வீரயுக முடிவில் மூன்று பேரரசுகளையும் தகர்த்துப் பலநூறு ஆள்புலங்களாகத் தமிழகத்தை ஆக்கியவாறு களப்பிரர்களது ஆட்சி ஏற்பட்ட சூழலில் தோற்றம்பெற்ற நூல் “திருக்குறள்”. இது மிகப் பெரும் சமூக மாற்றக் காலகட்டம்; பல தசாப்தங்களாக மேலாதிக்கத்துடன் திகழ்ந்த விவசாயச் சமூக சக்தியான கிழார்களின் திணையானது தனக்குரியதான அரச அதிகாரத்தை இழந்து வரும் அதேவேளை வணிகச் சமூக சக்தியின் மேலாதிக்கத்துக்கு அனுசரணை வழங்கும் ஆட்சி முறையைச் சாத்தியப்படுத்துகிற மாற்றம் நடந்தேறி வரத் தொடங்கி […]
“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை” – திருக்குறள் (672) மு.வரததாசனார் விளக்கம் காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக்கூடாது. நான் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்ப தொழில் நிறுவனங்களைத் தொடங்கியபோது, ஈழத்தில் சின்ன வயதில் கற்ற மற்றும் அனுபவித்த பல விடயங்கள் எனக்கு மிக்க துணையாக இருந்தன. அவற்றில் சில விடயங்கள் வகுப்பறைகளில் படித்தவை, மற்றவை வெளியே அனுபவரீதியாகக் […]
இற்றைக்கு 28000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்கால காலத்தில் இருந்தே இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இயக்கர், நாகர் என்னும் வரலாற்றுக்கு முந்தைய குடிகளை தமது மூதாதையர்களாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தும் முயற்சியில் இருக்கும் சூழ்நிலையில் அந்த குடிகளின் காலத்துக்கு எத்தனையோ ஆயிரமாண்டு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த குடிகளாகவும் […]
இலங்கையின் பாலுற்பத்திக் குறைவில், கால்நடைகளில் ஏற்படும் குடற்புழுக்களின் தாக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. குடற்புழுக்கள் கால்நடைகளின் குடல், இரப்பை போன்ற உறுப்புகளில் இருந்துகொண்டு ஊட்டச்சத்துகளையும் இரத்தத்தையும் உறிஞ்சுவதுடன் ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் அழிக்கும் முறையான நீக்க மருந்துகளை எமது பண்ணையாளர்கள் வழங்குவதில்லை. குடற்புழு நீக்கம் என்னும் மிக முக்கியமான முகாமைத்துவ நடவடிக்கையை புறக்கணிப்பதால் பல கால்நடைகள் உற்பத்தி மட்டத்தில் குறைவடைவதுடன் கணிசமான அளவில் இறந்தும் […]
மானிப்பாயிலிருந்து 1864 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி மருத்துவர் கிறீன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் தமக்கு முதலாவது மகவு பிறந்த மகிழ்ச்சியான செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். யூலியா என்ற தனது மூத்த சகோதரியின் பெயரையே அந்தப் பெண் குழந்தைக்கு கிறீன் சூட்டினார். பின்னாளில் யூலியா தான் பிறந்த யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து 1906 -1910 வரையான காலப்பகுதியில் அமெரிக்க இலங்கை மிஷனுக்காக 5 வருடகாலம் சேவையாற்றினார். கீழைத்தேசத்தில் இந்தியத் […]
பாரம்பரிய மீன்பிடித்தல் மற்றும் கடலுணவு விவசாயம் பூமியின் மேற்பரப்பின் பெரும்பகுதி கடலாகவுள்ளது. மனிதர்களாகிய நாம் எண்ணற்ற வழிகளில் கடலைச் சார்ந்திருக்கின்றோம். கடலில் இருந்து வரும் உணவானது, மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய இரண்டு தொழில்வகை மூலம் நமக்குக் கிடைக்கிறது. கடலுணவானது மலிவானதும், இலகுவாகவும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து ஆகும். அத்துடன், கடலுணவு உற்பத்தியானது, பல கோடி பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதன் மூலம், பெரும் வாழ்வாதார அடிப்படையாகவும் உள்ளது. கடல் உணவுத் […]
மலையகத்தின் அடுத்த கட்டத்திற்கான உரிமைக்கோரிக்கை குரல்களை எழுப்பியவர்கள் இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரே. இவர்களது தூரத்துக் கனவு இலங்கையில் இருந்து வெள்ளையர்களை துரத்தியடித்த பின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஏற்படுத்தி சோசலிச அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்பதாக இருந்தபோதும் அவர்கள் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்துக்கு பின்னால் கணிசமான பங்களிப்பை செய்தனர். இலங்கையில் ஏற்பட்ட இருந்த சிறு முதலாளித்துவத்தின் வளர்ச்சி காரணமாக சிறு முதலாளித்துவ வர்க்கம் ஒன்று […]
அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு. வை. சத்தியமாறன் இணையத்தளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் […]
மலாயர்கள் (Malays) இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மலாயர்களாவர். இலங்கைச் சோனகரோடு மத அடிப்படையில் ஒரே சமூகமாக இணைந்து கொண்ட உப மரபினங்களில் மலாயர்களே ஏனைய உபமரபினங்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். இலங்கையில் கிட்டத்தட்ட மலாயர் சனத்தொகை அறுபதாயிரம். நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட இது 0.3 சதவீதமாகும். நாட்டின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட 4 சதவீதமாகும்.[i] இந்த எண்ணிக்கையை ஆசிஃப் ஹூஸெய்ன் 2011 இல் […]
அறிமுகம் இலங்கையில் பிரதேசம் சாராத சமூகங்களில் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தமான பொருளாதாரப் பரிமாணங்களை இந்தக் கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்தச் சமூகம் உற்பத்தி செய்யும் நிதி எவ்வளவு, அபிவிருத்தி நோக்கங்களுக்காக அது முதலீடுகளின் வடிவத்தில் அரசிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுக்கொள்கின்றது என்பதை இந்தக்கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்த அம்சங்களை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்தச் சமூகத்தின் மானுட, சமூக, அபிவிருத்தியை வரலாற்று […]