யாழ்ப்பாணத்துச் சாதியம் - ஆய்வுகள் Archives - Page 3 of 3 - Ezhuna | எழுநா

யாழ்ப்பாணத்துச் சாதியம் - ஆய்வுகள்

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி

10 நிமிட வாசிப்பு

மொழிபெயர்ப்புக் கட்டுரை: க. அருமைநாயகம் யாழ்ப்பாண மக்களின் பொருளாதார சமூக, சமய வாழ்க்கையில் சாதிமுறை முக்கிய பங்கினைப் பெற்றிருந்தது. அங்கு சாதிப் பிரிவுகள் பலவாக இருந்தன. உயர் சாதியான வேளாளர் முக்கிய வகிபாகத்தை பெற்றிருந்தனர். கோவியர், பள்ளர், நளவர் என்பன அடிமைச் சாதிகள் எனவும், அம்பட்டர், வண்ணார், கொல்லர், தச்சர், பறையர் ஆகியன குடிமைச்சாதிகள் எனவும் கருதப்பட்டன. சாதிகள்  அகமணக் குழுக்களாகும். ஒரு சாதியினர் பிறசாதிகளுடன் சமபந்திபோசனம் வைத்துக்கொள்வதோ, விவாக […]

மேலும் பார்க்க

பொருளாதார மாற்றங்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் – பகுதி 4

10 நிமிட வாசிப்பு

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்   இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேளாளர்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை சாதி அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்ற  நிலையில் இருந்து உயரவிடாது தடுத்தமைக்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் மலிவான கூலி தடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற தேவை. இரண்டாவது வேளாளரின் சாதி அந்தஸ்து தர அடுக்கில் தமது குடும்பத்தின் நிலையைத் தாழ்ந்து போகாது பாதுகாத்தல் (வேளாளர் சாதிக்குள் நூற்றுக்கணக்கான உபசாதிகள் உள்ளன). […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணமும் சாதிப்பழமை வாதமும் – பகுதி 3

10 நிமிட வாசிப்பு

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் தோட்டப் பொருளாதாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அடக்குமுறையானது தொடர்ந்து சடங்கியல் இழிவுப்படுத்தல் மூலம் நகர்த்தப்பட்டது . இதன்மூலம்  அந்தஸ்துநிலை வேளாளர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் பிரிக்கும் எல்லைக்கோடுகள், வெளித்தலையீடுகளால் தாக்கப்படும் நிலையில் இருந்தன. இந்தவிடயம் விக்டோரியா காலத்தில் (19 ஆம் நூற்றாண்டில்) வேளாளருக்கு உணர்த்தப்பட்டது. தாராளவாதக்கொள்கை கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் ஒரு மனதோடு பழமைவாத சாதிக்கட்டுப்பாட்டு  அடிமைத்தனத்தில் இருந்து தமது காலனித்துவ குடிகளை விடுவிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களால் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகளும் சாதி மோதல்களும் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்          நில உடைமை, மூலதனச் சொத்துக்கள், வர்த்தகம், நிர்வாகப் பதவிகள், அரசியல் தலைமைத்துவப் பதவிகள் என்ற யாவற்றையும் ஒரே ஒரு மேலாதிக்கச்சாதி தனது தனியுரிமையாக்கிக் கொண்டு ஆதிக்கம் செய்வது தென்னாசியப் பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் விடயம் (Srinivas 1955, 1959,  Raheja 1988). இவ்வாறான ஒரு நிலைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது யாழ்ப்பாணம் ஆகும். யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையை […]

மேலும் பார்க்க

இலங்கையின் வடபகுதியில் 1968 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆலயப்பிரவேச நெருக்கடி – பகுதி 1

9 நிமிட வாசிப்பு

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர் 1968 ஆம் ஆண்டு பரிஸ் நகரில் மாணவர்கள் வீதிகளில் மறியல் செய்து பெரும் கிளர்ச்சி நடத்திய அதேஆண்டில் இலங்கையின் தமிழ் கலாசாரத்தின் மத்தியான யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குள் இன்னொருவகையான சிவில் குழப்பம் நிகழ்ந்தது. இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவுடன் (Peking wing) தொடர்புடைய செயற்பாட்டாளரின் வழிநடத்தலில் நூற்றுக்கணக்கான தீண்டத்தகாதவர்கள் என்று மரபு வழியில் ஒதுக்கப்பட்ட பள்ளர், நளவர் சாதியினர் யாழ்ப்பாணத்தின் பழமைவாத நடைமுறைகளைக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்