ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் கனடாவின் பழங்குடி மக்கள் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்ற இரு நாடுகளையும் போன்றே கனடாவும், குடியேறிகள் பெரும்பான்மையினராக அமைந்த குடியேறிகள் சமூகம் (Settler Society ) ஆகும். குடியேறிகள் சமூகங்கள் உள்ள நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர் சுதேசிகளான பழங்குடியினரை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு துரத்தி விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளினர். 1763ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசுப் பிரகடனத்தில் […]
“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” எனும் பேசுபொருளின் முதல் தளமாக “திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு” பற்றிப் பேசி வருகிறோம். இதுவரை பேசப்பட்டு வரும் ‘வர்க்கங்கள் உருவாகிய போது ஏற்பட்ட அவசியம் காரணமாக அரசு தோற்றம் பெற்றது’ என்பதற்கு மாறுபட்ட விடயமாக இங்குள்ள பேசு பொருள் அமைந்துள்ளது. இவ்வகையிலான புதிய தொடக்கம் ஒன்றையும் அதன் தொடர்ச்சியாக மாற்று வடிவிலான இயக்கப் போக்கையும் தமிழ்ப் பண்பாடு வெளிப்படுத்த ஏற்றதான அடித்தளம் […]
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதற்காக கல்விகற்ற இலங்கையர்கள் உரத்துக் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு முன்னர் ஆளுநரிடமும், படைத்தளபதிகளிடமும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன. எனினும் பணம் படைத்தவர்கள், கல்வி கற்றவர்கள், இன ரீதியிலான பிரதிநிதித்துவம் என நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதன்படி, கொழும்பில் வசித்த பணம்படைத்த படித்த இலங்கையர்களுக்கும், இனரீதியாக […]
“தமிழிலக்கியம் பற்றி செக்கோஸ்சிலவக்கிய (செக் குடியரசு) நாட்டு அறிஞர் கமில் சுவலபில் – Kamil Zvelebil அவர்கள் The Smile of Murugan: On Tamil Literature of South India என்ற நூலில் எழுதியது போல் வேறு எவருமே எந்த மொழியிலும் தமிழ்மொழியின், தமிழிலக்கியத்தின் சிறப்பைப் பற்றி எழுதவில்லை.” – பேராசிரியர் பத்மநாதன் முருகனின் புன்னகையில் தவழ்கின்ற தமிழ் The Smile of Murugan: முருகனின் புன்னகையில் 9 […]
அறிமுகம் மனிதன் இந்தப் பூமியில் படைக்கப்பட்டதில் இருந்து சனத்தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த அதிகரிப்பானது குறைந்த வீதத்தில் இருந்தாலும், பின்னர் மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் காரணமாகவும், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்ட மேம்பாடு காரணமாகவும் இறப்பு வீதம் குறைவடைய மனிதக் குடித்தொகையின் வளர்ச்சிப் போக்கு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 1800 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 பில்லியன் (Billion) ஆக இருந்த மனித சனத்தொகை, 123 […]
கடுகுரோகிணி போகாச் சுரமும் போகும் திரிதோஷம்வாகாய் வயிறுவலி வாங்கிடுமே- வேகாக்கடுகுரோகிணியைக் கண்டாலும் மந்தம்போம்பொடுகு சிரங்கும் போம் பொருந்து இதன் பொருள்: கடுகுரோகிணி தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல் மாற்றும். வாதம், பித்தம், கபம் என்னும் முத்தோஷங்களைச் சமநிலையில் பேணும். வயிற்றுவலி, மாந்தம் பொடுகு சிரங்கு என்பனவற்றுக்குக் கடுகுரோகிணி மருந்தாகும். மேலதிக விபரம்: ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) […]
கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி (பாலி – pāli) இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும். பாளிமொழி இலக்கியங்கள் புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை […]
குயர் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் சமூக ஏற்பையும் நோக்கிய ஏராளமான செயற்பாடுகள் மற்றும் குயர் நிகழ்வுகள் உலகளாவிய ரீதியில் நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல்வேறு தளங்களிலும் குயர் மக்கள் தமக்கான வெளிகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதை நோக்கியே நகரசெய்கின்றன. குயர் மக்கள் தமது காதல் வாழ்க்கையிலும் மற்றவர்களைப் போலவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் நிறையப் போராடவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக ஏற்பு நோக்கி இது […]
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே சேருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது. பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “சேருநுவர ராஜதானிய” என […]