Blogs - Ezhuna | எழுநா

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கோழிப் பண்ணைத் துறையும்

13 நிமிட வாசிப்பு | 25519 பார்வைகள்

கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது. கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது. மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் […]

மேலும் பார்க்க

மதுவுக்குள் சிக்குண்ட மலையகம் : அடிமைப்படுத்தலின் நவீன உத்தி

8 நிமிட வாசிப்பு | 22997 பார்வைகள்

அதிகார வெறியும் ஆடம்பர ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பரித்து இருந்த ஒரு காலகட்டத்தில் மாபெரும் மனிதக் கூட்டங்கள் மந்தைகள் என மண்ணில் வீசப்பட்டிருந்தன. 17 ஆம்,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு […]

மேலும் பார்க்க

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு | 45565 பார்வைகள்

கட்டுக்கரையும் பெருங்கற்காலப் பண்பாடும் கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு  என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் தோன்றிய பெயராகும். ஆதிகால மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தமது […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் – திரிகடுகம்

8 நிமிட வாசிப்பு | 12883 பார்வைகள்

அறிமுகம் சிங்கைச் செகராஜசேகரன் என்ற பெயருடன் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஒருவன் தனது குடிமக்களுள் பெரும்பாலான தமிழ்மக்களின் நலன் கருதி வைத்தியம் மற்றும் சோதிடம் தொடர்பான நூல்களைத் தமிழ்மொழியில் ஆக்கும்படி இந்தியாவில் இருந்து தான் வரவழைத்த பண்டிதர்களைக் கேட்டுக் கொண்டான். இப்பொழுது எமக்குக் கிடைக்கும் செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் இம்மன்னன் காலத்தில் ஆக்கப்பெற்றனவே. கி. பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் […]

மேலும் பார்க்க

ஆபிரகாம் லிங்கனது மறைவும் நேத்தன் உவோட்டின் நினைவுகளும்

10 நிமிட வாசிப்பு | 6929 பார்வைகள்

மருத்துவர் நேத்தன் உவோட்டுக்கு 4 பிள்ளைகள் மூவர் ஆண்கள், ஒருவர் பெண். இவர்கள் அனைவரும் 1834 – 1842 காலப்பகுதியில் வட்டுக்கோட்டையிலே பிறந்தார்கள். பெண்பிள்ளை ஒரு வயதாகும் போது இயற்கை எய்தியது. 1842 இல் பிறந்த இளையமகன் சாமுவேல் ரெட் உவோட் வாஷிங்டனில் உள்ள ஜோஜ்ரவுண் பல்கலைக்கழகத்தில் பயின்று 1868 இல் மருத்துவரானார்(Physician).   1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி அமெரிக்க வரலாற்றில் துயர்மிக்க ஒருநாள்.  அமெரிக்காவில் […]

மேலும் பார்க்க

18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : நிலமும் உழைப்பும் சமூக உறவுகளும் – பகுதி 3

15 நிமிட வாசிப்பு | 15470 பார்வைகள்

ஆங்கில மூலம்: பேராசிரியர் சி. அரசரத்தினம் 1674 ஆம் ஆண்டு டச்சுக்காரர் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளினதும் காணிகளின் உடைமையாளர்கள் பற்றிய பதிவினை மேற்கொண்டனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக்காணிப் பதிவு நடவடிக்கையின் பயனாக 12,000 குத்தகைக்காரர்களின் (Tenants) கணக்கை வேளாளத் தலைமைக்காரர்களால் காண்பிக்க முடியவில்லை. குத்தகைக்காரர்களின் பெயரில் தலைமைக்காரர் காணிகளைத் தமக்கு சொந்தமாக்கி பயனை அனுபவித்தனர் என்பது தெரியவந்தது. காணிப் பதிவு நடவடிக்கையினால் ஏற்பட்ட கசப்புணர்வைப் பயன்படுத்தி வேளாளத் […]

மேலும் பார்க்க

டொனமூர்க் குழுவினரின் சிபார்சுகளும் தமிழ் தலைவர்களின் நிலைப்பாடும்

22 நிமிட வாசிப்பு | 21125 பார்வைகள்

மானிங் அரசியல் அமைப்பில் இருந்த குறைபாடுகளை நீக்கி இலங்கைக்குப் பொருத்தமான ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பொருட்டு 1927ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த டொனமூர் குழுவினர் இரண்டு முக்கிய சிபார்சுகளை முன்வைத்தனர். 1. கல்வித் தகமை, வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாக்குரிமையினை நீக்கி 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை. 2. சட்ட நிருபண சபையில் இருந்து வந்த இனவாரி பிரதிநிதித்துவத்தினை நீக்கி அதற்குப் பதிலாக பிரதேச […]

மேலும் பார்க்க

சுயபுலம்பெயரிகள்: இலங்கைக்கு தாமே வந்த தோட்டத்தொழிலாளர்கள்

8 நிமிட வாசிப்பு | 7917 பார்வைகள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வம்சாவளித் தமிழரின் சனத்தொகையில் கணிசமான அளவுக்கு அதிகரிப்பு காணப்பட்டது. 1871 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 444 ஆக இருந்த இவர்களின் சனத்தொகை 1906 ஆம் ஆண்டு 4 லட்சத்து 36 ஆயிரத்து 622 ஆக அதிகரித்தது.  பின்னர் 1936 ஆம் ஆண்டு 6 லட்சத்து 92 ஆயிரத்து 540 ஆக அதிகரித்தது. இவர்களில் சுமார் 88 சதவீதத்தினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக […]

மேலும் பார்க்க

ஈழத் தமிழ் உணவு மரபுரிமை

7 நிமிட வாசிப்பு | 13130 பார்வைகள்

கொழும்பிலுள்ள பிரபலமான ‘சைவ உணவகங்கள்’ (???) என அழைக்கப்படும்  மரக்கறி உணவுச்சாலையில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் உணவுப் பாணியிற் சமைக்கப்பட்ட அல்லது பாரம்பரிய ஈழத்தமிழ் உணவுகளை இலங்கையில் எங்கு சாப்பிடலாம் என்ற ஒரு உரையாடல் எழுந்தது. அப்படியொரு இடம் இலங்கையின் தலைநகரத்திலோ – தமிழ் மக்களின் பூர்வீகமாக வாழ்ந்து வருமிடங்களிலோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை. சில வேளைகளில் அவ்வகைப்பட்ட அதிகாரபூர்வமான உள்ளூர் உணவுச்சாலை என சில […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள்

13 நிமிட வாசிப்பு | 26065 பார்வைகள்

தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் எனும்போது அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்பவும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவுமே அவர்களது உணவுப்பழக்கங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் காணப்படுள்ளன. இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டாலும் உணவுப்பழக்கவழக்கத்தின் அடிப்படைகள் ஒன்றாகவே இருந்துள்ளன. பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் ஆனது பின்வருவனவற்றில் கூடுதலான கவனத்தை செலுத்தியிருக்கின்றன. 01. இயற்கைசார்ந்த உணவுகளாக இருத்தல் – இயற்கையோடு இணைந்த பசளைகள், பூச்சி கொல்லிகள், மாற்று பயிர்கள் போன்றவற்றுடன் காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்வகைகள், உணவுவகைகள் காணப்படல். பெரும்பொழுதுகளான […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)