இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடலும் மேலெழுந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை தனது முதலாவது கொள்கை விளக்க உரையில் கூறியிருக்கின்றார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமென்றால் அரசியல் ஸ்திரநிலையைக் கொண்டுவரவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் அரசியல் ஸ்திர நிலையையும் உருவாக்க முடியாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13 ஆவது திருத்தத்தையே […]
பிரதேச அறிமுகம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஒன்பது மாகாண பரப்புக்களில் அதிக நிலப்பரப்பைக் தன்னகத்தே கொண்டதும் சனத்தொகை செறிவின் அடிப்படையில் இலங்கையின் பிரதான இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூவினத்தவரதும் குடியிருப்புக்களை கொண்டதோடு அதிக அளவிலான தமிழர்கள், முஸ்லீம்களின் தாயகப்பரப்பாகவும் காணப்படுகின்றது. பல்லின பன்மைச்சமூகங்கள் வாழும் பகுதியாகவுள்ளதனால் இப்பிரதேசத்தின் பண்பாட்டு மற்றும் சமூக நிலைமைகள் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத விசேட தன்மையுடைய பிராந்தியமாக இயங்கி […]
கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது. கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது. மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் […]
அதிகார வெறியும் ஆடம்பர ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பரித்து இருந்த ஒரு காலகட்டத்தில் மாபெரும் மனிதக் கூட்டங்கள் மந்தைகள் என மண்ணில் வீசப்பட்டிருந்தன. 17 ஆம்,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு […]
கட்டுக்கரையும் பெருங்கற்காலப் பண்பாடும் கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் தோன்றிய பெயராகும். ஆதிகால மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தமது […]
அறிமுகம் சிங்கைச் செகராஜசேகரன் என்ற பெயருடன் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஒருவன் தனது குடிமக்களுள் பெரும்பாலான தமிழ்மக்களின் நலன் கருதி வைத்தியம் மற்றும் சோதிடம் தொடர்பான நூல்களைத் தமிழ்மொழியில் ஆக்கும்படி இந்தியாவில் இருந்து தான் வரவழைத்த பண்டிதர்களைக் கேட்டுக் கொண்டான். இப்பொழுது எமக்குக் கிடைக்கும் செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் இம்மன்னன் காலத்தில் ஆக்கப்பெற்றனவே. கி. பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் […]
மருத்துவர் நேத்தன் உவோட்டுக்கு 4 பிள்ளைகள் மூவர் ஆண்கள், ஒருவர் பெண். இவர்கள் அனைவரும் 1834 – 1842 காலப்பகுதியில் வட்டுக்கோட்டையிலே பிறந்தார்கள். பெண்பிள்ளை ஒரு வயதாகும் போது இயற்கை எய்தியது. 1842 இல் பிறந்த இளையமகன் சாமுவேல் ரெட் உவோட் வாஷிங்டனில் உள்ள ஜோஜ்ரவுண் பல்கலைக்கழகத்தில் பயின்று 1868 இல் மருத்துவரானார்(Physician). 1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி அமெரிக்க வரலாற்றில் துயர்மிக்க ஒருநாள். அமெரிக்காவில் […]
ஆங்கில மூலம்: பேராசிரியர் சி. அரசரத்தினம் 1674 ஆம் ஆண்டு டச்சுக்காரர் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளினதும் காணிகளின் உடைமையாளர்கள் பற்றிய பதிவினை மேற்கொண்டனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக்காணிப் பதிவு நடவடிக்கையின் பயனாக 12,000 குத்தகைக்காரர்களின் (Tenants) கணக்கை வேளாளத் தலைமைக்காரர்களால் காண்பிக்க முடியவில்லை. குத்தகைக்காரர்களின் பெயரில் தலைமைக்காரர் காணிகளைத் தமக்கு சொந்தமாக்கி பயனை அனுபவித்தனர் என்பது தெரியவந்தது. காணிப் பதிவு நடவடிக்கையினால் ஏற்பட்ட கசப்புணர்வைப் பயன்படுத்தி வேளாளத் […]
மானிங் அரசியல் அமைப்பில் இருந்த குறைபாடுகளை நீக்கி இலங்கைக்குப் பொருத்தமான ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பொருட்டு 1927ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த டொனமூர் குழுவினர் இரண்டு முக்கிய சிபார்சுகளை முன்வைத்தனர். 1. கல்வித் தகமை, வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாக்குரிமையினை நீக்கி 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை. 2. சட்ட நிருபண சபையில் இருந்து வந்த இனவாரி பிரதிநிதித்துவத்தினை நீக்கி அதற்குப் பதிலாக பிரதேச […]
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வம்சாவளித் தமிழரின் சனத்தொகையில் கணிசமான அளவுக்கு அதிகரிப்பு காணப்பட்டது. 1871 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 444 ஆக இருந்த இவர்களின் சனத்தொகை 1906 ஆம் ஆண்டு 4 லட்சத்து 36 ஆயிரத்து 622 ஆக அதிகரித்தது. பின்னர் 1936 ஆம் ஆண்டு 6 லட்சத்து 92 ஆயிரத்து 540 ஆக அதிகரித்தது. இவர்களில் சுமார் 88 சதவீதத்தினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக […]