ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஒற்றையாட்சி அரசு (Unitary State), ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பன நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த அரசறிவியல்துறை எண்ணக்கருக்கள் (Concepts) என்பதையும், நவீனத்துக்கு முந்தியகால அரசுகளை ஒற்றையாட்சி முறையில் அமைந்த நேஷன் ஸ்டேட்ஸ் (Nation State) என விளக்கம் கூறுவது வரலாற்றுத் திரிபு என்பதையும் பேராசிரியர் செனிவிரத்தின விளக்கிக் கூறியிருப்பதை இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் எடுத்துக் கூறினோம். 2500 ஆண்டுகளுக்கு மேலாக […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் (ICES) கொழும்பு, 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இனத்துவக் கற்கைகள் (Ethnic Studies) என்ற ஆய்வுத்துறை உலக அளவில் பிரபலம் பெற்று வந்த காலத்தில் இலங்கையில் நிறுவப்பட்ட இந்த ஆய்வு நிறுவனம், தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக 2002 ஆம் ஆண்டு இனத்துவமும், இனத்துவ அடையாளமும் முரண்பாடுகளும் (Ethnicity, Identity and Conflict) என்ற விடயப் […]
இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY 1750 […]
‘போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை’ (History After the War Historical Consciousness in the Collective Sinhala Buddhist Psyche in Post war Sri Lanka) என்ற தலைப்பிலான நூலை கலாநிதி. நிர்மால் ரஞ்சித் தேவசிறி வெளியிட்டார். இந் நூலை அவர் எழுத முன்னர், ‘போருக்குப் பின் வரலாறு : நல்லிணக்கத்திற்கு எதிரான சவால்’ எனும் கட்டுரையை ground views (groundviews.org) இணைய சஞ்சிகையில் […]
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளன் என்ற தமிழ் அரசனைப் பற்றி ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீபவம்சம்’ என்னும் பாளி நூல் “ஆசை, குரோதம், அச்சம், தற்பெருமை ஆகிய மாயைகள் சூழ்ந்த வழிகளில் தன் மனதைச் செலுத்தாமல் அறவழி நின்று செங்கோல் ஓச்சினான்” என்று புகழ்ந்துரைக்கிறது. அம் மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு, மன்னன் எல்லாளன் வீழ்த்தப்பட்ட இடத்தில் […]
ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையில் பிறந்தவரான தம்பையா இலங்கைப் பல்கலைக்கழகம், கொர்ணல், ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை விரிவுரையாளராக 1960 களில் கடமையாற்றினர். 1980 – 83 காலப்பகுதியில் ‘யுனெஸ்கோ’விலும் அதன் பின்னர் கேம்பிரிட்ஜ், சிக்காக்கோ, ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கடமையாற்றினார். உலக அளவில் செல்வாக்குள்ள கோட்பாட்டாளரும் தேரவாத பௌத்தம் […]
ஆங்கில மூலம் : கணநாத் ஒபயசேகர கணநாத் ஒபயசேகர அவர்கள் கொம்பிரிட்ஜ் என்ற அறிஞருடன் இணைந்து ‘Buddhism Transformed : Religious change in Ceylon’ என்ற நூலை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந் நூல் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் இலங்கையின் மரபுவழிப் பௌத்தம் (Traditional Buddhism) நவீனத்துவக் கூறுகளை உள்வாங்கியதை விபரிக்கிறது. நவீனத்துவம் பௌத்த சமயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) என […]
ஆங்கில மூலம் பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன அவர்கள் ‘The People of the Lion: Sinhala Identity and Ideology In History and Historiography’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதினார். இக் கட்டுரை யொனதன் ஸ்பென்சர் பதிப்பித்து Routledge பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘Sri Lanka History and Roots of Conflict (1990)’ கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் நவீன […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம கத்தோலிக்க இயக்கத்திற்கு எதிர்ப்பு இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களை ஈர்ப்பதற்கு கத்தோலிக்கமும், கிறீஸ்தவப் பிரிவுகளும் போட்டியிட்டன. இது பௌத்த பிக்குகளின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை தோற்றுவித்தது. 1950 களில் பௌத்தர்கள் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அக்காலத்தில் “Catholic Action” (கத்தோலிக்க இயக்கம்) என்ற அச்சுறுத்தல் பற்றிய பேச்சு அரசியலில் முதன்மை பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி பௌத்தர்களின் பாதுகாவலன் […]
ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம அரசாளும் தொழில் மரபு வழிச் சமூகத்தில் சத்திரியர்க்கு உரியது. இராச வம்சத்திற்குரிய இந்த அரசாளும் தொழிலில் புத்த துறவிகள் ஈடுபடுதல் ‘விநய’ ஒழுக்கங்களுக்கு முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கையின் நவீன கால அரசியல் வரலாற்றில் இவ்வாறான முரண் நிலைகள் தோன்றியதுண்டு. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் தேதி இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டது. அவ்வேளை ‘மௌபிம சுறக்கீமே […]