Blogs - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பகுதி 3

21 நிமிட வாசிப்பு

கட்டுக்கரையின் பண்டைய கைத்தொழிற்சாலைகள் கட்டுக்கரையின் பண்பாட்டுத் தொன்மையையும், தொழில்நுட்பச் சிறப்பையும் அடையாளப்படுத்திக் காட்டுவதில் அங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் சிறு கைத்தொழிற்சாலைகளுக்கு முக்கியமான இடமுண்டு. தென் தமிழகத்திலும், இலங்கையிலும் இரும்பின் பயன்பாட்டை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களாவர். இதன் விளைவால் இதுவரை காலமும் கல்லாயுதங்களைப் பயன்படுத்திவந்த மக்கள் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தமாற்றம் பெருங்கற்கால மக்களின் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் புரட்சிகர மாற்றங்களேற்பட வழிவகுத்தன. இங்கு இரும்புத்தாதின் படிமங்களை […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மருந்தாகும் மசாலாப் பொருள்கள் – பகுதி 1

7 நிமிட வாசிப்பு

கடுகு படுகின்ற ரத்தம்போம் பாலார் முலை சுரக்கும் அடுகின்ற மூலம் அணுகாது-தொடுகின்ற தாளிதத்துக்காகும் தழலாகும் கண்டீர் வாளித்த வல்ல கடுகு                                         கடுகு, பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதலான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிக்கும். மூல வியாதியைத் தவிர்க்கும். […]

மேலும் பார்க்க

டி.எஸ். சேனநாயக்காவும் ஜி.ஜி.பொன்னம்பலமும்

24 நிமிட வாசிப்பு

சோல்பரி அரசியல் அமைப்புக்கேற்ப நாடாளுமன்ற நடைமுறையினை ஏற்படுத்துவதற்காக 1947 ஆம் ஆண்டு டி. எஸ். சேனநாயக்கா முதலாளித்துவ அடிப்படைவாதக் கருத்துக்களையும் இனவாதக் கருத்துக்களையும் கொண்ட ‘தேசிய காங்கிரஸ்’, ‘சிங்கள மகாசபை’, ‘முஸ்லிம் லீக்’ ஆகிய மூன்று கட்சிகளை தமது தலைமையில் ஒன்றிணைத்து ‘ஐக்கிய தேசியக் கட்சி’ என்ற புதிய கட்சியினை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 1947 ஆம் ஆண்டே இடம்பெற்றது. நாடாளுமன்றத்தக்கான 100 ஆசனங்களில் டி. எஸ். […]

மேலும் பார்க்க

தோட்டத் தொழிலாளர்களும் அதிகார வர்க்கத்திற்கெதிரான முரண்பாடுகளும்

10 நிமிட வாசிப்பு

மலையக மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்றவை பற்றி எல்லாம் ஆராய்ந்த ஆய்வாளர்கள் “ஏன் இந்த மக்கள் கூட்டத்தினர் தம்மை நசுக்கி, அடக்கி, ஆளுகின்றவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழவில்லை?” என்று வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு துன்ப துயரங்களையும் பொறுமையாக சகித்துக் கொண்டு எவ்வாறு இவர்களால் இவ்வளவு நீண்ட காலம் வாழ முடிந்தது? என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை காணவும் முயன்றிருக்கிறார்கள். நான் முன் குறிப்பிட்டப்படி […]

மேலும் பார்க்க

18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : வர்த்தகமும் முயற்சியாண்மையும் சமூக உயர்ச்சியும் – பகுதி 4

11 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : பேராசிரியர் சி. அரசரத்தினம் சமூகப்பிரிவுகள், சமூகப்படி நிலையில் உயர்ச்சியடைதல் என்னும் சமூக அசைவியக்கத்திற்கான (Social Mobility) வழிகளில் வர்த்தகமும், முயற்சியாண்மையும் (Entrepreneurship) முக்கியமானவை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வர்த்தகம், அதனோடு தொடர்புடைய வட்டிக்குப் பணம் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் மரபுவழியாக ஈடுபட்டுவந்த சமூகப் பிரிவினர் மிகச் சிறிய எண்ணிக்கையினராக இருந்தனர். இதனால் இச்சிறிய வர்த்தக சமூகப்பிரிவு, வேளாளர்களுக்கு அறைகூவல் விடுக்கக்கூடியளவுக்குப் பலம் உடையதாக இருக்கவில்லை. நாம் முன்னரே […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தின் வெற்றிக்கு வித்திட்ட மருத்துவர் கிறீன்

7 நிமிட வாசிப்பு

“ஒரு சிறந்த தளபதி யுத்தம் செய்யாமல் ஒரு நகரத்தைக் கைப்பற்றவே விரும்புவான்.”-   சன் சூ. சீனதேசத்துப் போரியல் வல்லுநர் சன் சூ வினால் 2500 வருடங்களுக்கு முன்னர் மூங்கில் கீற்றுக்களில் எழுதப்பட்ட போர்க்கலை (The Art of War) என்னும் நூலானது யுத்த மூலோபாயங்களைக் குறித்த ஆலோசனை நூலாக இருந்த போதிலும், சிக்கலான நிலைமைகளில் தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் தலைமைத்துவ வழிகாட்டி நூலாகவும் விளங்குகிறது. கடந்த நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் […]

மேலும் பார்க்க

அரிசிசார் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள்

16 நிமிட வாசிப்பு

சோறு, நெற்பொரி, அவல், கஞ்சிவகைகள் போன்று அரிசி மாவில் இருந்து பல்வேறு வகையான அரிசி சார்ந்த உணவுகள் நமது பாரம்பரியத்தில் காணப்படுகின்றன. அரிசிக்கூழ், களி, பாயசம் “அரிசிக்கூழ் பித்தத் தோடே யரியநீர்க் கோர்வை யாற்றும் தெரியுமிக் களிம்பு வாயு தீராத மந்த மின்னும் தரும்வயிற் றிரைவு மென்று சாற்றினார் பாய சந்தான் திரிபயித் தியமே பித்தஞ் செறிதாக மருவா வன்றே” – பக். 62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி. அரிசிக்கூழ் […]

மேலும் பார்க்க

இலங்கையின் பாரம்பரிய விவசாய வரலாறு

15 நிமிட வாசிப்பு

அறிமுகம் இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்தே ஆரம்பிக்கிறது. இதற்குச் சான்றாக இலங்கையில் சுற்றுச்சூழல் தொல்லியல் துறையில் முன்னோடியான டாக்டர். ரத்னசிறி பிரேமதிலக மேற்கொண்ட சமீபத்திய ஆராய்ச்சி, நமது நீண்டகால நம்பிக்கைகளில் பலவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவ்வளவு காலமும் நாம் நம்பிக்கொண்டிருப்பது மகா வம்சமும், தீபவம்சமும் சொல்லுகின்ற ஐந்நூறு ஆண்டுகால வரலாற்றை மட்டுமே. ஆனால் உண்மையில் இந்த நாட்டின் கற்கால மனிதர்கள், பழங்குடியின வேடர்களின் மூதாதையர்கள் தான் நமது […]

மேலும் பார்க்க

இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கையும் இயற்கைச்சூழலின் மீது அதன் தாக்கங்களும்

11 நிமிட வாசிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் வளர்ச்சியடைந்து வந்த பெருந்தோட்டத்துறையானது தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இலங்கையினது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக மாறியது. தேயிலை உற்பத்தியும், அதன் ஏற்றுமதியும் இதில் முதன்மை வகித்தது. சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டினது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் சமூக-பொருளாதார முன்னேற்றமும் பெருந்தோட்டத்துறையினது வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு கொண்டனவாக இருந்தன. இத்துறையினது தோற்றமும் வளர்ச்சியும் பொருளாதாரத்தில் அடிப்படையான சில மாற்றங்களை ஏற்படுத்தியது. […]

மேலும் பார்க்க

காலனித்துவ ஆட்சியாளர் விட்டுச்சென்றவையும் (Colonial legacy) பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட சமூக – பொருளாதார மாற்றங்களும்

17 நிமிட வாசிப்பு

வரலாற்று போக்குகளைப்  பற்றி பேசும்போது “அந்த காலம் போல இனிவருமா” என்று  பலர் சலித்துக்கொள்வது புதிய விடயம் அல்ல. சில நல்ல விடயங்கள் மறைந்து வருகின்றன என்பது உண்மைதான். அன்றிருந்த காடுகள், தெளிவான ஆற்றுநீர், தூயகாற்று போன்ற பலவற்றை இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது. சமூக  வாழ்க்கையில் கூட அன்பான குடும்ப உறவு, நாணயம், பெரியோரை மதித்தல் போன்ற நல்ல விழுமியங்கள் மறைந்து வருகின்றன. ஆயினும் கடந்த காலமே பொற்காலம் என்று […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்