வடமாகாண கடற்பிரதேசம் வடமேற்கு மாகாண கடல் எல்லையிலிருந்து கிழக்கு மாகாண எல்லை வரை பரந்துள்ளது. இலங்கையின் எந்த மாகாணத்துக்கும் இல்லாத வகையில் பலதரப்பட்ட தொழில்களைச் செய்வதற்கான வளங்களை கொண்டது வடமாகாணத்தின் கடற்பிரதேசம். பின்வருவன இன்றுள்ள வடமாகாணக் கடலில் வருவாய் தரக்கூடிய தொழிலாக இருப்பவை: ஆழ்கடல் மீன்பிடி கரையோர மீன்பிடி ஆழ்கடல் மீன்பிடி போர் முடிவுற்ற காலத்தின் பின்பு ஆழ்கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய அரசினால் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தனியார்களின் மூலதனத்தை பயன்படுத்தி செய்யப்பட்டது வெறும் திருத்தல் வேலைகள் மட்டுமே. நவீன […]
1992 இல் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இப்படி ஒரு வசனம் பேசுவார். ” 2000 வருஷமா, வேல் கம்பையும் அரிவாளயும் தூக்கிட்டு திரிந்த பய. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரத்திற்கு ஆள் வேணும் என்று கேட்டப்ப, ஓடிப்போய் முதல் வரிசையில் நின்றவன் முக்காவாசி பேரு நம்ம பய தான். “ அதே போலத்தான், கருவாட்டு கத்தியோடும், கலவாய் கம்பியோடும், மண்டாவோடும் நின்று பழக்கப்பட்டவர்கள் 1976 ஆம் ஆண்டு […]
இந்தியக் கடல்கொள்ளையும், அதை மூடிமறைக்கச் சொல்லப்படும் காரணங்களும் ‘இந்திய மீன்பிடிப் படகுகள், நீரோட்டத்துடன் அவர்களின் வலைகள் அடித்து செல்லப்படுவதால்தான் எல்லை தாண்டுகின்றனர்; இலங்கையின் கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்கல்ல.’ என இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்திய நாசகார மீன்பிடிக்கு ஆதரவாகச் செயற்படும் சில புலம்பெயர் ‘இடதுசாரித்துவப் புரட்சி’ பேசும் சக்திகளும் இந்தியப் படகுகளின் அத்துமீறலை நியாயப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிரசுரமாகும் ‘புதிய ஜனநாயகம்’ பங்குனி 2011 இதழில், எல்லை தாண்டிய கடற்கொள்ளை […]
மீன்பிடித் திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும் கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித் திறனை அதிகரிக்க, முதலீடு செய்வது பாதகமானதாகும். அதைக் கட்டுப்படுத்தி மீன் வளத்திற்கேற்ப முதலீடு செய்வதற்கு வகை செய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாகக் கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே. உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை […]
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் (1994-1999) விடுதலைப் புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த சமாதானப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக உதவிய நோர்வே மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பட்டிருந்தன. அந்தப்பேச்சு வார்த்தைகள் முற்று முழுதாக முடிவடையாமல் இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் பல […]
கடலட்டை வளர்ப்பை நியாயப்படுத்த அதிகார வர்க்கத்தினரும், அதன் கடல் விஞ்ஞானிகளும் முன் வைக்கும் சில கூற்றுக்களை ஆராய்வோம். “இன்னும் சில தசாப்தங்களுக்குள் இலங்கையைச் சுற்றியுள்ள கரைகள் சார்ந்த கடற்பிரதேசம் எந்த ஜீவராசியும் வாழ முடியாத பிரதேசம் ஆகிவிடும். ஏற்கனவே வறட்சியும் நன்னீர்த் தட்டுப்பாடும் காணப்படும் கரையோர மீன்பிடிக் கிராமங்கள் மனிதர் வாழ்வதற்குத் தகுதியற்ற இடங்களாகப் போய்விடும். வெப்ப அதிகரிப்புக் காரணமாக புல், பூண்டு கூட முளைக்காத பூமியாகி விடும், கடல் […]
கடலட்டைகள் என்பன ஹோலோதுரைடியா Holothuroidea உயிரியல் வகுப்பின் கீழ் உள்ள “விலங்குகளில்” மிகவும் மாறுபட்டதான, சந்தைப் பெறுமதி மிக்கதும் அழகானதுமான உயிரினங்களாகும். இவை சக உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உயிரிகள். வழமையாக சேற்று மணல் மற்றும் கடல் அறுகுகள் – கடற்புற்கள் விளைந்திருக்கும் கடலடித்தளங்களையே இவை தமது வாழ்விடமாக கொண்டுள்ளன. அதேவேளை, மணல்களும் – கற்களும், முக்கியமாக பவளப் பாறைகளுக்கு மத்தியிலும் இவை ஆழ்கடலில் வாழ்கின்றன. இவற்றின் நீளம் சில […]
ஒரு பக்கம் இந்தியக் கடற்கொள்ளை மக்களைப் பட்டினியில் வாட்ட, சீனத் திருடர்கள் இலங்கையின் வடமேற்குக் கரையின் வளங்களைக் கொள்ளையடிக்க உள்ளூர் அரசியல் சதிகாரர்களின் வழிகாட்டலுடன் வடக்கு மாகாணத்தை நோக்கி வந்தார்கள். இதைப் பற்றி பேசுவதற்கு முன்பு இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான அரசியல் – பொருளாதார வரலாற்றையும் அதன் உள்ளடக்கத்தையும் மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது. சீன – இலங்கை உறவு ஆழமான, வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உதாரணமாக கி. பி. […]
அறிமுகம் பல சர்வதேச நிறுவனங்களும் அவற்றின் உள்ளூர்த் தரகு முதலாளிகளும் இலங்கையின் அரச அதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு நமது கடலை அபகரிப்பதை, அதன் வளங்களை கொள்ளையிடுவதை துணிந்து எதிர்த்து நிற்கிறார்கள் கடல் தாயின் மக்கள். அவர்கள் தமது அந்த வாழ்வாதாரம் அழிக்கப்படும் அநியாயத்தை முன்னிறுத்திப் போராடுகிறார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம், அப்போராடும் மக்கள் சக்திக்கு உரமூட்டும் விதமாக போராட்டங்களுக்கான நியாயங்களை சமூகவியல், பொருளாதாரம், அரசியல், வரலாறு மற்றும் உயிரியல் – […]
எனது அம்மாவின் தந்தையார், வைத்தியான் சந்தியாகு இறக்கும்வரை பறிக்கூடு (Fishing Trap) வைத்து மீன்பிடித்தார். பறிக்கூடுகளை கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் அளவான தூரத்தில் கொண்டு சென்று அங்குள்ள முருகை, சல்லி, பார் என்று எம்மவரால் அழைக்கப்படும் பவளப்பாறைகளுக்கு இடையில் வைத்து விடுவார். அடுத்த நாள் வெயில் நன்றாக ஏறிய பின் பறிக்கூடுகளை மரக்கோலின் கொக்கியால் தோணிக்குள் எடுப்பார். மீன்களை பறிகளிலிருந்து எடுத்துவிட்டு, மறுபடியும் பறிக்கூடுகளை அதே இடத்தில் வைத்துவிட்டு […]