வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக விளங்கும் விவசாயத்துறையில் நெல் விவசாயம் பற்றிய செயல் மதிப்பீட்டை கடந்த கட்டுரையில் பார்வையிட்டோம். இம்முறை நெல் தவிர்ந்த பழப்பயிர்கள், மரக்கறிப்பயிர்கள், ஏனைய தானியப் பயிர்கள் மூலம் இவ்விருமாகாணங்களும் கொண்டுள்ள வாழ்வாதார வாய்ப்புகளையும் உணவுப்பாதுகாப்பையும் மதிப்பிடுவதாக இந்த ஆய்வானது இடம்பெறுகிறது. இதில் முதலாவதாக தானியப் பயிர்களின் உற்பத்தி தொடர்பாக நோக்கலாம். வடக்கு – கிழக்கு ஆகிய இரு […]
இன்றைய நவீன காலனித்துவ உலகம் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனித குலத்தின் பாரம்பரியங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளன. இதைத் தாமதமாகவேனும் உணர்ந்துகொண்டே மனிதச் சிந்தனையானது தன் இயல்பான வாழ்க்கை முறையை நோக்கி நகர முற்பட்டுள்ளது. பல இடங்களில் வியாபாரமாகவும், சில இடங்களில் திறமான கருத்தாடலாகவும் இது காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் நவீன உலகில் மானுடவியல் ஆய்வுகளும் ஆய்வாளர்களும் […]
பெருந்தோட்ட மக்களின் வறுமைநிலை இலங்கைவாழ் இந்தியத்தமிழர்களுள் பெரும்பாலானோர் (60 – 65 வீதமானோர்) இன்றும் பெருந்தோட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். எஞ்சியோர் நாட்டின் சில பிரதேசங்களில் செறிவாகவும், வேறுசிலவற்றில் பரவலாகவும் வாழுகின்றனர். தோட்டங்களுக்கு வெளியே வாழும் இவர்களைப் பின்வரும் ஆறு பிரிவுகளுக்குள் அடக்கலாம்: பெரியதும் சிறியதுமான வர்த்தகர்கள் அரச – தனியார் துறைத்தாபனங்களில் தொழில்புரிவோர் தொழில்சார் வல்லுநர்கள் அண்மைக்காலங்களில் தோட்டங்களைவிட்டு வெளியேறி கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சில்லறைக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள், உல்லாசப்பயண விடுதிகள் போன்றவற்றில் […]
புலம்பெயர் மரபுரிமை என்பது தமது தாயகங்களை விட்டு, பிற தேசங்களில் வாழ்பவர்கள் காவிச் சென்றதும், நினைவு கூர்வதும், புலம்பெயர்ந்த நிலங்களில் உருவாக்கிக் கொண்டதும், பிற பண்பாடுகளிலிருந்து உள்வாங்கிக் கொண்டதுமான ஒரு கலப்பொட்டான மரபுரிமையை (hybrid heritage) எடுத்துக்காட்டுவது. இதிற் பெரும்பகுதியாக அவர்களோடு கூடவே புலம்பெயர்ந்த அவர்களது முன்னோர்கள் வழிவந்த பரம்பியப் பயில்வுகள் அவற்றின் முக்கியமான பகுதியாக இருக்கும். இன்னொருவகையில் அவர்கள் காவிச்சென்று அவர்களது தலைமுறைகள்தோறும் கடத்தப்பட்டு வந்த மரபுரிமை புலம்பெயர் […]
கடந்த சில வருடங்களாக கால்நடைகள் மற்றும் மேய்ச்சல் தரை தொடர்பான பல செய்திகளை ஊடகங்கள் வழியாக அவதானிக்க முடிகிறது. செய்தி 1 – மட்டக்களப்பின் எல்லைப் பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுவதாக அங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களும் அரசியல்வாதிகளும் அரசுடன் போராடுவதை காண முடிகிறது. செய்தி 2 – கிளிநொச்சி மாடுகள் முறிகண்டிப் பகுதியில் கூட்டம் கூட்டமாக மேய்க்கப்படுவதாகவும் அவை முறிகண்டிப் பகுதி விவசாய நிலங்களில் மேய்ந்து நாசமாக்குவதாகவும் முறைப்பாடு […]
இந்த நாட்டில் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் முதலாவது பிரசன்னத்தில் இருந்தே அவர்கள் இந்த நாட்டுக்காக வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி உழைக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் உழைத்துத் தந்த உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதி வருமானமுமே இந்த நாட்டை ஆளும் வர்க்கத்தினரும் மேட்டுக்குடி மக்களும் சுகபோக வாழ்க்கை வாழ வழியமைத்துக் கொடுத்தது. ஆனால் அவர்கள் இதுவரை இவர்களை அடித்து உதைத்து நசித்து வந்திருக்கின்றனரேயன்றி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஒருபோதும் செய்து கொடுக்க முன்வரவில்லை. அவர்களது […]
இலங்கை முஸ்லிம்கள் பன்மையான மரபினக் கலவையைக் கொண்டுள்ள, மதரீதியாக தங்கள் இன அடையாளத்தை கட்டமைத்துள்ள இனம் என்பதை கடந்த அத்தியாயங்களில் எடுத்துக்காட்டினேன். முஸ்லிம்கள் எனும் இந்த இன உருவாக்கம் பண்பாட்டு ரீதியானதேயன்றி மரபணு சார்ந்தது அதாவது உயிரியல் சார்ந்தது அல்ல என்பதையும் பார்த்தோம். இலங்கையின் சமூக அரசியல், சமூக சூழ்நிலைகள் மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் அரசியல்ரீதியாக தங்களை ஒரு இனமாக முன்னிறுத்தினர். இன்றுள்ள நிலையில் சிலவேளை கலப்புத் […]
மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். கிறீன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆங்கில மருத்துவ நூல்களை சுதேச மருத்துவர்கள் (சித்த மருத்துவர்கள்) வாங்கி, படித்துப் பயனடைந்தனர். சுதேச மருத்துவர்களிற் சிலர் தங்கள் பிள்ளைகளை மருத்துவர் கிறீனிடம் ஆங்கில மருத்துவம் பயில அனுப்பினர். இவை தனது பணிகுறித்த மனநிறைவை மருத்துவர் கிறீனுக்கு ஏற்படுத்தியது. கிறீன் முதற் 10 ஆண்டுகளில் 4 மருத்துவ அணி மாணவர்களைப் பயிற்றுவித்தார். ரி. கொப்கின்ஸ், […]
தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தை ‘சங்க கால இலக்கியத் தொகுப்புகளின்’ அடிப்படையில் வைத்து ஆய்வுக்குட்படுத்தும் மரபு இருந்து வந்தது; கல்வெட்டுப் படிகள், பண்டைக்கால நாணயங்கள், அதுவரை கண்டறியப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் ஆகியன அதற்கு உதவியாக அமைந்திருந்தன. இலக்கியங்கள் வெளிப்படுத்திய பண்டைக்கால நகரங்கள் எனப் பேசப்படுவன புலவர்களது கற்பனைகள் என கருதப்படும் நிலை இருந்தது. விஞ்ஞானபூர்வமற்ற அதீதப் புனைவுகளைத் தமிழ் ஆர்வலர்கள் ‘வரலாற்று’ முன்வைப்புகளாக வெளிப்படுத்திய நிலையில் அன்றைய நகரங்களும் அத்தகையன என […]
இலங்கையில் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு அதாவது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பின்பு 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலே சில கல்வெட்டுக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. இவை தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன. […]