1950கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார். இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் […]
பெருங்கற்காலப் பண்பாடும் தற்காலத் தமிழர் பண்பாடும் தமிழ் சிங்கள மக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் மொழிகளின் வேறுபாட்டால் தோன்றியதெனக் கூறும் அறிஞர்களில் சிலர் இனத்தால் அவர்களின் மூதாதையினர் இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர். ஆயினும் அம்மக்களின் பண்பாட்டுடன் சிங்கள மக்களுக்குள்ள தொடர்புகளும், நினைவுகளும் பௌத்த மதத்தின் வருகையோடு தோன்றிய புதிய பண்பாட்டால் மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டன என்றே கூறலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அப்பண்பாட்டு அம்சங்கள் சிறப்பாகப் பெருங்கற்காலப் […]
கோ. நடேசய்யரின் அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரேயே நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மிக உரத்துக் குரல் கொடுத்தவர் சேர். பொன். அருணாசலம் (1853 – 1924) என்றால் அது மிகையாகாது. இவரது கருத்துக்கள் மிக ஆணித்தரமாகவும் உச்சந்தலையில் சம்மட்டி கொண்டு ஓங்கி அடிப்பது போலவும் காணப்பட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துக்கள், பிரித்தானிய பாராளுமன்ற […]
வரகு, கம்பு, சோளம், சாமை, குரக்கன், தினை போன்ற சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சிறுதானியங்கள் பெரும்பாலும் வறட்சியிலும் விளையக்கூடிய பயிர்களாகும். ஏனைய தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். B வகை உயிர்ச்சத்துகளையும், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நாகச்சத்து போன்ற கனிமங்களையும் கொண்டுள்ளன. இதன் மூலம் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகவும், நார்ச்சத்து விற்றமின்கள், கனிமங்கள் போன்றவற்றையும் கொண்டிருப்பதால் சிக்கல் தன்மையுள்ள மாப்பொருளாகவும் (Complex […]
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற” — திருக்குறள் (661) மு.வரததாசனார் விளக்கம்: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே […]
அறிமுகம் மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதன் கூட்டமாக அலைந்து திரிந்து வேட்டையாடி உண்ணுகின்ற வேடுவ நாகரிகத்தில் இருந்து நதிக்கரைகளை அண்டி நிரந்தரக் குடியேற்றங்களை அமைத்து, விவசாயம் செய்து வாழத் தொடங்கியதில் இருந்து மனித நாகரிகத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் வேளாண்மை யுகமும் ஆரம்பமானது. இவ்வாறுதான், மனித நாகரிக வளர்ச்சி உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனைச் சான்றாக வைத்துத் தான் நான் எனது முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன், […]
இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும் இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர். இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு […]
நுழைபுலம் இதுவரை இருந்தவாறு தொடர இயலாத நெருக்கடியான கட்டம் இன்று ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் தகர்க்கப்படும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் பன்மடங்காக அதிகரித்தபடி உள்ளன. இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணி ரஷ்ய – உக்ரேன் போர் என்பதாக ஊடகப் பரப்புரைகள் அமைந்துள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பாவும், நேட்டோ வாயிலாக ரஷ்யா மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக உக்ரேனைத் தளமாகப் பயன்படுத்தும் எத்தனங்களில் முனைந்திருந்த சூழலில் தற்காப்பு யுத்தம் […]
12 ஆம் நூற்றாண்டில் இந்து சமுத்திரத்தில் அதுவரை கடலாதிக்கம் செலுத்திய சோழ சம்ராச்சியம் பலவீனப்பட்டபோது அவர்களது பிடியில் இருந்த கடல் வர்த்தகம் அரேபியர்களினதும் முஸ்லிம்களினதும் கைகளுக்கு மாறியது. ஐரோப்பிய நாடுகளின் கடல் வலிமை ஓங்கியபோது அவர்களது துப்பாக்கிப் பலத்தின் முன்னால் ஆரியர்களின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதலில் போர்த்துகேயர் இலங்கைக்கு வந்தது ஒரு தற்செயலான விடயம். அவர்கள் கடலாதிக்கத்துக்காக அரேபியர்களோடும், இலங்கையிலும் இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட – […]
இலங்கையில் இறக்குமதியாகும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முதல் 380 /= ரூபாவாக இருந்த 400 கிராம் பால்மா இன்று 1160/= வரை அதிகரித்துள்ளது. [ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரிப்பு]. இது சாதாரண மக்கள் நுகரமுடியாத அதிகரிப்பாகும். அத்துடன் வழமையாக கிராமத்தின் பெட்டிக் கடைகளிலும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பால் மாவை நகரங்களின் பிரதான பல்பொருள் அங்காடிகளிலும் பெறமுடியாது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த பல மாதங்களாகவே […]