Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

பட்டினிப் போராட்டம்

10 நிமிட வாசிப்பு

நாட்டில் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தலைவிரித்து தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான திட்டமும் இருக்கவில்லை. அவர்களின் உள்நாட்டு தேசிய பொருளாதாரத் திட்டமெல்லாம் பொய்யாகிக் கொண்டிருந்தது. அக்காலத்தில், மலையக மக்களுக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சேர்ந்த ஏ.அசீஸ் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரால் நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்து மடிவதை பொறுக்கமுடியாமல், அவர்களுக்கு போதுமான உணவு […]

மேலும் பார்க்க

கோடைகாலத்தில் குளிர்ச்சிதரும் வத்தகப்பழம்

9 நிமிட வாசிப்பு

*இலங்கையில் வத்தகப்பழம் என்றும் இந்தியாவில் தர்ப்பூசணி என்றும் பரவலாக அறியப்படும் இப்பழம் கோடைகாலத்தில் அருந்துவதற்கு மிகவும் சிறந்த ஒரு பழம் என்பதைப் பலரும் அனுபவபூர்வமாக அறிந்துவைத்துள்ளார்கள். இக்கட்டுரையில் வெளிநாட்டில் வாழும் தமிழர் பலரும் அறிந்துவைத்திருக்கும் தர்ப்பூசணி என்னும் பெயரையே பெரிதும் பயன்படுத்தியுள்ளேன். “வத்தகப் பழம் குளிர்ச்சி மன்னிடும் பைத்தியம்போம்சத்திபோம் பித்தம் தீரும் தவறிலாக் கொடி ஈதல்லால்ஒத்த கக்கரியும் வெம்மை ஒழித்துச் சீதளம் உண்டாக்கும்”-பதார்த்தசூடாமணி- “ஒரு தர்ப்பூசணியைச் சாப்பிட்டுப்பார்த்தால் தேவதைகள் என்ன […]

மேலும் பார்க்க

சீன நிறுவனங்களின் பின்னணியில் கடல்விவசாய முன்னெடுப்பும் பரீட்சார்த்த முயற்சிகளும்

28 நிமிட வாசிப்பு

1992 இல் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இப்படி ஒரு வசனம் பேசுவார். ” 2000 வருஷமா, வேல் கம்பையும் அரிவாளயும் தூக்கிட்டு திரிந்த பய. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரத்திற்கு ஆள் வேணும் என்று கேட்டப்ப, ஓடிப்போய் முதல் வரிசையில் நின்றவன் முக்காவாசி பேரு நம்ம பய தான். “ அதே போலத்தான், கருவாட்டு கத்தியோடும், கலவாய் கம்பியோடும், மண்டாவோடும் நின்று பழக்கப்பட்டவர்கள் 1976 ஆம் ஆண்டு […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 5

21 நிமிட வாசிப்பு

நகரசபையினர் தாமே ஒரு வாசிகசாலையை ஆரம்பித்து நடத்தலாம் என்று கருதிய வேளையில் ஆர். சுப்பிரமணியம் அவர்கள் இந்நூலகத்தைப் பொறுப்பேற்று நடத்துமாறு பிரேரணை கொண்டு வந்தார். இவ்வாறாக, நூல் நிலைய பரிபாலன சங்கத்தின் காரியதரிசியாய் க.மு.செல்லப்பா அவர்கள் நகரசபைத் தலைவருக்கு 21-12-1934 இல் எழுதிய கடிதம் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். தலைவர்,நகரசபை,யாழ்ப்பாணம். ஐயா, தங்கள் சபையினர் எங்கள் நூல் நிலையத்தை பொறுப்பேற்று நடத்துதல் சம்பந்தமாக நிறைவேற்றிய பிரேரணையை எங்கள் காரிய […]

மேலும் பார்க்க

மேகம் கவிந்த தாரகை : மருத்துவர் கிறீன்

9 நிமிட வாசிப்பு

1884 இல் பிரித்தானிய ஆளுநர் சேர். ஆர்தர் கோர்டன் யாழ்ப்பாணக் கல்லூரியையும் அமெரிக்க மிசனரிகளின் பணியையும் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார். அமெரிக்க மிசனரிகள் யாழ்ப்பாணத்தில் ஆற்றும் மருத்துவப் பணிகளுக்காகவும் மருத்துவப் பீடத்தை மீள ஆரம்பிக்கவும் 1000 ரூபாவை ஆர்தர் கோர்டன் அமெரிக்க மிசனுக்கு வழங்கினார். உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து 1873 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் திரும்பிய கிறீன் நியூயோர்க்கில் கிறீன்கில் என்ற இடத்தில் உள்ள தனது குடும்ப இல்லத்தில் […]

மேலும் பார்க்க

போரினால் புலம்பெயர்ந்த சமூகங்களின் தாயகத்துடனான உறவு : சர்வேந்திராவின் முனைவர் பட்ட ஆய்வு ஓர் அறிமுகம் – பகுதி 1

25 நிமிட வாசிப்பு

இவ் ஆய்வின் (Homeland orientation of war-torn diasporas) ஆறு கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள்; பணம் அனுப்புதல் நோக்கங்கள், வழிமுறைகள், விளைவுகள் தொடர்பானவை. இரண்டு கட்டுரைகள்; தாயகம் சார்ந்த பண்பாட்டு நடைமுறைகள், பின்பற்றல்களோடு தொடர்புடையவை. பணம் அனுப்புதல் தொடர்பான கட்டுரைகள், பணம் அனுப்புதற் செயற்பாடுகள் ஊடான தாயகத்துடனான பொருளாதார உறவுகள்- தொடர்புகளையும்; தமிழர்கள், சோமாலியர்களின் நோர்வே வாழ்க்கையிலுள்ள சிக்கல்களைக் கையாள்கின்றன. பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய கட்டுரைகள், தமிழர்கள் மற்றும் சோமாலியர்களின் […]

மேலும் பார்க்க

நெருக்கடிக் காலத்தில் பெருந்தோட்டம்

9 நிமிட வாசிப்பு

பெருந்தோட்டத்துறை ஒட்டுமொத்தமாக அரசுடைமை ஆக்கப்பட்டபோது அங்கிருந்த ஒரு சாராரும் அரச சார்பு தொழிற் சங்கத்தினரும், இனிமேல் தோட்டத் தொழிலாளிகள் எல்லோருமே அரச உத்தியோகத்தர்கள் ஆகிவிட்டார்கள் என்று கொண்டாடினார்கள். ஆனால் அந்த எல்லா கொண்டாட்டங்களும் ஒருசில மாதங்களிலேயே சூரியனைக் கண்ட பனித்துளிகள் போல் கரைந்து போய்விட்டன. தோட்டங்கள் வெறுமனே வெள்ளை தோல் போர்த்த வெள்ளைக்காரனிடம் இருந்து கருப்புத் தோல் போர்த்த கருப்பு துரைகளிடம் மாறினவே அன்றி, அங்கே உண்மையான மாற்றங்கள் எதுவும் […]

மேலும் பார்க்க

கடல் சார் உயிர்ப்பல்வகைமையும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியும்

30 நிமிட வாசிப்பு

கடல்சார் பல்வகைமை மேற்பரப்பு நீர்நிலைகளில் ஒன்றான கடல், வடகிழக்கின் முக்கிய சொத்தாகும். பரந்துபட்ட பிரதேசமாக விரிந்து காணப்படும் இந் நீலநிறப் பிரதேசம் அநேக உயிர் இரகசியங்களை உள்ளடக்கியுள்ளது. இப்பிரதேசம் அறுகம்பே கரையிலிருந்து புத்தளம் வரை எம் பிரதேசவாசிகளால் கையாளப்பட்டுவருகிறது. பருவகாலங்களுக்கு அமைய மாறிமாறி வீசும் காற்றலைகளோடு கடலில் குறித்துக்காட்டப்படும் மாற்றங்கள் நிகழ்வதுண்டு. கடற்கரையோரம், கடற்கரையை அண்டிய பகுதி, தரவைக்கடல் மற்றும் ஆழ்கடல் பகுதி என்பன பல்வேறுவகைப்பட்ட சாகியத்தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இவை […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை முஸ்லிம் மக்கட்பெயராய்வு

18 நிமிட வாசிப்பு

மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது.  இடப்பெயராய்வு (Toponomastic) ஆட்பெயராய்வு (Anthrophonomastic) இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic) சமூகப் பெயராய்வு (Socio Onomastic) […]

மேலும் பார்க்க

பெரிய புளியங்குளம் தமிழ்க் கல்வெட்டும் முள்ளியான் குடிமனை அழிபாடுகளும்

9 நிமிட வாசிப்பு

வன்னியில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் கண்டுள்ளனர். இக்கல்வெட்டு அப்பிரதேச […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்