Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் பருப்பு வகைகள் – பகுதி 1

9 நிமிட வாசிப்பு

உளுந்து, சிறுபயறு, பயறு, கடலை, காராமணி (கௌபி), துவரை, கொள்ளு, எள் என்பன பொதுவாக எமது பாரம்பரிய உணவுகளில் பாவிக்கப்படும் பருப்பு வகைகளாகும். இவற்றைவிட மொச்சை, பட்டாணி, பொட்டுக்கடலை போன்று வேறுவகை பருப்புவகைகளும் பாவனையில் இருந்துவருகின்றன. மேற்படி பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தனவாகவும், பெரும்பாலும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. காலை, இரவு உணவுகளாக, சிற்றுண்டி வகைகளில், மதிய உணவுடன் கறிகளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புரதச்சத்து அதிகம் கொண்டிருக்கின்றமையால் […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

வாய்விளங்கம் போய்விளங்கும் வாயுவையே போக்கும்புகல ரியவாய்விளங்கம் தனையே வகையாக்கேள்-நீவிளங்கஎண்பது வாதம் போம் ஏந்திழையீர்கேளீர்உண்பதற்கு நல்லதென்றே யோது இதன் பொருள்: வாய்விளங்கம் வாய்வைப்போக்கும். எண்பது வகையான வாதங்களையும் போக்கும். உண்பதற்கும் நல்லது. வாய்விளங்கத்தின் மிக முக்கியமான மருத்துவப்பயன் ஒன்றை இரசவர்க்கம் குறிப்பிடத்தவறிவிட்டது. நாடாப்புழு (tapeworm), கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்களுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. உலகப்பிரசித்திபெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செற்’ (The Lancet) 1887 ஆம் ஆண்டிலேயே நாடாப்புழுவுக்கு வாய்விளங்கம் […]

மேலும் பார்க்க

சில்லறைக்கங்காணி; அடக்குமுறையின் இன்னொரு ஆயுதம்

7 நிமிட வாசிப்பு

கசக்கிப் பிழிந்து, அடக்கி ஆண்டு, வன்முறையின் பிடியில் வைத்திருந்து, தொழிலாளரிடமிருந்து உழைப்பை உச்ச அளவில் பெற்றுக் கொள்கின்ற பாங்கு பெருந்தோட்ட வரலாற்றின் முழுப்பக்கங்களிலும்  ஒரு கறைபடிந்த காரணியாக இருந்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதற்கென பல்வேறு வழிமுறைகளை துரைமார்கள் தேர்ந்தெடுத்து கடைப்பிடித்துள்ளனர் என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. அதிகம் படிக்காத முரட்டு சுபாவமும் சண்டித்தனமும் மிக்கவர்களை துரையாகத் தேர்ந்தெடுத்தல், (எனது கண்டிச் சீமையிலே என்ற நூலில்  “உலகெங்கும் இருந்து […]

மேலும் பார்க்க

தமிழ் வணிகன் பற்றிக் கூறும் பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள்

3 நிமிட வாசிப்பு

வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத் தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன. குடும்பத் தலைவன் விசாகன் பற்றிய இரண்டாவது கல்வெட்டு பெரிய புளியங்குளத்தில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டில் “தமெத […]

மேலும் பார்க்க

வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் உருவாக்கிய மருத்துவர் ஐரா கௌல்ட்

10 நிமிட வாசிப்பு

மருத்துவர் ஐரா கௌல்ட் 1850 இல் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மருத்துவமனை (FINS Hospital – தற்போதைய போதனா  மருத்துவமனை) ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவமனையின் முதலாவது டிஸ்பென்சராகவும் முதலாவது வதிவிட சத்திரசிகிச்சை மருத்துவராகவும் கடமையைப் பொறுப்பேற்றார். (Ira Gould, Alias Antho Simon of Pandaiteripo, First Dispenser and Resident Surgeon of the Jaffna Friend-in-Need Society’s Hospital). மருத்துவர் ஐரா கௌல்ட் 1858 வரை […]

மேலும் பார்க்க

விவசாயமும் தமிழர் வாழ்வியலும்

15 நிமிட வாசிப்பு

அறிமுகம் இந்த உலகில் வாழ்கின்ற மனித இனம் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரீகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. இதில் மூத்த இனமாக தமிழினம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதனால்தான் நாமக்கல் கவிஞர், தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு’ என்று தமிழரை அடையாளப்படுத்தினார். மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்ற வாழ்வியலையும் மற்றும் அனுபவ அறிவியலையும் […]

மேலும் பார்க்க

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 3

20 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் கனடாவின் சமஷ்டியின் வரலாறு ‘பிரிந்து வேறாதல்’ ‘ஒன்றாக இணைதல்’ என்ற இருவேறு செயல்முறைகளும் சமாந்தரமாகச் செயற்பட்டதொன்றாகவே இருந்துள்ளது. சமஷ்டிச் சட்டம், 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில் பின்வரும் மூன்று விடயங்கள் கூறப்பட்டுள்ளன. பெரிய பிரித்தானியாவின் முடிக்குரிய டொமினியன் நாடாக கனடா விளங்குகிறது. கனடா மாகாணம், நோவாஸ்கொட்டியா மாகாணம், நியுபிறன்ஸ்விக் மாகாணம் என்பன கனடா சமஷ்டியில் இணைவதை […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்

6 நிமிட வாசிப்பு

நெல் உற்பத்தியும் முதன்மைத்தன்மையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக  விவசாயத்துறை விளங்குகின்றது.  இவ்விரு மாகாணங்களினதும் பொருளாதாரத்தில் 15 சதவீதமான பங்களிப்பை விவசாயத்துறை வழங்கிவருவதுடன் 65 சதவீதமானோர் வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்கும் துறையாகவும் இது செயற்பட்டு வருகின்றது. நிலப்பாவனை என்ற வகையில்  விவசாயச் செய்கைக்காக கிழக்கு மாகாணத்தின் 42 சதவீதமான நிலப்பரப்பும், வடமாகாணத்தின் 33 சதவீதமான நிலப்பரப்பும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விரு மாகாணங்களின் பிரதான விவசாயப் பயிராக நெல்லே […]

மேலும் பார்க்க

திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு

7 நிமிட வாசிப்பு

 மகத்தான ஒக்ரோபர் புரட்சி (1917) ருஷ்யாவை “சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்” என மாற்றிப் புனைந்து முழு உலக நாடுகளது மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தது. எழுபதாம் ஆண்டுகள் வரை விடுதலை நாடும் மக்களுக்குச் ‘சோசலிசம்’ என்ற கருத்தியல் உத்வேகமூட்டும் நிவாரணியாக இருந்தது. அநேகமான நாடுகள் ‘ஜனநாய சோசலிச’, ‘சோசலிச ஜனநாயக’ என்பதான அடைமொழிகளை ஒட்டி தம்மை அழகுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டிருந்தன. சோவியத் யூனியன் 1991 இல் தகர்ந்து […]

மேலும் பார்க்க

கோட்டைகளுக்குப் பதிலாக பாதைகள்

26 நிமிட வாசிப்பு
October 29, 2022 | பி. ஏ. காதர்

1818 இல் கிளர்ச்சி வெடிக்கும் வரை தமக்கு சரியான தகவல் கிடைக்காததற்கும், கிளர்ச்சி  வெடித்தபின்னர் அதனை நசுக்குவதற்கும்  தாம் மிகுந்த சிரமப்பட்டதற்கும் இரு காரணங்களை பிரித்தானியர் இனம்கண்டனர். ஒன்று கண்டியை சிறப்பாக கண்காணித்து நிர்வகிப்பதற்கு மலைப்பாங்கான கண்டி பிரதேசத்தினை பாதைகளால் இணைக்கவேண்டும். மற்றையது தமக்கு விசுவாசமான உள்ளூர்த் தலைவர்களை உருவாக்கி தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.  1818 இல் கிளர்ச்சியை அடக்குவதற்கு தமது படைகளை அனுப்பியதன் மூலம் கண்டி இராச்சியத்தில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்