ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை Archives - Ezhuna | எழுநா

ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை

கீழைக்கரையில் சோழர்

10 நிமிட வாசிப்பு | 1976 பார்வைகள்

10 ஆம் நூற்றாண்டில் இராசநாட்டில் இருந்த அனுராதபுரச் சிங்கள அரசு இலங்கை சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்துவிடுகின்றது. அக்கால ஆசியாவின் ஆதிக்க சக்திகளாக விளங்கிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிக கணங்களும் அனுராதபுர அரச வம்சத்தினரிடையே காணப்பட்ட ஆட்சிப் போட்டியும் சோழர் இலங்கையுள் நுழைவதற்கு சாதகமாக விளங்கின. மெல்ல மெல்ல இவ்வாதிக்கமானது முழு இராச நாட்டிலும், அக்கால இலங்கைத் தலைநகர் அனுராதபுரத்திலும் கிளர்ச்சிகள், அரசியல் கலவரங்களின் வழியே அதிகாரத்தைக் […]

மேலும் பார்க்க

இறக்காமம் : அனுராதபுரச் சேனாதிபதி அரக்கனுக்காக வரி விலக்கப்பட்ட ஊர்

17 நிமிட வாசிப்பு | 7696 பார்வைகள்

ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் கீழைக்கரையின் அரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவான தகவல்களெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கீழைக்கரையின் நடுப்பகுதியில் வேகம்பற்று வடக்கு (உகணை) இராசக்கல் மலையும் தென் எல்லையில் பாணமைப்பற்று (இலகுகலை) மங்கல மகா விகாரமும் தொடர்ச்சியாக புத்த மையங்களாக இயங்கிக்கொண்டிருந்தன என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. முன்பு இலட்சக்கல் என்று அழைக்கப்பட்ட இலகுகலை (லஃகு|கல, lahugala) பொத்துவில்லுக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிங்களக் கிராமம் ஆகும். […]

மேலும் பார்க்க

அக்கபோதியின் மனைவி : அக்கபோதி கவர்ந்து சென்ற அக்கபோதியின் மகள்  

15 நிமிட வாசிப்பு | 6162 பார்வைகள்

அனுராதபுரத்தை ஆறாம் அக்கபோதி மன்னன் ஆண்டு வந்த காலத்தில் (722 – 734) சுவையான ஒரு சம்பவம் இடம்பெற்றது. அவன் தன் மகள் சங்காதேவி என்பவளை அக்கபோதி என்ற பெயர் கொண்ட இன்னொரு இளவரசனுக்கு மணமுடித்து வைத்திருந்தான். ஏனோ அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. கணவன் – மனைவிச் சண்டையில் ஒருநாள் அவன் அவளை கடுமையாக அடித்துவிட சங்காதேவி தன் தந்தையிடம் சென்று முறையிட்டிருக்கிறாள். தந்தை அக்கபோதி, அவளை கொஞ்சக் […]

மேலும் பார்க்க

மண்முனையில் பற்சின்னம் கொணர்ந்தவளும் மல்வத்தையில் புத்தர் சிலை அமைத்தவனும்

15 நிமிட வாசிப்பு | 6097 பார்வைகள்

மகாசேனனுக்குப் பின்னர் (276 – 301) அவன் மகன் மேகவண்ணன் அனுரை அரியணையில் அமர்ந்தான் (301 – 328). அவன் காலத்தில் கலிங்க நாட்டுப் பிராமணப் பெண்ணொருத்தி புத்தரின் திருப்பற்சின்னத்தை அனுரைக்குக் கொணர்ந்ததாகவும் அது மேகவண்ணன் தேவானாம்பிரிய திசையனால் அமைக்கப்பட்ட “தருமச்சக்கரம்” எனும் கட்டடத்தில் வைக்கப்பட்டதாகவும், அன்று முதல் அது “தலதா மாளிகை” என்று அழைக்கப்பட்டதாகவும்  மகாவம்சம் சொல்கின்றது (மவ. 37:90-95). ஆனால் இராசாவழி நூல் சொல்வதன்படி, அந்தப் பெண்ணின் […]

மேலும் பார்க்க

மகாசேனன் காலம் வரை கிழக்கு உரோகணம்

16 நிமிட வாசிப்பு | 10166 பார்வைகள்

அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண […]

மேலும் பார்க்க

கீழைக்கரை : துட்டகாமணி முதல் வட்டகாமணி வரை

16 நிமிட வாசிப்பு | 9529 பார்வைகள்

ஆரம்பத்தில் பத்து உடன்பிறந்தார் குலத்தோரை அடையாளம் காண சிங்கள வரலாற்றாசிரியர்கள் தடுமாறியிருக்கிறார்கள். ஏனெனில், அனுராதபுர மன்னன் மூத்தசிவனுக்குப் புதல்வர்களாக பத்து உடன்பிறந்தார் இருந்தார்கள் (மகாவம்சம் 11:5-6). கொத்ததாமூக்கல், போவத்தகல் கல்வெட்டுகளை முதலில் படித்தபோது செனரத் பரணவிதானவும் அதிலுள்ள உதியன், அபயன் ஆகிய பெயர்களை மூத்தசிவனின் பத்து மைந்தருடையது என்றே கருதினார் (Paranavitana, 1970:l-li). எனினும் பின்னாளில் அவர்கள் தனி அரசகுலம் என்று கருத்தை மாற்றிக்கொண்டார்.  மூத்தசிவனின் பத்து மைந்தர்களில் இளையவன் […]

மேலும் பார்க்க

கீழைக்கரையின் முதல் அரசு : பத்து உடன்பிறந்தோர் குலம்!

14 நிமிட வாசிப்பு | 8840 பார்வைகள்

ஒரு சமூகத்தில் உற்பத்தியும் செல்வமும் உபரியாகின்ற போது அந்த சமூகத்தில் அதிக செல்வத்தை வைத்திருக்கின்ற தனிநபர்கள் செல்வாக்குப் பெற்று ஆதிக்க வர்க்கமாக உருவெடுக்கிறார்கள். அப்படி ஆதிகாலத்தில் தோன்றிய முதல் செல்வாக்கான நபர்களிலிருந்தே நிலக்கிழார்களும் பின் அரசர்களும் தோன்றினார்கள் என்பதை போன அத்தியாயத்தில் பார்த்தோம். அப்படி இலங்கையின் வடபாதியில் தோன்றிய தொல்லரசு அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டிருந்தது என்பதையும் அந்த முதல் அரசை உருவாக்கிய மூதாதையராக விசயன் என்ற இலாட நாட்டினன், சிங்களன் […]

மேலும் பார்க்க

கீழைக்கரையில் நாகரும் அனுரை அரசரும்

12 நிமிட வாசிப்பு | 9932 பார்வைகள்

கீழைக்கரையில் நாகர் “கலி கடந்து எண்ணூறு ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நாகர் இயக்கரோடு கலந்து ஓரினமானார்கள். அவர்கள் தனி இனமாக பல்வேறு நகரங்களை ஆளலாயினர். அவர்களது முதன்மை நகராக உகந்தம் எனும் நகர் விளங்கியது.” என்று ஆரம்பிக்கின்றது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். இலங்கையில் வாழ்ந்த நாகர் எனும் இனம் இயக்கர் என்னும் இன்னொரு குலத்தை வென்று கலந்ததும், அவர்கள் உகந்தையை அரசிருக்கையாக்கியமையையும் சொல்லும் பாடல் இது. நாகபாம்பை குலக்குறியாகக் கொண்டிருந்தோர் […]

மேலும் பார்க்க

இயக்கர் அல்லது பத்தர் : இலங்கை வரலாற்றுக் காலத்தின் துவக்கம்

11 நிமிட வாசிப்பு | 14664 பார்வைகள்

கீழைக்கரையில் மாப்பாறைக்காலம் அல்லது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல கட்டமைப்புகள், வாகரை, உகந்தை உள்ளிட்ட இடங்களில் அவதானிக்கப்பட்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் கண்டிருந்தோம். மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு வாகரையில் வெருகலாற்றின் கழிமுகத்தை அண்டிய குரங்கு படையெடுத்த வேம்பில் பாறைக் கற்களாலான கற்கிடை [1] அடக்கங்களும் போரதீவுப்பற்று வெல்லாவெளி மண்டூரை அண்டி பெருங்கற்கால அடக்கங்களும் முன்பு இனங்காணப்பட்டிருந்ததுடன், திருக்கோணமலை – கொட்டியாரப்பற்று கிழக்கு – வெருகல் இலந்தைத்துறையில் கரும்-செம் கலவோடுகள் பெறப்பட்டிருக்கின்றன (பத்மநாதன், 2013:16). […]

மேலும் பார்க்க

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை

15 நிமிட வாசிப்பு | 26494 பார்வைகள்

எழுதப்பட்ட ஆவணங்களே வரலாற்றுக்கு ஆதாரம். எழுத்துக் கிடையாத காலத்தில் வேறு தொல்லியல், மானுடவியல் எச்சங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் போது அது ‘முன்னை-வரலாறு’ (Pre-History) என்று அழைக்கப்படும். முன்னை-வரலாற்றின் குறைந்தபட்ச எல்லை என்பது அங்கு எழுத்துச் சான்று கிடைத்த காலமே. நாம் வரலாறை எப்போதும் மனிதனை மையமாகக் கொண்டே வரைவதால், ஒரு நாட்டின் முன்னை-வரலாறானது அங்கு முதல் மாந்தன் தடம் பதித்த காலத்திலிருந்து, அங்கு கிடைத்த முதல் எழுத்துச் சான்று வரையான […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)