Blogs - Ezhuna | எழுநா

இலங்கையில் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் : ஒரு சுருக்கமான அரசியல் வரலாறு

25 நிமிட வாசிப்பு

ஆங்கிலம்  : ஜயதேவ உயன்கொட இலங்கையில் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் பாராளுமன்றம் பற்றிய அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இலங்கையின் பாராளுமன்றத்தின் கதை நவீன ஜனநாயகம் பற்றிய பல கதைகளுடன் பிணைப்புடையதாகும். இக்கதைகளினூடே இலங்கையின் அரசியல் யாப்புக் கட்டமைப்பை மாற்றும் முயற்சிகளும் வெவ்வேறு உயர் குழுக்களின் அதிகாரப் போட்டியும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் பற்றிய கதைகளும் எமக்குத் தெரிய வருகின்றன. குறிப்பாக அரசு அதிகாரத்தை […]

மேலும் பார்க்க

சூழலியல் சுற்றுலா: நல்லெண்ணத்தைக் காசாக்கல்

23 நிமிட வாசிப்பு

தொடக்கக் குறிப்புகள் சிறிது காலத்திற்கு முன்னர் உயிரியற்துறைப் பேராசிரியர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது இலங்கை ஏன் மிகப்பிரபலமான சுற்றுலா நாடாக இருக்கிறது என்ற வினாவை அவர் எழுப்பினார். இயற்கையின் எழில், தேசியப் பூங்காங்கள், யானைகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் நிரம்பிய பூமியது என்று பதிலளித்தேன். அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: “நீங்கள் அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 3

16 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம்  : நவரட்ண பண்டார இனத்துவ மேலாண்மை முறை மில்டன் ஜே. எஸ்மன் (Milton J. Esman) என்னும் அரசியல் அறிஞரின் இனத்துவ மேலாண்மைமுறை (Ethnic Dominance System) என்னும் எண்ணக்கருவை இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றை விளக்குவதற்கு பிரயோகிக்கும் நவரட்ண பண்டார அவர்கள், இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை இனக்குழுமம் மேலாண்மை பெற்ற இனமாகவும், சிறுபான்மை இனமான தமிழ் இனம் மேலாண்மை இனத்திற்குக் கீழ்ப்பட்ட சிறுபான்மை இனமாகவும் (Subordinate […]

மேலும் பார்க்க

ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் 

19 நிமிட வாசிப்பு

நாற்பது வருடங்களாகத் தான் சூழல் பாதுகாப்பு எனும் விவகாரம் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. அரைநூற்றாண்டுக்கு முன்னர் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை நவ காலனித்துவப் பிரயோகத்துடன், விடுதலை பெற்ற தேசங்களில் தொடர்ந்து மேற்கொண்டு, எமது வளங்களைத் கபளீகரம் செய்வதனை முறியடிக்கும் வகையில் சுயசார்புப் பொருளாதாரம் முன்னெடுக்கப்படலாயிற்று. உலக மூலதன மேலாதிக்கம் வலுப்பெற்ற எண்பதாம் ஆண்டுகளில், நவ காலனித்துவத் தேசங்களால் திறந்த பொருளாதார முறைமை ஊடாகக் கார்ப்பிரேட் ஏகாதிபத்தியம் எமது பிராந்தியக் அபகரிப்புகளை […]

மேலும் பார்க்க

கால்நடை வளர்ப்பில் அரச கால்நடை வைத்தியர்களும், அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களும்

10 நிமிட வாசிப்பு

அண்மையில் இலங்கையின் அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களில் பணியாற்ற 146 கால்நடை வைத்தியர்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. சில வருடங்களாக அரச கால்நடை வைத்தியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் மேற்படி ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருந்த போதும், இறுதியில் 27 கால்நடை வைத்தியர்களே அரச சேவைக்கு வந்திருந்தனர். பல கால்நடை வைத்தியர்கள் அரச பணியை விரும்பாமல் தனியார் சிகிச்சை நிலையங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றுவதை விரும்புவதே இதற்குரிய முக்கிய காரணமாகும். மேற்குறித்த […]

மேலும் பார்க்க

சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 2

23 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பின்காலனித்துவ இலங்கையில் அரசைக் கட்டி வளர்க்கும் திட்டம் பற்றிய விவாதங்கள் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இலங்கையின் பழமைவாத உயர்குழுக்கள் (Conservative Elites) ஒன்று சேர்ந்து கூட்டணியொன்றை அமைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம் (National Unity Government) ஒன்றை  உருவாக்கின. இந்தக் கூட்டணிக்குள் விரைவிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டன. சிங்கள உயர்குழாம் தலைவர்களிடையே எதிர்காலத்தில் தலைமைப் பதவிகளை யார் யார் பெற்றுக் கொள்ள வேண்டும் […]

மேலும் பார்க்க

அலைந்துழலும் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும் : வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் ‘Love Marriage’ நாவலை முன்வைத்து

11 நிமிட வாசிப்பு
December 19, 2024 | இளங்கோ

அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் ‘Representations of the Intellectual’ என்கின்ற நூலில், ஒரு அத்தியாயம் முழுவதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கியே செல்லும். தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராதவிடத்து எந்த ஏற்றமும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது, எந்தத் திசையில் செல்ல‌வேண்டுமென்ப‌தைத் தீர்மானிக்கும் […]

மேலும் பார்க்க

இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள் : இருண்ட வாழ்வின் நேரடிச் சாட்சியம்

24 நிமிட வாசிப்பு

இலங்கைப் பெருந்தோட்டங்களில் தொடக்ககாலத்தில் குடியேறிய தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்குப் போதுமான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. காலனிய அறிக்கைகள், காலனிய அதிகாரிகளின் பதிவுகள் முதலானவற்றில் இடம்பெறுகின்ற தகவல்களையும் வாய்மொழி வழக்காறுகளில் ஆவணம் பெற்றுள்ள செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அக்கால வாழ்க்கை நிலைமையை ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகவல்கள் விவரிக்கின்ற தோட்டத் தொழிலாளரின் வாழ்வு, மிகவும் துயர் நிறைந்ததாகும். “ ‘அருவருப்புத்தரும் அநீதி’, ‘கொடுமை’, ‘நீக்ரோ அடிமைகளைவிடக் கேவலம்’ ” (மேற்கோள்: குமாரி […]

மேலும் பார்க்க

வடக்கு – கிழக்கு அபிவிருத்தியில் வீதிகளின் வகிபாகம் – வளங்களும் வாய்ப்புகளும்

10 நிமிட வாசிப்பு

சகல துறைகளின் ஆக்க மூலங்களையும் இணைப்புச்செய்து செயற்பட வைப்பதன் மூலம்  பொருளாதார அபிவிருத்தியினை தூண்டுகின்ற கட்டமைப்பாக வீதிகள் செயற்படுகின்றன. வீதிகளின் இணைப்பின் மூலம் உற்பத்தி வளங்கள் பரிமாற்றப்படுகின்றன. மனிதர்கள் இடமாற்றப்படுகின்றனர். விளைச்சல்கள் சந்தைகளை நோக்கி எடுத்து வரப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர். நுகர்வாளர்கள் தரமும் மலிவுமான பொருள்களை நுகரக்கூடியதாக இருக்கிறது. கொண்டுவரப்படும் உள்ளீட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை இயங்கச் செய்கிறது. சுற்றுலாவின் கவர்ச்சிகரமான இடங்களைச்சென்று பார்வையிட்டு மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள […]

மேலும் பார்க்க

பெத்தப்பா என்னும் தெய்வம்

15 நிமிட வாசிப்பு

அறிமுகம் மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்