தமிழில் : த. சிவதாசன் சேதனப் பாவனையை நோக்கிய இலங்கையின் பயணம் வடக்கிலுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைத் தர முடியாது. போர்க்கால பொருளாதாரத் தடைகளும், கட்டுப்பாடுகளும் வடக்கு மக்களை, இறக்குமதியில் தங்கியிராது இயற்கையில் மட்டுமே நம்பியிருக்க எப்போதே பழக்கப்படுத்தி விட்டன. சில பொருட்கள் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தன. சில, கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்பட்டன. பெண்களின் சுகாதாரப் பொருட்கள், பற்றரி, பெற்றோல், சீமந்து, அசேதனப் பசளை, களைகொல்லி உட்படப் பல பொருட்கள் வடக்கில் காணாப் பொருட்களாகிவிட்டன. […]