும் . இது வேலை, வருமானம் மற்றும் உணவு ஆகியவற்றின் முதன்மை ஆதாரமாகவும் மனிதனின் அடிப்படைத் தேவைகளை உலகம் முழுவதும் பூர்த்தி செய்கின்ற இயற்கையின் கொடையாகவும் திகழ்கின்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) படி, விவசாய மக்கள்தொகையின் பங்கு மொத்த மக்கள்தொகையில் 67% ஆகும். இது மொத்த உணவு உற்பத்தியில் 39.4% மற்றும் அனைத்து […]
“கடவுளின் வடிவம் (திருப்பாச்சிலாராமத்தில் உறையும் சிவபெருமான்) இங்கு தாயாக, இறுதியாகக் கைவிடும் தாயாக, நோக்கப்படுகிறது. இது பக்தி உணர்வுக்கு மையமானது. அதுவும் , சுந்தரர் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுவேன் என்று பயமுறுத்தவேறு செய்கிறார். தெய்வீக அன்புக்கு எதிர் வினை புரியும் சமயத்திலேயே தெய்வீகக் கருணையின்மையை சொல்லுகிறார். (வெண்டி டோனிகர், ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு)” தமிழாக்கம் : க.பூரணச் சந்திரன், எதிர் வெளியீடு.2016). வெண்டி டோனிகரின் மேற்படி கருத்துக்கு […]
உலகில் கல்வி வளர்ச்சியும் நூலகங்களின் தோற்றமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டே வந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் நூலக வளர்ச்சியை நாம் ஆராய்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டினது கல்வி வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதும் அவசியமாகின்றது. அந்நியராட்சிக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் கல்வி வளம் பெற்றிருந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இதனைக் கடந்த இயலில் கண்டிருந்தோம். குறிப்பாக 13ஆம், 14ஆம் நூற்றாண்டுகளில் ஆரியச் சக்கரவர்த்திகளது காலங்களில் இக்கல்வி வளர்ச்சி உச்சநிலை அடைந்திருந்ததெனக் கூறலாம். இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகளும் […]