அம்பாந்தோட்டை நகரிலிருந்து திஸமஹராமைக்கு செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பள்ளேமலல சந்தியிலிருந்து வட மேற்கு நோக்கிச் செல்லும் வீதியில் உள்ள யஹன்கல மலைப் பகுதியிலிருந்து வடக்குப் பக்கமாக மேலும் 5 கி.மீ தூரத்தில் உள்ள பண்டகிரிய குளத்தின் அருகில் பண்டகிரிய மலைப்பகுதி அமைந்துள்ளது. பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த காவந்தீசன் எனும் மன்னனால் பண்டகிரிய மலையில் பெளத்த ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் […]
இயற்கையோடு ஒட்டி வாழத் தலைப்பட்ட காலத்தில் இருந்து மனித வாழ்வில் சடங்குகளும் சமயங்களும் உருவாகத் தொடங்கின. இயற்கையை வழிபடத் தொடங்கிய மனிதர், அதனைத் திருப்திப்படுத்த பல சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய முற்பட்டனர். மக்களின் வாழ்க்கையோடு இயைந்த வழக்காறாக, நிலப் பண்பாடாக அவை வளர்ந்தன; சமய வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், கலைகள் என பன்முகப்படுத்தப்பட்டன. அவை பற்றி உரையாடல்கள் கர்ண பரம்பரைக் கதைகள், வாய்மொழிப் பாடல்கள், வெறியாடல்கள், கூத்துகள் எனப் […]
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியின் நிர்ணயக் காரணிகளில் ஒன்றாக விளங்கும் நன்னீர் மூலங்கள் இவ்விரு மாகாணங்களையும் விவசாயம் சார் பொருளாதாரம் நிலவும் பிராந்தியங்களாக உருமாற்றக் காரணமாகியுள்ளன. மழைக் காலத்தில் அதிகம் பெறும் நீரைச் சேமித்து வைப்பதன் மூலம், இவ்விரு மாகாணங்களின் 60 சதவீதமான மக்கள் விவசாயம் சார் தொழில் முனைவுகளை தமது நிரந்தர ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். இதனால் இவ்விரு மாகாணங்களின் எழுச்சிமிக்க பொருளாதாரத் தொழில் […]
அபிவிருத்திக் காரணங்கள் வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பூரணப்படுத்தப்பட்ட பல்வேறு வகையிலான வீதி சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களான ‘கார்பெட்’ தெருக்களின் நிர்மாணம், உள்ளூர் வீதி அமைப்புகள், புகையிரத வீதி நிர்மாணம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக வடிகால் பாங்குகள் குழப்பமடைந்து பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமைகள் உருவாக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டினுடைய புகையிரதப் பாதைகள் மழைநீரைக் கடத்தும் அல்லது […]
சென்ற கட்டுரையில் லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவின் நிலப்படம் காட்டும் யாழ்ப்பாண நகரப் பகுதி பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் நகரப் பகுதிக்கு அண்மையில் உள்ள வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுப் பிரிவைப் பற்றி மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகளைப் பற்றியும் ஆராயலாம். வலிகாமத்திலுள்ள கோவிற்பற்றுகளுள் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படாத ஒரே கோவிற்பற்று வண்ணார்பண்ணையே. எல்லைகள் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றின் தெற்கில் கடலேரியும் யாழ்ப்பாண நகரப் பகுதியும் எல்லைகளாக […]
இலங்கைத் தமிழரிடையே அரச மரபு தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆராய முற்படும் ஒருவர் அதன் தொடக்கப் புள்ளியாக தலைநகர் கதிரமலையைக் குறிப்பிடுவார். இதற்கு, 17 – 18 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலான தமிழ் இலக்கியங்களில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் உக்கிரசிங்க மன்னன் சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாகக் கொண்டு கதிரமலையில் இருந்து ஆட்சி செய்த வரலாறு கூறப்பட்டிருப்பது முக்கிய காரணமாகும். இக் […]
அறிமுகம் இயற்கை அனர்த்தப் பாதிப்புகளுக்கு இடம், காலம் என்பன ஒரு போதும் தடையாக இருப்பதில்லை. இவை எங்கும் எப்போதும் தோன்றலாம். அனர்த்த வாய்ப்புகள் குறைவானதென கருதப்பட்ட பல பகுதிகளில் அண்மைக் காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிகிறோம் (Wen et al., 2021). இவ் இயற்கை அனர்த்தங்களில் காலநிலை அனர்த்தங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக மாறியுள்ளன. உலகளாவிய ரீதியில் உள்ள காலநிலை மாற்றத்தின் விளைவாக காலநிலை அனர்த்தங்கள் அடிக்கடி தோன்றுகின்ற […]
(‘எழுநா’ பதிப்பகத்தின் பிரசுரமாக 2024 – நவம்பர் மாதம் வெளிவரவிருக்கும் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்துச் சாதியம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகமாக அமையும் கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது.) இந்நூலில் 9 ஆய்வுக் கட்டுரைகளின் தமிழாக்கம் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பினையும் சமூக உறவுகளையும் பன்முக நோக்கில் ஆராய்வனவாக உள்ளன. இவை யாவும் போருக்கு முந்திய கால யாழ்ப்பாணத்தின் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் அரசியல் என்பன பற்றிய நுண்ணாய்வுகளாக […]
இலங்கையின் உயர்கல்வியில் வட்டுக்கோட்டைக் குருமடம் இலங்கையில் உயர்கல்விக்குரிய வரலாறு மிக நீண்டது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இயங்கிய கிறிஸ்தவ திருச்சபைகளும், உள்நாட்டு சமய மறுமலர்ச்சி இயக்கங்களும், அரசினால் முன்னெடுக்கப்பட்ட கல்விசார்ந்த நடவடிக்கைகள் பலவும் பொதுக்கல்வியின் தேவையை உணரச் செய்திருந்தன. கிறிஸ்தவ மிஷனரிகள் ஏற்கெனவே தமது சமயப் போதனையுடன் விரிவான கல்வி மேம்பாட்டுக்கான அத்திவாரத்தையும் இட்டுவந்தன. வட்டுக்கோட்டைக் குருமடம் (Batitcotta Seminary : 1823 – 1850) இலங்கையில் இருந்த கிறிஸ்தவக் […]
தொடக்கக் குறிப்புகள் வரலாறு முழுவதும், அனைத்து நாகரிகங்களின் பொருளாதார நடவடிக்கைகளிலும் கடல் எப்போதும் உணவு வளம், போக்குவரத்து மற்றும் வணிக வர்த்தகத்திற்கான வழிமுறையாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், நீலப் பொருளாதாரம் என்பது கடல்சார் வளங்கள் மற்றும் பெருங்கடல்களில் வளர்ந்த பொருளாதாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கருத்தாக மாறியுள்ளது. கடலோரப் பகுதிகளோடு சமரசம் செய்யாத பொருளாதார வளர்ச்சியையே நீலப் பொருளாதாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைத்தன்மையில் கவனம் செலுத்துவதை இழக்காமல் முன்னேற்றம், பொருளாதார, […]