ஆங்கில மூலம்: அசங்க வெலிக்கல கோத்தபாயராஜபக்ச 2019இல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஜனாதிபதிமுறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தில் 20ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான நகர்வாக அமைந்தது. இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை ஜனாதிபதி முறைக்கு (Presidentialism) ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்களை மறுத்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அசங்க வெலிக்கல (Asanga Welikala) என்னும் […]
ஆங்கில மூலம் : கலன சேனரத்தின 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும் பதவி வகித்த காலம் அப்போது ஆரம்பித்தது. ஜனாதிபதித் தேர்தலை அடுத்து இம்மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. 2015 இன் பிற்பகுதியிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடைபெறவிருந்தது. இதனால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால […]
ஆங்கில மூலம் : கலன சேனரத்ன 1987 நவம்பர் 6 ஆம் திகதி இலங்கையின் உயர்நீதிமன்றின் 9 நீதிபதிகள் கொண்ட மன்று மாகாண சபைகளை உருவாக்குதல் தொடர்பான இரு மசோதாக்கள் பற்றி ஆராய்ந்து தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றின் முன்னர் வைக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருவன: 1978 அரசியல் யாப்பின் உறுப்புரை 120 இன்படி அரசாங்கத்தால் இயற்றப்படவிருக்கும் மசோதாக்கள் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு முரணுடையனவாக உள்ளனவா, அல்லது முரண்படாதனவாகவும் இசைவானவையாகவும் உள்ளனவா என்பதை […]
ஆங்கில மூலம் : கலன சேனரத்ன இலங்கையின் சட்ட அறிஞர்களில் ஒருவரான கலன சேனரத்தின (LL.B, LL.M, PH.D) அவர்கள் ‘Democratic Governance and the Supreme Court in Sri Lanka’ என்னும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரை Democracy and Democratisation in Sri Lanka : Paths, Trends and Imaginations என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் பகுதி 1 இல் (பக். […]
ஆங்கிலம் : ஜயதேவ உயன்கொட இலங்கையில் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தாபிக்கப்பட்டது. அன்று தொடக்கம் பாராளுமன்றம் பற்றிய அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இலங்கையின் பாராளுமன்றத்தின் கதை நவீன ஜனநாயகம் பற்றிய பல கதைகளுடன் பிணைப்புடையதாகும். இக்கதைகளினூடே இலங்கையின் அரசியல் யாப்புக் கட்டமைப்பை மாற்றும் முயற்சிகளும் வெவ்வேறு உயர் குழுக்களின் அதிகாரப் போட்டியும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் பற்றிய கதைகளும் எமக்குத் தெரிய வருகின்றன. குறிப்பாக அரசு அதிகாரத்தை […]
ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார இனத்துவ மேலாண்மை முறை மில்டன் ஜே. எஸ்மன் (Milton J. Esman) என்னும் அரசியல் அறிஞரின் இனத்துவ மேலாண்மைமுறை (Ethnic Dominance System) என்னும் எண்ணக்கருவை இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றை விளக்குவதற்கு பிரயோகிக்கும் நவரட்ண பண்டார அவர்கள், இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை இனக்குழுமம் மேலாண்மை பெற்ற இனமாகவும், சிறுபான்மை இனமான தமிழ் இனம் மேலாண்மை இனத்திற்குக் கீழ்ப்பட்ட சிறுபான்மை இனமாகவும் (Subordinate […]
ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பின்காலனித்துவ இலங்கையில் அரசைக் கட்டி வளர்க்கும் திட்டம் பற்றிய விவாதங்கள் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இலங்கையின் பழமைவாத உயர்குழுக்கள் (Conservative Elites) ஒன்று சேர்ந்து கூட்டணியொன்றை அமைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம் (National Unity Government) ஒன்றை உருவாக்கின. இந்தக் கூட்டணிக்குள் விரைவிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டன. சிங்கள உயர்குழாம் தலைவர்களிடையே எதிர்காலத்தில் தலைமைப் பதவிகளை யார் யார் பெற்றுக் கொள்ள வேண்டும் […]
ஆங்கில மூலம் : நவரட்ண பண்டார பேராசிரியர் A.M நவரட்ண பண்டார அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் 1990 கள் முதல் இன்றுவரை இலங்கையில் இன ஐக்கியம், சமூகநீதி, ஜனநாயகம் என்பவற்றுக்காக தமது புலமைத்துறை ஆய்வுகள் மூலம் பங்களிப்புச் செய்து வருபவர். ‘Ethnic Politics and the Democratic Process in Post – Independence Sri Lanka’ என்னும் […]