கிழக்கு உரோகணத்துக்கு திருத்தமான எல்லை வகுத்து, அதில் சைவத்தமிழ் சமூகமொன்றை உருவாக்குவதற்கான அத்திவாரத்தை இலங்கை மீதான சோழப்படையெடுப்பு ஏற்படுத்தித் தந்தது என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அந்த அத்திவாரத்தின் மீது வலுவான அமைப்பொன்று அடுத்த நூறாண்டு காலத்துக்குள் உறுதியாக எழுவதற்கான வாய்ப்பை வரலாறு அமைத்துத் தந்தது. 1110 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஒருகுடையின் கீழ் ஆண்ட விசயவாகுவின் பிற்காலத்தில், இலங்கையிலிருந்த வணிககணங்களும் வேளக்காரப்படைகளும் அவனுக்கு ஆதரவான மனநிலையில் இருந்தன […]
இலங்கையில் உருவான நவீன இனவாதப்போக்கின் ஊற்றுமூலத்தை, காலனித்துவம் உருவாக்கிய குறை அபிவிருத்தியிலும், பிரித்தானிய காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட மதச் சீர்திருத்த இயக்கங்களிலும், அது கடைப்பிடித்த பிரித்தாளும் ஆட்சி முறையிலும் தேடவேண்டும். அரசியல் கட்டமைப்பில் நிறுவன மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கையில் அரசியல் சக்திகள் உருவாகி, அரசியல் சீர்திருத்த கோஷங்கள் எழுவதற்கு முன்னமே மதப் பீடங்களின் செயற்பாடும் மதச் சீர்த்திருத்த இயக்கமும் அவற்றிற்கு முன்னோடியாக இருந்தன. பிற்காலத்தில் அரசியல் கட்சிகள் அதன் இடத்தைப் […]
ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க ஒற்றையாட்சி முறைக்குள் அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் பற்றி இலங்கையின் 1978 அரசியல் யாப்பு, தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பு என்னும் இரு உதாரணங்கள் குறித்து லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் கருத்துகளை முன்னர் எடுத்துக்கூறி அறிமுகம் செய்தோம். அடுத்து இந்தியாவில் அதிகாரப் பகிர்வு (Devolution of Powers in India) என்னும் விடயம் பற்றி அவரது கருத்துகளை நோக்குவோம். இந்தியாவில் அதிகாரப் பகிர்வு […]
தொடக்கக் குறிப்புகள் இலங்கை போன்ற நாடுகளில், குறிப்பாகப் போருக்குப் பிந்தைய சமூகங்களில் சில அவசியமான அசைவியக்கங்கள் கவனம் பெறாமல் போய்விடுவதுண்டு. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. போர் ஏற்படுத்திய இழப்புகளும் அழிவும், அது விட்டுச் சென்ற விடயங்களும் உடனடியாகக் கவனத்தை வேண்டுவனவாய் உள்ளன. ஆனால் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகம் இதுவரைக் கவனங் குவிக்காதுவிட்ட விடயங்களிலும் கவனம் குவித்தாக வேண்டும். அவ்வாறு கவனத்தை வேண்டுவோர் […]
அனுராதபுரத்தின் வடக்கில், மல்வத்து ஓயாவின் மேற்குப் புறத்தில் தந்திரிமலை எனும் பண்டைய கிராமம் அமைந்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் 18 கி.மீ தூரத்தில் உள்ள ஒயாமடு சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில் மேலும் 14 கி.மீ தூரம் சென்றால் தந்திரிமலையை அடையலாம். இங்கு மலைப்பாறைகள் நிறைந்த சிறிய காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த போதிமரமும், கட்டடங்களும், குடைவரை சிலைகளும், இயற்கையான கற்குகைகளும் காணப்படுகின்றன. இப்பகுதி […]
ஆங்கில மூலம் : கலன சேனரத்ன 1987 நவம்பர் 6 ஆம் திகதி இலங்கையின் உயர்நீதிமன்றின் 9 நீதிபதிகள் கொண்ட மன்று மாகாண சபைகளை உருவாக்குதல் தொடர்பான இரு மசோதாக்கள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றின் முன்னர் வைக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருவன: 1978 அரசியல் யாப்பின் உறுப்புரை 120 இன்படி அரசாங்கத்தால் இயற்றப்படவிருக்கும் மசோதாக்கள் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணுடையனவாக உள்ளனவா, அல்லது முரண்படாதனவாகவும் இசைவானவையாகவும் உள்ளனவா என்பதை […]
‘போர் உலா’ 1990 களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மலரவன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல். ஆங்கிலத்தில் இது ‘War Journey’ என மொழியாக்கம் செய்யப்பட்டு பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 1990 ஆம் ஆண்டு மாங்குளத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமைத் தகர்ப்பதற்காய் மணலாற்றிலிருந்து செல்கின்ற போராளி அணியின் கதையைச் சொல்கின்றது. மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 […]
கறவை மாடு வளர்ப்பு சூழல் மாசடைதலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான தொழிலாக இருக்கிறது என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? உலக வெப்பமுறுதலை ஏற்படுத்தும் மிக முக்கியமான மெதேன் பச்சை வீட்டு வாயுவை வெளியேற்றும் முக்கிய காரணியாக கறவை மாடு வளர்ப்பு அமைகிறது. உலகின் பச்சை வீட்டு வாயு விளைவில் 14.5% கால்நடை வளர்ப்பின் பக்க விளைவுகளாலேயே நிகழ்கிறதாம் (FAO அறிக்கை). மேலும், பல்வேறுபட்ட சூழல் பாதிப்புகளையும் இந்தத் துறை […]
பெயராய்வின் (Onomastics) பிரதானமானதொரு கிளையாக இடப்பெயராய்வு (Toponymy) காணப்படுகின்றது. இது சமூகங்களுக்கிடையேயான வரலாறு, பண்பாடு மற்றும் மொழியியல் தொடர்புகளைப் புரிந்துகொள்ளப் பயன்படும் நுணுக்கமான ஒரு கருவியாகக் காணப்படுகின்றது. இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பரமான சகவாழ்வு, வர்த்தகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரை கிழக்கிலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரிய அசைவுகளின் இன்னுமொரு பக்கமாகும். வரலாற்றுப் பின்னணி இலங்கை முஸ்லிம்கள், பல்வேறு மூலங்களுடன் இலங்கை வரலாற்றில் இணைகின்றனர். […]
ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையைத் தீர்மானித்தல், அதிகாரத்தைப் பெறும் அலகுகளைத் தீர்மானித்தல் என்ற முதலிரு படிநிலைகள் பற்றி இதுவரை எடுத்துக் கூறினோம். பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் அனுபவங்களை உதாரணம் காட்டி இவ்விரு படிநிலைகளிலும் அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க எடுத்துக் கூறினார். இதற்கு அடுத்ததாக நாம் அதிகாரத்தை ஏற்பவர்களின் தேவைகளின் […]