இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும். இந்த மாடுகளைக் கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது. [இலங்கையைப் பொறுத்த வரையில் வருடாந்தம் 1250 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுகின்ற போதும் உள்ளூரில் 500 மில்லியன் லீட்டர் அளவிலேயே பால் உற்பத்தி செய்யப் படுகிறது. மிகுதி 750 மில்லியன் லீட்டர் பால் வெளிநாடுகளில் இருந்தே […]
இந்திய வம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் ஸ்தாபனப்படுவதற்கு முன்னரே அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பிலும், சர்வதேச ரீதியாகவும் பலமாக குரல் எழுப்பப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இலங்கையில் மாத்திரம் அன்றி பல்வேறு உலக நாடுகளிலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன. அவற்றுள் அடிமைத்தனத்துக்கு எதிரான சங்கம் (anti slavery society), பிரித்தானியாவில் இயங்கிய […]
அறிமுகம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் (ஆய்வுகளில் போதாமை இருக்கிற போதிலும்) ஆய்வுகளின் அளவுக்கு அவர்களின் இனத்துவ மரபு, சமூகவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் குறித்து முஸ்லிம் வரலாற்றாய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சார்பியத்தன்மையும், மதப் புனித நோக்குகளையும் கடக்க முடியாத அகச் சிக்கலுடன் இருப்பவை. இந்த ஆய்வுகளை நோக்கும் போது முஸ்லிம்கள் குறித்து ஓரளவு அறிவியல் தன்மையுடன் கூடிய ஆய்வுகள் இங்கு நிகழவில்லை […]
மரபுரிமை பற்றிய பாரம்பரிய உரையாடல்கள் மரபுரிமைகளை இயற்கை மரபுரிமை, பண்பாட்டு மரபுரிமை என்று பாகம்பிரித்துக் கொள்ளும். ஆனால் அண்மைய பத்தாண்டுகளில் மரபுரிமை பற்றிய கற்கைப்புலம் பெருவிரிவு கண்டுள்ளதுடன் உள்ளடக்க ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அது மேலும் செழுமை பெற்றுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பெருவெடிப்பு மரபுரிமைப் புலத்தின் சாத்திய எல்லைகளை அகலித்துவிட்டுள்ளது. அவ்வகையில் உருவான புதிய சாத்தியமும், பாகமுமாக எண்மிய மரபுரிமை (digital heritage) அமைகிறது. எண்மிய மரபுரிமை என்பது […]
பெண்களது கடந்தகால – நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர்தினம் (International Women’s Day) முதன்முதலாக 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமுடிவில் 2011 ஆம் ஆண்டு அது நினைவுகூரப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் அதேதினத்தில் பூகோளரீதியாகத் தொடர்ந்து அது கொண்டாடப்பட்டும் வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும்போது ஏதாவதொரு முக்கிய விடயத்தைக் கருப்பொருளாக வைத்தே அத்தினம் கொண்டாடப்படும். அண்மைக்காலங்களில் பெண்களது சமூக – […]
இலங்கையில் இந்து மதத்துக்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும், அந்த மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது. சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு – […]
பிரித்தானியர் இலங்கையின் மன்னராட்சி முறைமையினை ஒழித்து, ழுழு நாட்டையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்ததுடன், அவர்களின் ஏகபோக நலனுக்காக பல்வேறு மாற்றங்களை செய்திருந்தமையினை முன்னைய கட்டுரையில் அவதானித்திருந்தோம். அதன்தொடர்ச்சியினை இனி பார்க்கலாம். 1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் […]
ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை இலவச பொது ஊழியம் சாதி வழமைகளை மீறக்கூடாது என்ற கடும்போக்கிற்கு உதாரணமாக திகழும் இன்னொரு பிணக்கு 1830 ஆம் ஆண்டில் எழுந்ததை சுட்டிக்காட்டலாம். மீன்பிடித்தொழில் செய்வோரில் ஒரு பிரிவினரான திமிலர் என்ற சமூகப்பிரிவினரிடம் மணியகாரர் என்னும் உயர்நிலை அதிகாரி ஒருவர் பொது வேலையை இலவச ஊழியமாக வழங்கும்படி கட்டளையிட்டார். யானைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான இறங்குதுறை அமைப்பதற்கு பனங்குற்றிகள் தேவைப்பட்டன, […]
உளுந்து, சிறுபயறு, பயறு, கடலை, காராமணி (கௌபி), துவரை, கொள்ளு, எள் என்பன பொதுவாக எமது பாரம்பரிய உணவுகளில் பாவிக்கப்படும் பருப்பு வகைகளாகும். இவற்றைவிட மொச்சை, பட்டாணி, பொட்டுக்கடலை போன்று வேறுவகை பருப்புவகைகளும் பாவனையில் இருந்துவருகின்றன. மேற்படி பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தனவாகவும், பெரும்பாலும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. காலை, இரவு உணவுகளாக, சிற்றுண்டி வகைகளில், மதிய உணவுடன் கறிகளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புரதச்சத்து அதிகம் கொண்டிருக்கின்றமையால் […]
வாய்விளங்கம் போய்விளங்கும் வாயுவையே போக்கும்புகல ரியவாய்விளங்கம் தனையே வகையாக்கேள்-நீவிளங்கஎண்பது வாதம் போம் ஏந்திழையீர்கேளீர்உண்பதற்கு நல்லதென்றே யோது இதன் பொருள்: வாய்விளங்கம் வாய்வைப்போக்கும். எண்பது வகையான வாதங்களையும் போக்கும். உண்பதற்கும் நல்லது. வாய்விளங்கத்தின் மிக முக்கியமான மருத்துவப்பயன் ஒன்றை இரசவர்க்கம் குறிப்பிடத்தவறிவிட்டது. நாடாப்புழு (tapeworm), கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்களுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. உலகப்பிரசித்திபெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செற்’ (The Lancet) 1887 ஆம் ஆண்டிலேயே நாடாப்புழுவுக்கு வாய்விளங்கம் […]