Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

வேடரும் காலனியமும்

10 நிமிட வாசிப்பு

இன்றைய  நவீன உலகில்  ஒவ்வொரு நாட்டின்  பூர்வீகக் குடிகளுக்கும் அவரவர்களுக்கான பல சிறப்புரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா ஏன் நமது அண்மைய நாடான இந்தியாவிலும் கூட மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் எமது நாடான இலங்கையில் பூர்வகுடிகளான வேடர் என்போர் அரும்பொருட்காட்சியகத்தில் இருக்கும் காட்சிப்பொருட்களாகவும், அழிந்து வரும் உயிரினம் ஒன்றை பாதுகாக்க வேண்டிய பச்சாதாபச் சிந்தனையுடனும் தான் பார்க்கப்படுகின்றனர். இன்னமும்  வேடுவர் என்பவர்களுக்கான அடையாளமானது  இலையும் குழையும், அம்பு […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும்

24 நிமிட வாசிப்பு

கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள். பொறிப்புச் சான்றுகள் (Epigraphic evidences) என்பதன் மூலம் நாம் கருதுவது, கல்லிலும் செப்பு, பொன், ஐம்பொன் முதலிய உலோகங்களிலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, சாசனச் சான்றாதாரங்களை எழுத்துச் சான்றுகளில் பாலி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், வடமொழி இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்கள், […]

மேலும் பார்க்க

இலங்கையின் பாலுற்பத்தித் துறை – ஒரு பார்வை

17 நிமிட வாசிப்பு

[இலங்கையின்  பாலுற்பத்தி தொடர்பான இந்த கட்டுரைத் தொடர் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பின்னடைவுக்கு முந்தைய விடயங்களையே அதாவது சாதாரண நிலையில் உள்ள விடயங்களையே ஆராய்கிறது. அண்மைய பொருளாதார நெருக்கடி பாலுற்பத்திக் கட்டமைப்பை எந்த வகையில் பாதிக்கின்றது என்பதை இந்தத் தொடரின் பிறிதொரு கட்டுரையில் தனியாக ஆராய்வோம். இங்கு தரப்படும் புள்ளி விபரங்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முந்தியவை] இலங்கையில் 1977 ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட முன்னர் […]

மேலும் பார்க்க

வன்செயல் மரபுரிமையும் ஈழத்தமிழர்களும்

7 நிமிட வாசிப்பு

கடந்த சில பத்தாண்டுகள், மரபுரிமைகளை இனங்காணல், அது தொடர்பான கருத்தாடல்கள், செயற்பாடுகளில் பல முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் […]

மேலும் பார்க்க

தொழிலாளர் எழுச்சி குரல்களின் எதிரொலிகள்

7 நிமிட வாசிப்பு

அரசாங்கத்தினதும் துரைமார்களதும் தொழிலாளர் விரோத நடத்தைகள், சட்டங்கள், கொள்கைகள் தொடர்பிலான சேர். பொன். அருணாசலத்தின் கண்டன நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து எரிச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. அதன் காரணமாக பல அரச உயர் அதிகாரிகள் சேர். பொன். அருணாசலம் அரசின் சுமுகமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுகின்றார் என்று காலனித்துவ செயலாளருக்கு புகார் கடிதங்கள் வாயிலாக அறிவித்தனர். குறிப்பாக அப்போது சட்டமா அதிபராக கடமையாற்றிய அன்டன் […]

மேலும் பார்க்க

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 2

11 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் பிரஞ்சும் ஆங்கிலமும் இக்கட்டுரைத்தொடரின் முதலாவது தொடரில்  பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் கனடா தேசம் வெற்றி கண்டுள்ளது என மதிப்பிடப்படுகின்றது.  இந்த வெற்றியின் பின்னணியில் கனடா மாதிரியின் (Canadian model) சில தனித்துவமான பண்புக்கூறுகள் அமைந்துள்ளன.  1. அது சமஷ்டியாக இணைந்துள்ள ஒரு சமூகம்.  2. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், அரசியல் யாப்புவாதம் […]

மேலும் பார்க்க

வட இலங்கையில் சாதி : பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் – 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு – பகுதி 1

6 நிமிட வாசிப்பு

ஆங்கிலத்தில்  பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலம் பிரடரிக் நோர்த் (1798 – 1805) முதலாவது ஆங்கிலேய ஆளுநராக இருந்தார். இவர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சாதிய ஒழுங்கமைப்பு நிர்வாகத்தின் அடிப்படையாக இருந்தது. இதனை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டது.  வடஇலங்கையில் சாதித் தலைமைக்காரர் முறையை (Caste headman system) நடைமுறைப்படுத்திய பிரித்தானியர், கரையார் போன்ற சாதியினரின் தலைமைக்காரர்களாக அவ்வச் சாதிகளைச் சேர்ந்தவர்களே கடமையாற்ற […]

மேலும் பார்க்க

பெருந்தோட்டச்சமூகம்: சமூக மாற்றங்களும் நகர்வுகளும்

6 நிமிட வாசிப்பு

இலங்கையில் வாழும் இந்திய தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் இன்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலேயே தொழில்செய்தும் வாழ்ந்தும் வருகின்றனர். அவர்கள் “தோட்டத் தமிழர்”, “பெருந்தோட்டத் தமிழர்”, “மலையகத் தமிழர்”, “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” (Uda Palatha Tamils) என்ற பெயர் மலையகத் தமிழரை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கு சிங்கள மக்களால் கையாளப்படுகின்ற ஒரு பெயரும், “மலையகத் தமிழர்” என்ற பெயர் […]

மேலும் பார்க்க

குயர் மக்கள் பற்றிய சமூகப்பார்வை: தனிநபர் வாழ்வு அவர்களது தீர்மானம்

15 நிமிட வாசிப்பு

“நான் திருநங்கையாக இருப்பது இயற்கையானது” என்கிறார் கவிதா. இந்த சமூகத்தில் கவிதாவைப் போல பலர் தமது பால்நிலை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குயர் மக்கள் என்போர் யார்? அவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? என்றவாறாக ஏராளமான வினாக்கள் […]

மேலும் பார்க்க

தமிழர் தொடர்பாக பலரும் அறிந்திருந்த 5 பிராமிக் கல்வெட்டுக்கள்

10 நிமிட வாசிப்பு

“தமெத”எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்களும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில், மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும்.  தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள இவ் ஐந்து கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்