(ஜனவரி, 2025 இல் ‘சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்’ எனும் நூல் ‘எழுநா’ வெளியீடாக வரவுள்ளது. அந் நூலிற்கான முன்னுரை இங்கே தரப்படுகிறது.) இத்தொகுப்பில் 10 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் ‘எழுநா’ இணைய இதழில் 2022 – 24 காலத்தில் தொடராக வெளியிடப்பட்டவை. அரசியல் யாப்புச் சட்டம், அரசியல் கோட்பாடு, உலகின் தேசிய இனங்களின் பிரச்சினைகள், முரண்பாடுகளை இணக்கமான முறையில் தீர்வு செய்தல் ஆகிய துறைகளின் புலமையாளர்களும், […]