ஆரோக்கியம், பொருளாதாரம் எனப் பலவழிகளாலும் உலகிற்கு மிக மோசமான பாதிப்புகளைத் தந்துகொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று, கற்றலிலும், பணிகளிலும்கூட பல புரட்சிகரமான மாற்றங்களைத் திணித்து வருகிறது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் நேரடிக் கல்வியிலிருந்து தொலைக் கல்வியைத் (distance learning) தரும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக வளாகங்களில் கவனமற்ற போதிப்பு, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றால் சோர்வுற்ற இளையோர் இப்போது தமது வீடுகளில் படுக்கையறைகளை வகுப்பறைகளாக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருக்கும் கிராமத்துப் பிள்ளைகளும் […]