யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சியில் நாவலரது காலப்பகுதியை கணிசமான கவன ஈரப்புக்கு உட்பட்டதாகக் கொள்ளலாம். நாவலர் வாழ்ந்த காலப் பின்னணியும் சமய இயக்கங்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பெருக்குவதற்கு உதவின. இக்காலத்தில் மக்களின் கல்வியை ஓங்கச் செய்வதற்கு சமய நிறுவனங்கள் சிறந்த சாதனங்களாக விளங்கின. பப்டிஸ்ட் மிஷன் (Baptist Mission), வெஸ்லியன் மிஷன், அமெரிக்கன் மிஷன் ஆகிய சமய நிறுவனங்களின் தொண்டர்கள் இக்காலத்தில் இலங்கைக்கு வந்து சமயப் பணியினை ஆற்றினார்கள். இக்காலத்தில் […]
கோட்டைக்குள் மறைந்து காணப்பட்ட ஆலயங்களின் அழிபாடுகள் கோட்டை மீள் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்து வரும் வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆதாரங்களுள் 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வழிபாட்டிலிருந்த இந்து ஆலயங்களின் அழிபாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு கோட்டைக்கு அயலில் உள்ள தீவுகளிலும், கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட கோறல் கற்கள் பயன்படுத்தியதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் கோறல் கற்களுடன் எந்தவித […]
இந்த நாட்டை இரண்டு கூறுகளாக்கி ஒரு தரப்பில் தமிழர்கள் மறுதரப்பில் சிங்களவர்கள் என்று கபடி களமாக்கி ஒருவர் காலை மற்றவர் வாரிவிட்டு குப்புற தள்ளி மிதிக்கும் நிலைமையை தோற்றுவித்த பெருமை முற்றிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும். அதற்கான ஆடுகளத்தைத் தயாரித்து அமைத்தவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா என்ற மக்கள் ஐக்கிய கட்சியின் (M.E.P) தலைவர் ஆவார். இவர் இனவாதம் என்ற தீப்பந்தத்தை ஆயுதமாகக் கையில் ஏந்தி 1956 […]
அது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. ஈழத்துத் தமிழறிஞர்கள் நாடு, தேசியம், இனம் போன்ற விடயங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டம். வட இலங்கையில் இருநூறாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிஞர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை, வையாபாடல் முதலிய பிராந்திய இலக்கியங்களை வைத்து, அப்போது வட இலங்கை வரலாற்றை எழுதும் முயற்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. திருகோணமலை சார்ந்து கோணேசர் கல்வெட்டு, கைலாசபுராணம், கோணை அந்தாதி முதலிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தன. […]
ஏகாதிபத்தியப் பிணைப்பைப் பூரணமாகத் தகர்த்து விடுதலைத் தேசிய அரசியல் முன்னெடுப்பு வாயிலாகப் புத்துலகப் பொதுவுடைமையை வென்றெடுப்பதாக இன்றைய வரலாற்று மாற்றம்; அத்தகைய மார்க்கத்தைக் கண்டறிவதற்குத் தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கமும் தொடர் விருத்தியிலான மாற்றச் செல்நெறிகளும் வழிகாட்ட இயலும் வகையில் முழுச் சமூக சக்திக்கான இயங்கு முறையை தமிழர் வரலாறு மட்டுமே எடுத்துக்காட்டி வந்துள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தும் தேடலுக்கு உரியது இந்தத் தொடர். ஏற்றத்தாழ்வுச் சமூக உருவாக்கத்தில் கிரேக்க, ரோம […]
பெருந்தோட்டத்துறையில் வேதனப் பொறிமுறைகள் உலகில் செயற்பட்டுவரும் ஏறக்குறைய அனைத்து விவசாயக்கம்பனிகளுமே தமது ஊழியருக்கு நாளாந்த வேதனங்களைச் செலுத்தும் ஒரு முறையையே பின்பற்றிவருகின்றன. பெருந்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இதற்கு விதிவிலக்கன்று. இந்தக்கம்பனிகள் எங்கெங்கு உருவாக்கப்பட்டனவோ அங்கெல்லாம் ஊழியருக்கு அவை நாளாந்த வேதனங்களையே செலுத்திவருவதோடு மலிவான ஊழியம் அவற்றின் ஒரு விசேட பண்பாக இருந்து வருகின்றது. அதாவது, தொழிலாளருக்குச் செலுத்தப்படும் வேதனங்கள் குறைந்தமட்டத்திலேயே பராமரிக்கப்பட்டதோடு, நெடுங்காலத்திற்கு அவை தேக்கநிலையிலும் வைக்கப்பட்டன. […]
கோட்டைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள் யாழ்ப்பாண நகரின் தொன்மையும் சிறப்பும் பற்றிய வரலாற்று ஆய்வில் அந்நியரான போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையுடன் முதன்மைப்படுத்திப் பார்க்கும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஆனால் 2010 இல் இருந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கோட்டை அமைந்த இடத்திற்குத் தொன்மையான தொடர்ச்சியான நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு என்பதும், அவ்வரலாற்றுப் பின்புலம் தான் இவ்விடத்தைக் கோட்டை கட்டுவதற்குப் பொருத்தமான […]
ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க இலங்கையில் மாகாணசபை முறை 13 ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்டபோது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு அலகாகவும் ஏனைய 7 மாகாணங்கள் தனித்தனி அலகுகளாகவும் கொள்ளப்பட்டன. இந்த எட்டு அலகுகளிற்கு இடையிலும் அதிகாரப்பகிர்வு சமத்துவமான முறையில் பகிரப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் மாகாணசபையிடம் சமமான முறையில் பகிர்தல் சமத்துவமான அதிகாரப்பகிர்வு எனப்படும். இதற்கு மாறான […]
தமிழ்மக்களின் உணவுப்பதார்த்தங்கள் தொடர்பான பழைய நூல்களுள் ஒன்றில்கூட மரவள்ளிக்கிழங்கு இடம்பெற்றிருக்க முடியாது. வள்ளி அல்லது வல்லி என்பது படரும் கொடியைக் குறிக்கும். வள்ளி என்றால் நிச்சயமாக அது நிலத்தின் மேலே கொடியும் கீழே கிழங்கும் உள்ள தாவரம் ஒன்றையே குறிக்கும். சங்ககாலத்தில் குறிஞ்சிநில மக்களின் பிரதான உணவுகளுள் ஒன்று வள்ளிக்கிழங்கு. பிற்காலத்தில் நிலத்தின் கீழே கிழங்கும் மேலே மரமும் கொண்டதாக ஒரு பயிர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு ‘மரவள்ளி’ என்று பொருத்தமான […]
உலக நாடுகள் பலவற்றின் வரலாறு பற்றிய ஆரம்பகால ஆய்வுகள் பெரும்பாலும் அந்நாடுகளில் நிலவிய வரலாற்று வாய்மொழிக் கதைகள், வட்டார வழக்கில் உள்ள மரபுவழிச் செய்திகள், ஐதீகங்கள், பாரம்பரியச் சடங்குகள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவற்றின் அடியாகக் தோன்றி வளர்ந்த வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதில் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தோன்றி வளர்ந்த தொல்லியல், மானிடவியல், வரலாற்று மொழியியல் முதலான ஆய்வுகளுக்கு முக்கியமான இடமுண்டு. இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதை […]