அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு. வை. சத்தியமாறன் இணையத்தளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் […]
மலாயர்கள் (Malays) இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மலாயர்களாவர். இலங்கைச் சோனகரோடு மத அடிப்படையில் ஒரே சமூகமாக இணைந்து கொண்ட உப மரபினங்களில் மலாயர்களே ஏனைய உபமரபினங்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். இலங்கையில் கிட்டத்தட்ட மலாயர் சனத்தொகை அறுபதாயிரம். நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட இது 0.3 சதவீதமாகும். நாட்டின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட 4 சதவீதமாகும்.[i] இந்த எண்ணிக்கையை ஆசிஃப் ஹூஸெய்ன் 2011 இல் […]
அறிமுகம் இலங்கையில் பிரதேசம் சாராத சமூகங்களில் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தமான பொருளாதாரப் பரிமாணங்களை இந்தக் கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்தச் சமூகம் உற்பத்தி செய்யும் நிதி எவ்வளவு, அபிவிருத்தி நோக்கங்களுக்காக அது முதலீடுகளின் வடிவத்தில் அரசிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுக்கொள்கின்றது என்பதை இந்தக்கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்த அம்சங்களை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்தச் சமூகத்தின் மானுட, சமூக, அபிவிருத்தியை வரலாற்று […]
வடபுல சமூகத்தளத்தில் தன்பாலீர்ப்பை விலக்கப்பட்ட(Taboo) ஒரு விடயமாகப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் திருநர்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் திருநர்களைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இருந்தாலும் கூட எவ்வாறு, தந்தையாதிக்கச் சமூகங்களில் பெண் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்கிறாளோ அதே போல் திருநங்கைகளும் திருநம்பிகளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவதாலேயே பெரும்பாலான திருநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. “அன்று என் தந்தை வார்த்தையாலும் பிரம்பாலும் என்னைத் […]
அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழர் பற்றிக் குறிப்பிடும் இன்னுமோர் கல்வெட்டு துடுவ துலான என்னுமிடத்தில் அமைந்துள்ள தாமரவெவ எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. தாமரவெவ கல்வெட்டும் இலங்கையை ஆட்சி செய்த 2ஆம் சேனன் காலத்தில் (பொ.ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்டுள்ளது. மன்னனின் (2ஆம் சேனன்) 31ஆவது ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. 35 ஆண்டுகள் இலங்கையின் மன்னனாக 2ஆம் சேனன் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கல்வெட்டு 7 […]
தமிழரசுக் கட்சியின் இந்த சமூக சமத்துவமின்மைக்குக் காரணம் அந்தக்கட்சி ஏற்கனவே குறிப்பிட்ட ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்துநிலையின் அரசியல் வடிவமாக இருந்ததோடு, அந்தக் கருத்துநிலையைப் பேணிப்பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகவும் தொழிற்பட்டது. இந்த சாதி மேலாண்மை சிங்கள அரசின் தமிழ் இன, தமிழ் மொழி ஒடுக்குமுறை காரணமாக மூடிமறைக்கப்பட்டு தமிழ் இனம், தமிழ் மொழி எனும் அடையாளத்துக்குள் தமிழர்களை ஒன்று திரட்ட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த வாய்ப்பினை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் […]
மருத்துவர் கிறீனது 2 ஆவது வருகை மருத்துவர் கிறீன் 1862 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் திகதி பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு (ABCFM) எழுதிய கடிதத்தில் தான் யாழ்ப்பாணம் புறப்படுவதற்குத் தயாராகி இருந்தமையைத் தெரிவித்திருந்தார். கப்பல் புறப்படுவதற்காக 5 மாதங்கள் வரை கிறீன் காத்திருக்க வேண்டியிருந்தது. நியூயோர்க்கிலிருந்த கிறீன், 82 வயதான தந்தையிடம் இறுதி பிரியாவிடை பெறுவதற்காக கிறீன் கில்லிற்குச் (Green Hill) […]
கிழக்கிலங்கை, இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்த வாழ்கின்ற பிரதேசமாகும். 2012 ஆண்டு சனத்தொகைக்கணக்கெடுப்பின் பிரகாரம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிக முஸ்லிம் சனத்தொகை சதவீதம் காணப்படுகின்றது[i]. இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுபட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரக்கூறுகளிலிருந்தும் தனித்துவமானதாக காணப்படுகின்றது. கிழக்கில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் தமிழர்களோடு இஸ்லாமிய மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஆரம்பகாலங்களில் கொண்ட திருமணபந்த உறவினாலும், வங்காள […]