Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

கடலும் காலநிலைமாற்ற அரசியலும்

20 நிமிட வாசிப்பு

கடலட்டை வளர்ப்பை நியாயப்படுத்த அதிகார வர்க்கத்தினரும், அதன் கடல் விஞ்ஞானிகளும் முன் வைக்கும் சில கூற்றுக்களை ஆராய்வோம். “இன்னும் சில தசாப்தங்களுக்குள் இலங்கையைச் சுற்றியுள்ள கரைகள் சார்ந்த கடற்பிரதேசம் எந்த ஜீவராசியும் வாழ முடியாத பிரதேசம் ஆகிவிடும். ஏற்கனவே வறட்சியும் நன்னீர்த் தட்டுப்பாடும் காணப்படும் கரையோர மீன்பிடிக் கிராமங்கள் மனிதர் வாழ்வதற்குத் தகுதியற்ற இடங்களாகப் போய்விடும். வெப்ப அதிகரிப்புக் காரணமாக புல், பூண்டு கூட முளைக்காத பூமியாகி விடும், கடல் […]

மேலும் பார்க்க

யாழ். பாரம்பரிய சமையலில் சுவையூட்டிகள்

19 நிமிட வாசிப்பு

பொதுவாக முழுமையான சுவை எனப்படுவது, நாக்கினால் உணரப்படும் சுவை, மூக்கினால் உணர்ந்து கொள்ளும் மணம், கண்ணினால் காணும் வடிவம் என்பவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாடாகும். இவ்வாறான சுவைகளுக்கு, பொதுவாக தாவரப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்களே (Phytochemicals) காரணமாகின்றன. ஏறத்தாழ 25000 தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நன்மைதரக்கூடிய இரசாயனங்களும் உள்ளன. நச்சுப்பொருட்களும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய, நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய தாவர இரசாயனங்களை அதிகமாகக் கொண்டிருக்கக் கூடியனவும், விரும்பக்கூடிய […]

மேலும் பார்க்க

முஸ்லிம்களிடையே வழக்கிலுள்ள தமிழ்க்குடிகள்

12 நிமிட வாசிப்பு

இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மொத்தமாக மத்தியகிழக்கில் இருந்தோ இந்தியத்துணைக்கண்டத்தில் இருந்தோ வந்து இலங்கையில் குடியேறியவர்களல்ல. அவ்வாறு குடியேற்றத்தின் பொருட்டே அவர்களின் முழு நிலவுகையும் காணப்பட்டிருக்குமாயின் அவர்கள் இலங்கை சனத்தொகையில் பத்து சதவீதத்தை அண்மித்துக் காணப்படுவது சாத்தியமற்றதாகும். அவர்கள் இலங்கையின் பூர்வகுடிகளிலிருந்து திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதன் மூலமாகவும், இஸ்லாமிய வாழ்க்கைநெறியை பின்பற்றத் தொடங்கிய பூர்வகுடிகள் மூலமாகவுமே இது சாத்தியப்பட்டிருக்கின்றது.  இவர்களின் தாய்மொழி தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் […]

மேலும் பார்க்க

இதயத்தில் ஓர் இடம் கேட்ட அமெரிக்க மிசனரிகள்

10 நிமிட வாசிப்பு

இன்று இலங்கையின் முதன்மைத் தேசிய மருத்துவமனையாக விளங்கும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலே வருடாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களது எண்ணிக்கையானது நாட்டிலுள்ள ஏனைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரைவிட அதிகமாகும். ஆனால் இலங்கையில் ஐரோப்பிய மருத்துவம் அறிமுகமான 19 ஆம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையிலே (யாழ். போதனா மருத்துவமனை) இலங்கையின் எந்த ஒரு மாகாண மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுவோரைவிட அதிகளவானோர் சிகிச்சை பெற்றனர். மருத்துவர் […]

மேலும் பார்க்க

இஸ்ரேல் நாட்டின் பாலுற்பத்தி துறை சொல்லும் செய்தி

13 நிமிட வாசிப்பு

இஸ்ரேல் எனும்போது  எமக்கு உடனடியாக பல அரசியல் விடயங்கள் நினைவுக்கு வரும். நீண்டகால பலஸ்தீன – இஸ்ரேல் மோதல், ஹிட்லரின்  யூத இனச் சுத்திகரிப்பின் பின் உருவாகிய நாடு, பலம்மிக்க இஸ்ரேலிய இராணுவம் என பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றைவிட விவசாயத்தில், குறிப்பாக விலங்கு வேளாண்மையில் இஸ்ரேலியர் அடைந்திருக்கும் சாதனையை  எம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைய நிலையில் ஒரு இஸ்ரேலியப் பசு, 305 நாட்களைக் கொண்ட […]

மேலும் பார்க்க

தக்காளி : இடைக்காலத்தில் வந்துசேர்ந்த இன்றியமையா உணவு

11 நிமிட வாசிப்பு

காய்க்குக் கபம்தீரும் காரிகையே இவ் இலைக்குவாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் – தீக்குள்அணக்கிடு வற்றல் உறுபிணியோர்க்கு ஆகும்மணத்தக்காளிக்கு உள்ளவாறு – பதார்த்த குணவிளக்கம் – மணத்தக்காளியின் காய்க்கு சளி தீரும். இதன் இலைக்கு வாயில் ஏற்படும் கிரந்தி, சூடு என்பன மாறும். இதன் வற்றல், நோயாளிகளுக்கு நல்ல பத்திய உணவாகும் என்பது மேற்காணும் பாடல் தரும் செய்தி. ‘மணத்தக்காளி’ என்னும் ஒரு கீரை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் […]

மேலும் பார்க்க

பிராமண மத வரம்பைக் கடந்த மக்கள் களம்

18 நிமிட வாசிப்பு

இப்போது கடந்துகொண்டிருக்கும் வரலாற்று மாற்றம் பற்றித் தெளிவு பெறுவதில் சிரமம் இருக்க இயலும். ஏற்படவுள்ள மாற்றத்தின் பேறாக வெளிப்படும் புதிய வாழ்முறையின் தாற்பரியங்களை வைத்தே பலரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது எனக் கண்டறிய வாய்ப்புப் பெறக்கூடும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்தேறிய மாற்றத்தைக் கணிப்பதில் கூடத் தெளிவீனம் உள்ள நிலை ஆய்வுலகில் பல இடங்களில் உள்ளன. பக்தி இயக்கம் பற்றிய கணிப்பு அவற்றுள் ஒன்று. பக்திப் பேரியக்கத்தின் ஊடாக மேற்கிளம்பி வந்தது […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் II

16 நிமிட வாசிப்பு

மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமோ முழுக்க முழுக்க செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரின் படைப்பாக இருந்துவிடமுடியாது என்பதற்கான சில சான்றுகளை கடந்த தொடரில் பார்த்தோம். ஆனால், ஈழத்துப் பூராடனாரின் வாதங்களிலிருந்து நாம் முற்றிலும் மறுக்கமுடியாதிருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால், இன்று மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலில் கணபதிப்பிள்ளை புலவரின் தாக்கம் ஓரளவுக்கேனும் இருக்கிறது என்பதைத் தான். அவரிடமிருந்தே எஃப். எக்`ச். சீ. நடராசா பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியத்திற்கான […]

மேலும் பார்க்க

தொழில்களில் வெற்றிபெறத் தேவையான பழக்கவழக்கங்கள்

9 நிமிட வாசிப்பு

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”– திருக்குறள் (664) – மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். இன்றைய உலக – உள்ளூர் சமூகங்களை அவதானித்தால் எமது கண்ணில் தெரிவது வெற்றிபெற்றவர்களின் கடைசி முடிவுகளே. இது ஐந்தாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வாக இருக்கலாம். அல்லது […]

மேலும் பார்க்க

நிலவியலின் துயரம்

19 நிமிட வாசிப்பு

இந்தப் புத்தகத்தின் அரைவாசிப்பகுதி  நூலாசிரியரின் இளமைக்காலம், குடும்பம், அவரது கிராமத்தின் வாழ்வுச் சூழல், 1980 களின் நடுப்பகுதி வரையான இலங்கைத்தீவின் அரசியல், போராட்ட நிலைமைகள் குறித்த விடயங்களைப் பேசுகின்றது. மீதமுள்ள பகுதி வெளிநாடு ஒன்றுக்குப் பயணமாகும் இலக்குடனான முன்னெடுப்புகள், அதில் எதிர்கொண்ட சிக்கல்கள், போராட்டங்கள் என்பவற்றைப்  பகிருகின்றது. ஈழத்திலிருந்து 1980 களின் நடுப்பகுதியில் போர் மற்றும் குடும்பப் பொருளாதார நிலைமைகள் காரணமாகத் தனது 17 ஆவது வயதில் புலம்பெயர்ந்த இளைஞனைப் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்