இப்போது உலகளாவிய அல்லது அகன்ற இந்துவாக்கப் பேரலையின் தந்திரோபாயங்களுள் ஈழத்துச் சைவமும் சிக்குண்டுள்ளது அல்லது சிக்கவைக்கப்பட்டுள்ளது. அது ஒருவகையில் ஈழச் சைவத்தின் தனியடையாளத்தை பெரும் இந்துப்போர்வை கொண்டு மூடி அதன் தனித்துவத்தை கரைக்கத்தொடங்கியுள்ளது என்பதை எங்களிற் பலர் கவனிக்கத் தவறியுள்ளோம். ஈழச் சைவ மரபுரிமைகளைப் பின் தள்ளி – அகன்ற இந்துவாதத்துள் அதனை அங்கவீனமடையச் செய்யும் இந்த மாற்றத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றல் அல்லது எந்தக் கேள்விகளுமற்று பொதுப்போக்குகளிற்கு பின்னால் ஓடும் […]
பிரபல்யமான அமெரிக்க மிசனரிகள் சிலர் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய தொண்டுகளைப் பற்றி தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்கள் ஆற்றிய விரிவுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அந்நூலுக்கு “அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் ஆறாகப் பாய்ந்து வந்த அன்பு வெள்ளம்” என்று பெயரிட்டிருந்தார் பேராயர். அந்த அன்பு வெள்ளத்தில் மருத்துவர் கிறீனும் ஒருவர். 1858 இல் அமெரிக்கா திரும்பிய கிறீன் தமிழிலே […]
உலக வர்த்தகத் தாபனம் சுமார் எட்டு வருடகாலமாக நடைபெற்றுவந்த உறுகுவேசுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின்னர் 1994ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. உறுகுவேசுற்று பேச்சுவார்த்தைகளானவை பல்பக்கவர்த்தக அமைப்பினது வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் போன்றதொரு தாபனத்தை உருவாக்குவதன் மூலம் வர்த்தகம், இறுப்புக்கள் என்பன தொடர்பான பொதுஒப்பந்தத்தின் (General Agreement on Trade and Tariff – GATT) தாபனரீதியான அம்சங்களை பலப்படுத்துவதே மேற்படி பேச்சுவார்த்தைகளின் […]
பதுளை பொதுநூலகத்தின் முன்பக்கம் ஒரு உயரமான தூண் நடப்பட்டுள்ளது. இது நான்கு பக்கங்களும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாகும். இதன் மேல்பகுதியில் சிறிய கூரை போடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தத்தூண் கல்வெட்டு ’சொரபொர வெவ’ எனும் குளக்கட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டு, பதுளை கச்சேரிக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது பதுளை பொதுநூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையின் வடக்குப் பக்கமாக 4 கி. […]
அறிமுகம் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட பேரினவாதம் சார்பான சட்டங்களும் மற்றும் சட்டத் திருத்தங்களும், உதாரணமாக தனிச் சிங்களச் சட்டம், பெளத்தம் அரச மதமாக்கப்படல், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், இனக் கலவரங்கள், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும், மேலும் பலவும், தமிழ் இளைஞர்களை இலங்கை அரசிற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுக்க […]
2021 மே 20 தொடக்கம், யூன் மாதத்தின் நடுப்பகுதியான இன்றுவரை கொரோனாப் பாதிப்புகளை தவிர்த்து இரு கடல்சார் நிகழ்வுகள் – அனர்த்தங்கள், பல விவாதங்களையும் விசனங்களையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியுள்ளன. அவையாவன X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இலங்கையின் வடகடலில் இறக்கப்பட்ட பேருந்துகள் (பழைய அலுமினிய பஸ் வண்டிகள்) பற்றியனவாகும். இவ்விரு நிகழ்வுகளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல மட்டங்களில் விவாதங்களை தூண்டியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதேவேளை […]
இலங்கைத் தேயிலையை உலக அரங்கில் பிரபல்யமடையச் செய்த முதலாவது நிகழ்வு 1888இல் ஸ்கொட்லாந்தில் நடைப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 4 சர்வதேச கண்காட்சிகளில் முதலாவது அறிவியல், கலை மற்றும் தொழில்துறை சர்வதேச கண்காட்சி 1888 மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கெல்விங்ரோவ் பூங்காவில் (Kelvingrove Park) நடந்தது. அங்கு இலங்கை தேயிலையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்னும் வானொலியோ தொலைக்காட்சியோ […]
ஆங்கில மூலம் – கெல்லி பிறியன் – அறிமுகம் பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி ஆட்சி முறையை நெகிழ்ச்சியுடைய, வளைந்து கொடுக்கக்கூடிய சிறந்த முறையாக இன்று பலர் கருதுகின்றனர். அதன் ஆதரவாளர்கள் அதனை தனித்துவம் மிக்க ஒரு முறையாகக் கருதுகின்றனர். இலங்கையிலும் இதுபற்றிய ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. எல்லா இனக்குழுமங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை நன்முறையில் வழங்குவதோடு, உள்நாட்டில் தேசிய இனங்களின் முரண்பாடுகளைத் தணிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் பெல்ஜியம் வெற்றிகண்டுள்ளது. அது சமஷ்டியாக மாறுவதற்கான தீர்மானத்தை (1988இல்) […]
இந்த நாட்டில் இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத சிந்தனை 1918 களிலேயே தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் அது ஒரு பொருளாதார ரீதியான பொறாமையாக இருந்தது. ஏற்றுமதி – இறக்குமதி தொழிலை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தின் எழுச்சி காரணமாக கொழும்பு மாநகரம் சனத்தொகைப் பெருக்கம் அடைந்து பெரும் பொருளாதார மையமாக வளர்ச்சி அடைந்தது. கொழும்பு துறைமுகம், ரயில்வே திணைக்களம், அச்சுக் கூடங்கள், தபால் தந்தி திணைக்களம் […]