Blogs - Ezhuna | எழுநா

யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு – பகுதி 1

8 நிமிட வாசிப்பு | 20813 பார்வைகள்

ஆங்கில மூலம் : றொபேர்ட் எஸ் பேரின்பநாயகம் கட்டுரைக்குள் நுழைய முன்னர்… ’Caste, Religion and Ritual in Ceylon’  என்ற தலைப்பில் 1965 ஆம் ஆண்டு  Anthropology Quarterly என்னும் பருவ இதழில் (1965.38(4): 218 -227) ஆய்வுக்கட்டுரையொன்றினை றொபேர்ட் எஸ். பேரின்பநாயகம்  ஆங்கிலத்தில்   வெளியிட்டார். இவ்வாய்வில் கூறப்படும் கருத்துக்களைத் தழுவியும், சுருக்கியும் இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தில் ‘இலங்கை’ (Ceylon) எனக் குறிப்பிட்டுள்ளபோதும், கட்டுரையாசிரியர் யாழ்ப்பாணத்தைப் […]

மேலும் பார்க்க

கதிரேசர் பெரியதம்பி: அமெரிக்காவில் மருத்துவ கலாநிதிப் பட்டம் (MD) பெற்ற முதல் இலங்கையர்

7 நிமிட வாசிப்பு | 10036 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் வசித்த மருத்துவர் கிறீனுக்கு 1865 ஆம் ஆண்டு 2 ஆவது பெண் குழந்தை கிடைத்தது. பத்து வயதிலே தாயை இழந்த கிறீன் சிறுவயது முதல் தன்னை அரவணைத்து வளர்த்த லூசி என்னும் மூத்த சகோதரியின் பெயரைத் தனது 2 ஆவது குழந்தைக்குச் சூட்டினார். இந்த ஆண்டு 88 வயதான தனது  தந்தை மசாசுசெட்சில் மறைந்த செய்தியை அமெரிக்காவிலிருந்து ஏறத்தாழ 3 மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த கடிதம் மூலம் கிறீன் […]

மேலும் பார்க்க

வரலாற்றுக்கால யாழ்ப்பாணத்தில் நூலகங்கள்: ஒரு தேடல்

16 நிமிட வாசிப்பு | 16185 பார்வைகள்

இலங்கையின் வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழர்களும் சிங்களவர்களும் சமய நம்பிக்கை, மொழி, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்ற பல்வேறு விடயங்களிலும் வேறுபட்ட இனங்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அதிகளவு வாழ்ந்த வேளையில் தென்னிலங்கையிலும், மேற்குப் பிரதேசங்களிலும் சிங்களவர் வரலாற்றுக் காலம் முதலாக வாழ்ந்து வருகின்றனர். தென்னிந்திய மன்னர்களின் ஆக்கிரமிப்புகளின் காரணமாக இலங்கையின் சிங்கள இனத்தவர்களின் பார்வையில் தமது ஆக்கிரமிப்பாளர்களின் எச்சங்களே இங்குள்ள தமிழர்கள் என்ற காழ்ப்புணர்வு தொன்றுதொட்டு […]

மேலும் பார்க்க

தமிழர் கிராமங்கள் மற்றும் காணிகள் பற்றிக் கூறும் அநுராதபுரம் கல் தோணிக் கல்வெட்டு

9 நிமிட வாசிப்பு | 12584 பார்வைகள்

அநுராதபுரம் பண்டைய நகரில் உள்ள தூபராம தூபியின் கிழக்கில் உள்ள கல் தோணி (Stone-Canoe) என்றழைக்கப்படும் இடத்தில் இந்தக்கல்வெட்டு காணப்படுகிறது. அழகாகச் செதுக்கப்பட்ட கற்பலகை ஒன்றில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டு பொ. ஆ. 956 முதல் 972 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் மகிந்தன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.   கற்பலகையில் 6 அடி 5 அங்குல நீளமும், 2 அடி 8 அங்குல அகலமும் கொண்ட மேற்பரப்பில் […]

மேலும் பார்க்க

பிரஜாவுரிமைச்சட்டமும் இரண்டு வரலாற்றுத் தவறுகளும்

8 நிமிட வாசிப்பு | 18642 பார்வைகள்

1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமானது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்களினதும் பிரஜாவுரிமையைப் பறித்ததுடன், இந்திய – பாகிஸ்தானிய முஸ்லிம்கள், போரா,  மேமன், பார்சி போன்ற ஏனைய  இனத்தவர்களின் பிரஜாவுரிமையைக்கூட விட்டு வைக்கவில்லை. இது இலங்கையின் ஜனநாயக அரசியலில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியது. அத்துடன் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக 1949 ஆம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தானியர் வதிவிடப் பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை  நாடாளுமன்றத்தில் கொண்டு […]

மேலும் பார்க்க

பறிக்கூடு போட்டு மீன்பிடித்தல் போய், பஸ் போட்டு மீன்பிடித்தல் சாத்தியமா?

10 நிமிட வாசிப்பு | 8476 பார்வைகள்

எனது அம்மாவின் தந்தையார், வைத்தியான் சந்தியாகு இறக்கும்வரை பறிக்கூடு (Fishing Trap) வைத்து மீன்பிடித்தார். பறிக்கூடுகளை கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் அளவான தூரத்தில் கொண்டு சென்று அங்குள்ள முருகை, சல்லி, பார் என்று எம்மவரால் அழைக்கப்படும் பவளப்பாறைகளுக்கு இடையில் வைத்து விடுவார். அடுத்த நாள் வெயில் நன்றாக ஏறிய பின் பறிக்கூடுகளை மரக்கோலின் கொக்கியால் தோணிக்குள் எடுப்பார். மீன்களை பறிகளிலிருந்து எடுத்துவிட்டு, மறுபடியும் பறிக்கூடுகளை அதே இடத்தில் வைத்துவிட்டு […]

மேலும் பார்க்க

குயர் மக்களும் மதங்களும்

10 நிமிட வாசிப்பு | 9646 பார்வைகள்

இலங்கை, வேறுபட்ட மதங்களையும் தந்தையாதிக்கக் கருத்தியல்களையும் தன்னகத்தே கொண்டு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான பண்பாடுகளைப் பின்பற்றக்கூடிய பெரும்பாலான மக்களைக் கொண்ட ஒரு நாடு. இது பௌத்தர்கள் மற்றும் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது. வடபுலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இங்கு தென்னிந்திய இந்துப் பண்பாட்டின் செல்வாக்குகளை அதிகம் காணலாம். “தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. […]

மேலும் பார்க்க

மேமன்கள் (Memons)

7 நிமிட வாசிப்பு | 12545 பார்வைகள்

இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மேமன்களாவர். இவர்கள் மேமன் சமூகம் எனவும் அழைக்கப்படுகின்றனர். மேமன்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து வணிக நடவடிக்கைகளுக்காக 1800 களின் தொடக்கத்தில் இலங்கை வந்தனர். காலனித்துவ காலத்தில் வர்த்தக நோக்கங்களுக்காகவே இவர்கள் இலங்கையில் குடியேறியதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான மேமன்கள் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலப்பகுதியிலேயே இலங்கை வந்ததாக விக்கிபீடியாத் தகவல் ஒன்று கூறுகிறது. 1947 இல் இந்தியப் பிரிவினையை அடுத்து அவர்கள் இலங்கையின் நிரந்தரக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள் – பகுதி 2

15 நிமிட வாசிப்பு | 16991 பார்வைகள்

வாழைப்பூ – காய் – தண்டு “வாழையின் பூவி னாலே வளர்பெரும் பாடு போங்காய்சூழுறு மரிய மூலப் பிரமேகந் தொலைக்கு மித்தண்டாழுறு மலக்கட் டெல்லா மகற்றுமென் றுரைத்தார் முன்னேதாழ்விலாப் பொதிகை மேய தபோதனர் கோமான் றானே” – பக்.76, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி வாழைப்பூவினால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்பெருக்கு  குறையும். வாழைக்காய்க்கு மூல நோய்கள், நீரிழிவு என்பன கட்டுப்படும். (ஏனைய நீரிழிவுக்குரிய பத்தியம் காக்கப்பட வேண்டும்). வாழைத்தண்டினால் மலக்கட்டு […]

மேலும் பார்க்க

பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க் கல்வெட்டு தம்பலகாமத்தில் மீளவும் கண்டுபிடிப்பு

9 நிமிட வாசிப்பு | 17888 பார்வைகள்

1796 காலப்பகுதியில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் அவர்கள்  திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல் வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்துகொள்வதற்கும், அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன்வரவில்லை எனவும், தனது பயணக் குறிப்பில் பதிவுசெய்துள்ளார். இந்தக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அந்தக்கல்வெட்டின் முன்பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)