இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் Archives - Page 3 of 4 - Ezhuna | எழுநா

இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்

யாழ்ப்பாண நகரம் தோன்றிய காலத்தை மீளாய்வு செய்யும் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வாய்வு

13 நிமிட வாசிப்பு

 2500 ஆண்டுகால இலங்கை வரலாற்றில் வட இலங்கை சிறப்பாக யாழ்ப்பாணம் பாளி மொழியில் நாகதீப(ம்) எனவும், தமிழ் மொழியில் நாகநாடு எனவும் தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்திக் கூறும் மரபு பண்டுதொட்டுக் காணப்படுகின்றது. இதற்கு இப்பிராந்தியத்தில்  தோன்றி வளர்ந்த தனித்துவமான பண்பாட்டு அம்சங்களும் ஒரு காரணம் என்பதை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதிசெய்து வருகின்றன. இதை யாழ்ப்பாண நகரத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் அமைந்துள்ள ஒல்லாந்தர்காலக் கோட்டையின் உட்பகுதியில் 2012- 2017 […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 3

15 நிமிட வாசிப்பு

கோட்டைக்குள் மறைந்து காணப்பட்ட ஆலயங்களின் அழிபாடுகள் கோட்டை மீள் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்து வரும் வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆதாரங்களுள் 16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர் வழிபாட்டிலிருந்த இந்து ஆலயங்களின் அழிபாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு கோட்டைக்கு அயலில் உள்ள தீவுகளிலும், கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட கோறல் கற்கள் பயன்படுத்தியதை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் கோறல் கற்களுடன் எந்தவித […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 2

18 நிமிட வாசிப்பு

கோட்டைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள் யாழ்ப்பாண நகரின் தொன்மையும் சிறப்பும் பற்றிய வரலாற்று ஆய்வில் அந்நியரான போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையுடன் முதன்மைப்படுத்திப் பார்க்கும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஆனால் 2010 இல் இருந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கோட்டை அமைந்த இடத்திற்குத் தொன்மையான தொடர்ச்சியான நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு என்பதும், அவ்வரலாற்றுப் பின்புலம் தான் இவ்விடத்தைக் கோட்டை கட்டுவதற்குப் பொருத்தமான […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 1

17 நிமிட வாசிப்பு

உலக நாடுகள் பலவற்றின் வரலாறு பற்றிய ஆரம்பகால ஆய்வுகள் பெரும்பாலும் அந்நாடுகளில் நிலவிய  வரலாற்று வாய்மொழிக் கதைகள், வட்டார வழக்கில் உள்ள மரபுவழிச் செய்திகள், ஐதீகங்கள், பாரம்பரியச் சடங்குகள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவற்றின் அடியாகக் தோன்றி வளர்ந்த வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதில் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து  தோன்றி வளர்ந்த தொல்லியல், மானிடவியல், வரலாற்று மொழியியல் முதலான ஆய்வுகளுக்கு முக்கியமான இடமுண்டு. இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதை […]

மேலும் பார்க்க

வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம்

13 நிமிட வாசிப்பு

அறிமுகம் கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம்  அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார். அவற்றுள் வரலாற்றுப் பழமைவாய்ந்த இரண்டு கருங்கற்தூண்களில்  காணப்பட்ட தெளிவில்லாத சித்திரங்களின் புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தார்.  அவற்றில் வரலாற்றுத் தொன்மைமிக்க சில குறியீடுகளும், இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்களும் காணப்பட்டன. இவை வன்னியின் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் இராசதானி இருந்ததை உறுதிப்படுத்தும் குருந்தன்குள ஆலய அழிபாடுகள்

11 நிமிட வாசிப்பு

இலங்கையில் வரலாற்றுப் பழமை வாய்ந்த பிராந்தியங்களில் வன்னிப்பிராந்தியமும் ஒன்றாகும். பிரித்தானியர் ஆட்சியில் இந்தப்பிராந்தியத்தில் அரச அதிகாரிகளாகக் கடமையாற்றிய லுயிஸ், பாக்கர் போன்ற அறிஞர்கள் தமது நிர்வாக நடவடிக்கைகளின் போது கண்டறிந்த,   அழிவடைந்து காணப்பட்ட அரச மாளிகைகள், ஆலயங்கள், வழிபாட்டுச் சின்னங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுக்கள், நாணயங்கள் முதலான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடங்களைக்  கட்டுரைகள், நூல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். அவற்றுள் செட்டிகுளம், கட்டுக்கரைக்குளம், பனங்காமம், அரசபுரம், கனகராயன்குளம், […]

மேலும் பார்க்க

பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க் கல்வெட்டு தம்பலகாமத்தில் மீளவும் கண்டுபிடிப்பு

9 நிமிட வாசிப்பு

1796 காலப்பகுதியில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் அவர்கள்  திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல் வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்துகொள்வதற்கும், அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன்வரவில்லை எனவும், தனது பயணக் குறிப்பில் பதிவுசெய்துள்ளார். இந்தக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அந்தக்கல்வெட்டின் முன்பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் […]

மேலும் பார்க்க

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்

6 நிமிட வாசிப்பு

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு. வை. சத்தியமாறன் இணையத்தளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் […]

மேலும் பார்க்க

தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு

14 நிமிட வாசிப்பு

புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும்  எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானவையாகவே பார்க்கப்படுகின்றன. இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று […]

மேலும் பார்க்க

வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு

11 நிமிட வாசிப்பு

வவுனியா வடக்கு பெரியமடுப் பகுதியைச் சேர்ந்த திருவாளர்களான த. சசிகரன், ப. செந்தூரன், வி. ஜெகதீஸ்வரன், இ. நகுலேஸ்வரன் மற்றும் வ. கிந்துஜன் ஆகியோர் அண்மையில் தமது நெற்காணிகளுக்கு காட்டு வழியூடாகச் சென்று வரும் போது அக்காட்டில் அழிவடைந்த சிறிய கேணிக்கு அருகிலுள்ள கற்தூண் ஒன்றை அடையாளம் கண்டனர். அக்கற்தூணில் புராதன எழுத்துக்கள் சில இருப்பதை அவதானித்த அவர்கள் அதுபற்றிய புகைப்படத்தை எமது தொல்லியல் பட்டதாரிகளான சுதர்சன் தம்பதியினருக்கு அனுப்பி […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்