கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகளில், உள்ளூர்க் குடிகளிடையே நீடித்து வரும் தொன்மங்கள் முக்கியமானவை. சமகாலத்தில் எழுத்தாதாரங்களுக்கு மேலதிகமாக தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள், நாட்டார் பாடல்களை சரித்திர ஆதாரமாகக் கருதவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொறிப்புச் சான்றுகளோ எழுத்துச் சான்றுகளோ இல்லாத சமூகங்களுக்கிடையே நீடித்து வரும் கர்ண பரம்பரைக் கதைகளை நன்கு ஆராய்ந்து அவற்றுக்கான வரலாற்றுச்சான்றாக முன்வைக்கமுடியும் என்பதே நவீன வரலாற்றுவரைவியல். அந்தவகையில் கீழைக்கரைக்கான தொன்மச் சான்றுகளாக ஊர்சார் வரலாறுகள், சமூகங்கள் சார் தொன்மங்கள், […]
பூர்வ சரித்திரம் சொல்வனவற்றில் புறச்சான்றுகளைக் கொண்டும் ஊகத்தின் அடிப்படையிலும் ஏற்கத்தக்க விடயங்களை நாட்டார் தொன்மங்கள் என்ற ரீதியிலும், சிலவற்றை வரலாற்றுண்மைகள் என்ற ரீதியிலும் வகைப்படுத்திப் பார்க்கலாம். அவற்றில் முதலாவது, கூத்திக மன்னனால் மட்டுக்களப்பு எனும் அரசு உருவான கதை. சேனன், கூத்திகன் (237 – 215) என்போர் சேர நாட்டுக் குதிரை வணிகர் மைந்தர் என்பது மகாவம்சக்கூற்று. இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் தென்னகத்தவராக இனங்காணப்பட்டுள்ள அரசர்களின் பெயர்களை அக்காலச்சூழலுக்கு […]
மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமோ முழுக்க முழுக்க செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரின் படைப்பாக இருந்துவிடமுடியாது என்பதற்கான சில சான்றுகளை கடந்த தொடரில் பார்த்தோம். ஆனால், ஈழத்துப் பூராடனாரின் வாதங்களிலிருந்து நாம் முற்றிலும் மறுக்கமுடியாதிருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால், இன்று மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலில் கணபதிப்பிள்ளை புலவரின் தாக்கம் ஓரளவுக்கேனும் இருக்கிறது என்பதைத் தான். அவரிடமிருந்தே எஃப். எக்`ச். சீ. நடராசா பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியத்திற்கான […]
அது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. ஈழத்துத் தமிழறிஞர்கள் நாடு, தேசியம், இனம் போன்ற விடயங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டம். வட இலங்கையில் இருநூறாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிஞர் மத்தியில் வழக்கிலிருந்த யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை, வையாபாடல் முதலிய பிராந்திய இலக்கியங்களை வைத்து, அப்போது வட இலங்கை வரலாற்றை எழுதும் முயற்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. திருகோணமலை சார்ந்து கோணேசர் கல்வெட்டு, கைலாசபுராணம், கோணை அந்தாதி முதலிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தன. […]
கல்மடுவிலுமிருக்கிறது இராசபக்கிச முதலியாருடைய மனுசர்கள் தான். அவர்கள் தானே மற்றும் வெளிகளெல்லாம் விரைத்துத் திண்டுகொண்டிருக்கிற நாளில் அப்படியே விரைத்துத் திண்டுகொண்டிருங்கோவென்று அவருடைய மனுசரை விட்டுப் போட்டு அவர் தளவில்லுக்குப் போய்க் குடியிருந்து கொண்டு அந்த வனம் ஏழுக்கும் முன்னீடு காபழு[1] அனுப்புகிறது வேடரிற் கரடியன் கம்மாஞ்சி[2]. அதன் பிறகு கந்தக் கம்மாஞ்சி – இவர்கள் முன்னீட்டுக் கம்மாஞ்சிமார், அதின்பிறகு கோவில்மேட்டுக்கு[3] அம்மாள் கொண்டு வந்தது ஆரென்றாற் சின்னத்தம்பிப்போடியென்கிறவன், மதுரைக்குப்போய் அங்கே […]
நாடுகாட்டுப் பரவணியில் கிடைக்கும் இரண்டு சுவையான தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று, குலக்கலப்பு மற்றையது குலமுரண்பாடுகள் பற்றிய தகவல்கள். இராசபக்ச முதலியாரின் குடும்பம் முதலில் தளவில்லில் குடியேறியபோது, வழியில் கண்டெடுத்த வேடக்குழந்தையை பறைநாச்சி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். சலவைத்தொழிலாளியினது மனைவி இறந்தபோது அந்தக் குழந்தையின் பரம்பரையே சலவைத்தொழிலாளர் வம்சம் தழைக்க உதவுகிறது. ஏனெனில், கொள்ளை நோய்களின் தாக்கம், குடித்தொகை எண்ணிக்கை குறைவு முதலிய காரணங்களால் மக்கட்செல்வம் மிக அருமையானதாகக் கருதப்பட்ட […]
அது 1967ஆம் ஆண்டு. பேராசிரியர் சி.பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை நூலைப் பதிப்பிப்பதற்காக அதன் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு சுவாரசியமான கையெழுத்துப் பிரதியொன்றைக் கண்டடைந்தார். அப்பிரதி “நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு” என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்பெயர் கொண்ட நூல் பற்றிய உரையாடல் எதுவும் அவருக்குத் தெரிந்தவரை ஈழத்துப் புலமைத்தளத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. எனவே அந்த மைப்பிரதியைக் கவனமாக ஆராய்ந்த அவர், அந்நூலை சிறு முன்னுரையுடன் 1976ஆம் ஆண்டு வெளியான அனைத்துலகத் […]
இலங்கையில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கீழைக்கரையின் வரலாறு, பண்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரிகோணாசல புராணம், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன முக்கியமானவை[1]. இவற்றோடு எழுந்த பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், இராசமுறை ஆகிய நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. இலங்கையின் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மொழிநடை அடிப்படையிலும் பேசுபொருள் அடிப்படையிலும் 16ஆம் நூற்றாண்டுக்கு முற்படாதவை […]
கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி (பாலி – pāli) இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும். பாளிமொழி இலக்கியங்கள் புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை […]