இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் Archives - Page 2 of 4 - Ezhuna | எழுநா

இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்

நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் : அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – பகுதி 1

21 நிமிட வாசிப்பு

தென்னாசியாவில் பண்டு தொட்டு பெரிதும் புழக்கத்தில் இருந்து வந்த ஒரு பெயராக வடமொழியில் ‘நாஹ’ என்ற பெயரும், தமிழில் ‘நாகம், நாகன், நாகர்’ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகர் […]

மேலும் பார்க்க

ஆனைக்கோட்டை முத்திரை : உண்மையும் திரிபும்

11 நிமிட வாசிப்பு

ஆனைக்கோட்டை முத்திரை தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகள் சிலவற்றில் முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்த சில எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்குப் புதிய வாசிப்பும், புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வந்திருப்பதைக் காணமுடிகின்றது. முத்திரையில் காணப்படும் எழுத்துக்களுக்கு அறிஞர்கள் வேறுபட்ட வாசிப்புக்களும், விளக்கங்களும் கொடுத்து வருவது அவர்களுக்குரிய சுதந்திரமாகவே நோக்கப்படும். ஆனால் அவற்றின் எழுத்துக்களை மாற்றிவிட்டு அதற்கு புதிய வாசிப்புகளும் விளக்கங்களும் கொடுப்பது திட்டமிட்ட வரலாற்றுத் திரிபாகவே பார்க்கப்படும். இத் தவறுகளை ஊடகங்கள் மூலம் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண இராசதானிக் காலத்திற்குப் புதிய அடையாளம் : அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொன், வெள்ளி நாணயங்கள்

11 நிமிட வாசிப்பு

இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட முதலாவது அரசாக நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு காணப்படுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சியில் இருந்த இவ்வரசின் ஆதிக்கத்துக்குள் வடஇலங்கையும் கிழக்கிலங்கையின் சில பாகங்களும், சில சந்தர்ப்பங்களில் தென்னிலங்கையும் உள்ளடங்கியிருந்தது. இவ்வாறு ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவ்வரசின் வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் ஒன்றாக  அவ்வரசு காலத்தில் […]

மேலும் பார்க்க

பனிக்கன்குளக் காட்டுப் பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

6 நிமிட வாசிப்பு

கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதிக்கு தெற்கே ஏறத்தாழ பத்துக் கிலோ மீற்றர் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள பனிக்கன்குளம் ஆற்றின் கரையோரங்களில் இருந்து கற்கால மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கற் கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பனிக்கன்குளத்தில்  வாழ்ந்து வரும் திரு. கஜன், திரு. ஜெயகாந்தன் ஆகியோர் காட்டுபிரதேசத்தில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட தானியங்கள் அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதக்கூடிய  கருங்கல்லின் புகைப்படம் ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தனர். இக்கருங்கலின்  வடிவமைப்பும் அதன் […]

மேலும் பார்க்க

மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளமும் ஆரியச்சக்கரவர்த்திகளும்

13 நிமிட வாசிப்பு

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்ற வேண்டுதலை முன்னெடுத்து வந்திருந்திருப்பதைக் காணமுடிகின்றது. அவ்வேண்டுதலில் ஒன்றை நிறைவு செய்திருக்கும் அரிய வரலாற்றுப் பணியாகவே இன்று யாழ்ப்பாண மாநகர சபையால் முன்னெடுத்துள்ள ஆரியகுளம் மீள்புனரமைப்புப் பணியைப் பார்க்கின்றோம். இது யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் இயற்கை சார்ந்த மரபுரிமைச் சின்னம் என்பதற்கு […]

மேலும் பார்க்க

மன்னார், நானாட்டானில் கிடைத்த பண்டைய நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா ?

15 நிமிட வாசிப்பு

18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து 1904 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி 25.09.2020 அன்றிலிருந்து  ஊடகங்களில் முக்கிய செய்தியாக காணப்பட்டது. இந்நாணயங்களை அச்சத்துடன் பார்த்த அக்கிராம மக்கள்  பூதம் பாதுகாத்து வந்த இந்நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என கூறியதால் அவற்றால் அச்சமடைந்த நானாட்டான் பிரதேச […]

மேலும் பார்க்க

சிவபூமி அருங்காட்சியகம் : ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய முகவரி

10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படும் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத் தமிழர் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறப்போகும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன். இவ் அருங்காட்சியகத்தின் மூலம் எம் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு எம்மோடு வாழ்ந்துவரும் பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களைச் சிறிதும் பிசகாமல் அடுத்து வரும் சந்ததியினருக்கு கையளிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது. மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட இவ் அரும்பொருள் காட்சியகத்தில் வடஇலங்கை மக்களின் பூர்வீக வரலாற்று அடையாளங்கள், […]

மேலும் பார்க்க

பெரிய புளியங்குளம் தமிழ்க் கல்வெட்டும் முள்ளியான் குடிமனை அழிபாடுகளும்

9 நிமிட வாசிப்பு

வன்னியில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் கண்டுள்ளனர். இக்கல்வெட்டு அப்பிரதேச […]

மேலும் பார்க்க

அநுராதபுர இராசதானி காலத்தில் எல்லாள மன்னன் வெளியிட்ட தமிழ் நாணயம்

10 நிமிட வாசிப்பு

இலங்கையின் பூர்வீக மக்கள், அவர்களது பண்பாடு தொடர்பாகக் கூறப்பட்டு வந்த நீண்ட பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் சமீபகாலத் தொல்லியல் ஆய்வுகளால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் நாகரிகயுகம் தோன்றிவிட்டதாகக் கூறும் இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் சேனகபண்டாரநாயக இலங்கை மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் விஜயன் வருகைக்கு முந்திய பண்பாடுகளில் இருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றார். இதற்கு, விஜயன் தலைமையில் வடஇந்தியக் குடியேற்றம் நடந்தாகக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த புவனேகபாகு வெளியிட்ட முருகப் பெருமானைக் குறிக்கும் அரிய நாணயங்கள்

15 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் அவர்கள் சேது என்ற மங்கல மொழி பொறித்த நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் எமது தொல்லியல் ஆய்வின்போது கண்டுபிடித்த நாணயங்களில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் சேது மொழி பொறித்த நாணயங்களுடன் கந்தன், ஆறுமுகன் ஆகிய பெயர்கள் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வடஇலங்கையில் இவ்வகை நாணயங்கள் பிறராலும் கண்டுபிடிக்கப்பட்டமைக்கு அல்லது சேகரிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1982 […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்