இலங்கை முஸ்லிம்களின் மற்றொரு உப மரபினமாக போஹ்ராக்கள் விளங்குகின்றனர். ‘போஹ்ரா’ (Bohras) என்ற சொல்லின் பொருள் ‘வர்த்தகர்’ என ஒரு ஆய்வுத்தகவல் குறிப்பிடுகிறது. அவர்களது சமூக வாழ்வியலுக்கும் இந்தச் சொல்லுக்குமான தொடர்பு உண்மையில் ஆழமானது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் ‘போஹ்ரா’ என்பது ஒரு காரணப்பெயராகவே இந்த சமூகத்தினருக்கு சூட்டப்பட்டிருப்பதை அவர்களது உலக வர்த்தகச் செயல்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. உலகின் பல பாகங்களிலும் சிறப்பான முறையில் வர்த்தகம் மேற்கொள்கின்ற ஒரு சமூகப்பிரிவினராகவே […]
ஆங்கிலமூலம் : மைக்கல் பாங்ஸ் யாழ்ப்பாணக் கிராமங்களின் கட்டமைப்பு தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சாதிக் கட்டமைப்பில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. யாழ்ப்பாணக் கிராமங்களின் கட்டமைப்பு என்னும் விடயம் பற்றிய இப்பகுதியில், இவ் வேறுபாடுகள் ஒப்பீட்டு முறையில் சுட்டப்படும். யாழ்ப்பாணக் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பு (INTERNAL ORGANISATION) தஞ்சாவூரின் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பிலிருந்து வேறுபட்டது. பிராமணர்களிடையே நிலவும் உட்சாதிப் பிரிவுகள் என்ற விடயத்தில் தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. யாழ்ப்பாணத்தில் […]
ஸ்பானியாவில் வரலாற்றுத் தேசிய இனங்களது சுயாட்சியின் 25 ஆவது ஆண்டு நிறைவு 2004 இல் கொண்டாடப்பட்டது. அப்போது பஸ்க், கற்றலோனியா, ஹலீசியா என்பன தமது அதிகாரப் பகிர்வு அனுபவங்களை மீளாய்வு செய்தன. ஐரோப்பிய சமூகத்துடன் ஸ்பெயின் தன்னை இணைத்துக் கொள்வதற்காகச் செய்த இசைவினைத் தவிர அதன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. சுயாட்சி சமூகங்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுவது இம் மீளாய்வில் அறியப்பட்டது. தமக்குரிய அதிகாரங்களின் அளவு போதியதாக […]
ஒரு நாட்டில் ஒரு நல்ல தலைவன் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அந்த நாடு சீரும் சிறப்பும் பெற்று செழித்து வளரும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு நல்ல தலைவனை இழந்து ஒரு கொடுங்கோலனின் ஆட்சியில் ஒரு நாடு விழுந்தால் அந்த நாட்டின் மக்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதற்கும் வரலாற்றிலிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும் . இந்த வரலாறுகள் எழுதப்படுவதற்கான முக்கியமான காரணமே அவற்றில் இருந்து நாம் […]
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் மற்றுமொரு வாய்ப்புமிக்க வளமாகக் காணப்படும் கால்நடைத் துறையில், இப்பிரதேசத்தில் காணப்படும் நிலவளம் முக்கிய ஆதாரமாகக் காணப்படுகிறது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 15.2 சதவீதத்தைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினதும் 13.5 சதவீதத்தைக் கொண்ட வடக்கு மாகாணத்தினதும் நிலப்பரப்புக் கூட்டுத்தொகை 28.7 வீதமாகக் காணப்படுகின்றது. இந்த அதிகளவான நில அமைவின் காரணமாக திறந்தமுறைக் கால்நடை வளர்ப்புப் பாரம்பரியத்தைக் கொண்ட கால்நடைத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. கால்நடை வளர்ப்புத் துறையின் ஆதாரத்துடன் மேலதிக […]
அறிமுகம் காலனித்துவ ஆட்சியின் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் பெருந்தோட்ட விவசாய முறையொன்று தோன்றி வளர்ந்தது என்பதும், இன்று வரையும் அது எமது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வகித்து வருகின்றது என்பதும் யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்விவசாய முறையின் பிரதான உற்பத்தி அலகாகவிருக்கும் தோட்டங்கள் முக்கியமானதொரு தாபன அமைப்பாக இன்று விளங்குகின்றன. பெருமளவு எண்ணிக்கையான தொழிலாளரைக் கொண்ட அமைப்பாக இருந்து வரும் அதேவேளையில் இவை தோட்டங்களில் […]
கடலட்டைகள் என்பன ஹோலோதுரைடியா Holothuroidea உயிரியல் வகுப்பின் கீழ் உள்ள “விலங்குகளில்” மிகவும் மாறுபட்டதான, சந்தைப் பெறுமதி மிக்கதும் அழகானதுமான உயிரினங்களாகும். இவை சக உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உயிரிகள். வழமையாக சேற்று மணல் மற்றும் கடல் அறுகுகள் – கடற்புற்கள் விளைந்திருக்கும் கடலடித்தளங்களையே இவை தமது வாழ்விடமாக கொண்டுள்ளன. அதேவேளை, மணல்களும் – கற்களும், முக்கியமாக பவளப் பாறைகளுக்கு மத்தியிலும் இவை ஆழ்கடலில் வாழ்கின்றன. இவற்றின் நீளம் சில […]
அறிமுகம் இலங்கையின் விவசாயம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியாமான பொருளாதாரத்துறை. அந்நிய சக்திகள் இலங்கையில் காலூன்றுவதற்கு முன்னர், மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களின் (இன்றைய காலத்தில் அரசியல்) தலையீடு இலங்கை முழுவதும் உணவுப் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு விவசாயத்துறையை வளர்த்தது. ஆனால் அந்நியர் ஆட்சிக்குப் பின்னர் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசாக மாறியது முதல் இலங்கையில் காலம் காலமாக நிகழ்ந்துவரும் அரசியல் தலையீடு நாட்டின் […]
ஒரு விமர்சன அறிமுகம் பத்தினி வழிபாடு கேரளத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக் குடியேற்றம் 12-14 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. இந்தக் குடியேறிகள் தற்போதைய வகைப்படுத்தலாக அமையும் மேல் மாகாணம், தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் ஆகிய இடங்களில் குடியேறினர். இவர்கள் சிங்கள மொழி பேசுவோராகவும் பௌத்தர்களாகவும் காலப்போக்கில் மாறினர். இவ்வாறாக அவர்கள் பௌத்த – சிங்களப் பண்பாட்டில் தம்மைக் கரைத்துக் கொண்டனர். கேரளத்தில் இருந்து […]
1838.11.29 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்த மருத்துவர் எட்வின் லோசன் கொச் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணத்தில் பயின்று தனது 20 ஆவது வயதில் அரச புலமைப்பரிசிலைப் பெற்று கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவப் பட்டம் பெற்றார். இவர் கொழும்பு மருத்துவபீடத்தின் ஆரம்ப விரிவுரையாளர்களில் ஒருவராகவும் இதன் 2 ஆவது அதிபராகவும் கடமையாற்றினார். 1870 இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மருத்துவபீடத்தின் முதலாவது அணி மாணவர்களது 2 ஆவது விரிவுரையின் போது உரையாற்றிய மருத்துவர் […]