உப்போடு புளியோடு முப்பத்து இரண்டு திருமணமாகி அடுத்த நாள் மணமகன் சந்தைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வீட்டுக்கு வாங்கி வருவார். இதனை உப்போடு புளியோடு முப்பத்திரெண்டும் வாங்கி வருதல் என்பார்கள். உப்பு, புளி, ஏலம், கறுவா, வாசனைத்திரவியங்கள், மீன், இறைச்சி, மாசி, கருவாடு, மரக்கறிகள், அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு உள்ளிட்ட அத்தனை பொருட்களும் இதில் அடங்கியிருக்கும். இது மணமகனின் கௌரவத்தை வெளிப்படுத்துவதாக […]
திருமண அழைப்பு ஆரம்பகாலங்களில் திருமண அழைப்பானது வாய்வழியாகவே சொல்லப்பட்டு வந்தது. இதனை விசேளம் சொல்லுதல் என்று அழைப்பர். நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு வட்டா வைத்து அழைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. குடும்பத்தினர்களுக்கு மணமகன், மணமகள் நேரடியாக அழைப்பு விடுப்பதும் உண்டு. வட்டா வைத்து அழைத்தல் வெண்கல வட்டா ஒன்றில் ஏழு வெற்றிலை, ஏழு பாக்கு வைத்து வட்டாவின் காலில் கட்டப்பட்ட வெள்ளைத்துணியால் அதை மூடிக்கொண்டு எடுத்துச் செல்வார்கள். பள்ளி மரைக்காயர்மார், லெப்பை, முஅத்தின், […]
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பண்பாடு பற்றிக் குறிப்பிடுகையில், “பண்பாடு என்பது உண்மையில் மானிடவியல், சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். அன்றாட வாழ்க்கை உறவுமுறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவுவகை, ஆடை – ஆபரணங்கள், வைபோகம், சடங்கு இவற்றினூடாகத் தோன்றுகின்ற ஒரு மனநிலை” என்பார். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு அடிப்படைகளை இரண்டாகப் பகுக்கலாம். எடுத்துக்காட்டாக: உண்ணும்போது, நகம் வெட்டும்போது, உறங்கும்போது பின்பற்றும் நடைமுறைகள் போன்று அனைத்து வாழ்வியலம்சங்களுக்குமான […]
பெயராய்வின் (Onomastics) பிரதானமானதொரு கிளையாக இடப்பெயராய்வு (Toponymy) காணப்படுகின்றது. இது சமூகங்களுக்கிடையேயான வரலாறு, பண்பாடு மற்றும் மொழியியல் தொடர்புகளைப் புரிந்துகொள்ளப் பயன்படும் நுணுக்கமான ஒரு கருவியாகக் காணப்படுகின்றது. இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பரமான சகவாழ்வு, வர்த்தகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரை கிழக்கிலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரிய அசைவுகளின் இன்னுமொரு பக்கமாகும். வரலாற்றுப் பின்னணி இலங்கை முஸ்லிம்கள், பல்வேறு மூலங்களுடன் இலங்கை வரலாற்றில் இணைகின்றனர். […]
மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது. இடப்பெயராய்வு (Toponomastic) ஆட்பெயராய்வு (Anthrophonomastic) இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic) சமூகப் பெயராய்வு (Socio Onomastic) […]
இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மொத்தமாக மத்தியகிழக்கில் இருந்தோ இந்தியத்துணைக்கண்டத்தில் இருந்தோ வந்து இலங்கையில் குடியேறியவர்களல்ல. அவ்வாறு குடியேற்றத்தின் பொருட்டே அவர்களின் முழு நிலவுகையும் காணப்பட்டிருக்குமாயின் அவர்கள் இலங்கை சனத்தொகையில் பத்து சதவீதத்தை அண்மித்துக் காணப்படுவது சாத்தியமற்றதாகும். அவர்கள் இலங்கையின் பூர்வகுடிகளிலிருந்து திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதன் மூலமாகவும், இஸ்லாமிய வாழ்க்கைநெறியை பின்பற்றத் தொடங்கிய பூர்வகுடிகள் மூலமாகவுமே இது சாத்தியப்பட்டிருக்கின்றது. இவர்களின் தாய்மொழி தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் […]
இந்தத்தொடரில் முஸ்லிம்களிடம் வழக்கிலுள்ள மார்க்க உபன்யாசகர்கள் வழிவந்த குடிகளைப்பற்றி சுருக்கமாக பார்க்கலாம். கோசப்பாகுடி இந்தக்குடி சம்மாந்துறையில் காணப்படுகின்றது. குடிகள் தாய்வழியாகப் பின்பற்றப்படுவதால் பெண்பெயர்களில் மாத்திரம் காணப்படுவதில்லை. இந்தக்குடியின் பெயர் ஆண் பெயரில் காணப்படுகின்றது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சம்மாந்துறைத் துறைமுகத்தை வந்தடைந்த சரக்குக் கப்பலொன்றில் மத்தியகிழக்கு அல்லது பாரசீகத்தைச் சேர்ந்த கோஸப்பா என்பவரும், அவருக்கு உதவியாளராக கோஸ்முகையதீன் கரியப்பா என்பவரும் அவர்களுடன் ஆறுவயது மதிக்கத்தக்க பெண்குழந்தையொன்றும் வருகை தந்தனர். […]
இந்தக்கட்டுரை முஸ்லிம்களிடம் வழக்கிலுள்ள சில குடிகளின் ஆரம்ப வரலாற்றை நோக்குகின்றது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் குடிகளை நோக்கும் போது அவை ஒரே தடவையில் உருவாகியவையாக இராமல் காலத்திற்குக் காலம் புதிய குடிகள் தோற்றம் பெற்றே வந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதிவரை புதிய குடிகளின் தோற்றம் நிகழ்ந்தே வந்திருக்கின்றது. இக்கட்டுரை இரு ஊர்ப்பெயர் கொண்ட குடிகளையும் சம்பானோட்டி குடியைப்பற்றியும் விபரிக்கிறது. மாந்தறா குடி – மாந்திராவ குடி இந்தக்குடியினர் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, […]
தாய்வழிக்குடிமரபு கிழக்கிலங்கை என்ற நிலப்பரப்பு பற்றி நோக்கும் போது கிழக்கிலங்கை என்ற தரைத்தோற்றத்தைவிட பண்பாடு சார்ந்த பரப்பை இக்கட்டுரை கவனத்திற்கொள்கின்றது. ஆய்வாளர் துலாஞ்சனன் ‘கொட்டியாரக்குடாவுக்கும் குமுக்கனாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் பிரதானமாக தமிழ் பேசும் சமூகங்களாலானதும், தாய்வழிக்குடிமரபைப் பின்பற்றும் சைவ மற்றும் இஸ்லாமியப் பண்பாட்டு நுண்பிராந்தியங்களால் ஆனதும் கிறிஸ்தவர்களதும் வேடர்களதும் பண்பாட்டுப் பங்களிப்பால் செழுமையூட்டப்பட்டதும் அவ்வப்போதான சிங்களவர்களது ஊடாட்டத்தைக் கொண்டதுமான ஊர்களின் கொத்தணிகள் அடங்கும் நிலப்பரப்பு’ (துலாஞ்சனன் 2022) என்ற […]
கிழக்கிலங்கை, இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்த வாழ்கின்ற பிரதேசமாகும். 2012 ஆண்டு சனத்தொகைக்கணக்கெடுப்பின் பிரகாரம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிக முஸ்லிம் சனத்தொகை சதவீதம் காணப்படுகின்றது[i]. இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுபட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரக்கூறுகளிலிருந்தும் தனித்துவமானதாக காணப்படுகின்றது. கிழக்கில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் தமிழர்களோடு இஸ்லாமிய மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஆரம்பகாலங்களில் கொண்ட திருமணபந்த உறவினாலும், வங்காள […]