மனித இனத்தின் தோற்றத்தில் இருந்தே மொழியின் தோற்றத்தினையும் கருத்திற்கொள்ள முடியும். மனிதத் திரள்களின் தொடர்பாடல் ஊடகமாக மொழியானது ஆரம்பத்தில் இருந்து பயன்பட்டு வருகிறது. இது தொடக்கத்தில் சைகை, ஊமத்தில் இருந்து பின்னர் ஒலிவடிவம், எழுத்து வடிவம், பேச்சு வழக்கு, இலக்கண வழக்கு என்னும் படி நிலைகளை மனித வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் கண்டு கொண்டது. இவ்வாறான மொழியினை “ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு […]
1950 களைத் தொடர்ந்து அடுத்துவந்த ஒரு தசாப்த காலம் இந்த நாட்டில் வசித்த இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை பூர்வீக தமிழர்களுக்கும் கூட சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்தது போல் சிம்மசொப்பனமாகவே அமைந்தது. மேற்படி இரண்டாவது பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 237,034 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே பிரஜா உரிமை கிடைத்தது. இந்தக்காலத்தில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு […]
அறிமுகம் இலங்கை போன்ற இயற்கை வளங்களையும், பொருத்தப்பாடான காலநிலையையும் செழிப்பாகக் கொண்ட ஒரு வளர்ந்துவரும் சிறிய தீவு நாட்டுக்கு விவசாயம் சமூக-பொருளாதாரத்தின் நிலைத்திருப்புக்கும், வேலைவாய்ப்பு, உணவு மற்றும் போசாக்கை வழங்குகிற ஒரு “முழுமையான” வகிபாகத்தையும் கொண்ட துறையாகும். மேலும் விவசாயத்துறை தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முதுகெலும்பாகவும் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்து பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருவாய் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற […]
ஒரு பக்கம் இந்தியக் கடற்கொள்ளை மக்களைப் பட்டினியில் வாட்ட, சீனத் திருடர்கள் இலங்கையின் வடமேற்குக் கரையின் வளங்களைக் கொள்ளையடிக்க உள்ளூர் அரசியல் சதிகாரர்களின் வழிகாட்டலுடன் வடக்கு மாகாணத்தை நோக்கி வந்தார்கள். இதைப் பற்றி பேசுவதற்கு முன்பு இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான அரசியல் – பொருளாதார வரலாற்றையும் அதன் உள்ளடக்கத்தையும் மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது. சீன – இலங்கை உறவு ஆழமான, வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உதாரணமாக கி. பி. […]
பன்றி “ஊர்ப்பன்றி நிணநெய் யுண்ணி லுறுந்திரி தோசம் புண்ணேதீர்க்கருங் கரப்பன் வெட்டை தினவொடு மற்று முண்டாம்ஈர்த்ததிடும் வரட்சி மூல மிளைப்பும்போ மதுர மாகும்கார்க்காட்டுப் பன்றி தன்னின் கடுநிணங் கரப்பன் வாயு” – பக்.86, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி ஊர்ப்பன்றி இறைச்சி மற்றும் அதன் கொழுப்பு என்பனவறைத் தொடர்ந்து உண்டுவந்தால், திரிதோசங்களும் தோசமடையும். இதனால் பலவிதமான தொற்றா நோய்களும் ஏற்படும். எளிதில் தீர்க்கமுடியாத புண்ணுடன் கூடிய கரப்பன் என்னும் தோல் நோயானது, […]
இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள் அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள் அல்ல. இலங்கை சிலசமயங்களில் தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள் இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது. அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) […]
ஆங்கிலத்தில் : எச். எல். செனிவிரத்தின 1943 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவர் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார். பௌத்த பிக்கு ஒருவர் தேர்தல் அரசியலில் இறங்கிய முதலாவது உதாரணமாக இது அமைந்தது. ஆயினும் அவர் அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 1977ம் ஆண்டில் தான் முதன்முதலாக பிக்கு ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரும் அந்தத்தேர்தலில் தோல்வியுற்றார். அதன் பின்னர் பத்தேகம சமித்த என்ற பௌத்த […]
இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பாரம்பரியக் கலாசாரம் என்பது தென் இந்தியத் தமிழ்க் கலாசாரமேயாகும். இது ஒரு வகையில் இலங்கையில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களின் தனித்துவமிக்க தமிழ் இனமாக அடையாளப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவர்கள் பேசுகின்ற மொழி, உறவுமுறைகள், தெய்வ வழிபாடுகள், திருமணம் போன்ற சடங்கு முறைகள் வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற பூர்வீகக்குடிகளான இலங்கை தமிழர்களில் இருந்து வேறுபட்டே இருக்கின்றன. அவ்வாறு இலங்கைத் தமிழர்களில் இருந்து வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியத் […]
உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேண, இணையவழி ஊடகங்கள் வழிகோலின. இணைய வழி ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்கள் மற்றும் குயர் மக்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க […]
சில வருடங்களுக்கு முன் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது நடைமுறையிலுள்ள ஐந்து சட்டங்களைத் திருத்தம் செய்வதன் [Amendment] மூலம் சட்ட ரீதியாக மாடறுப்பைத் தடை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்குரிய அனுமதியையும் அவர் பெற்றதோடு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முழு வீச்சில் இடம்பெற்று, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற காரணத்தால் அந்தத்திட்டம் சற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு பொதுத் தேர்தலில் ஆளும் பொதுஜன […]