“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை” திருக்குறள் (512) மு. வரதராசனார் விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். நான் எதிர்பாராத விதமாக எனது முகநூல் உள்பெட்டியில் நண்பர் ஒருவர், 63 வருடங்களுக்கு முந்தைய சில ஆவணங்களை தனது தாத்தாவின் பழைய ஆவணக் கோப்புகளிலிருந்து எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். அந்த ஆவணமானது எனது […]
“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து”திருக்குறள் – 738 மு. வரதராசனார் விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர். நான் கடந்த மாதம் இலங்கைக்குச் சென்று இரண்டு வாரங்கள் எனது வயதான தாயருடன் ஒன்றாக இருந்துவிட்டு வந்தேன். அவருக்கு தொண்ணூற்று நான்கு வயது. எமது தந்தையார் 42 வருடங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக மறைந்துவிட்டார். தந்தையார் […]
“இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில்”திருக்குறள் (621) மு. கருணாநிதி விளக்கம் : சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். எனது உயர் படிப்பை ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு, முப்பது வருடங்களுக்கு முன் (1994 ஆம் ஆண்டு) ஐக்கிய அமெரிக்காவில் எனது தொழில் வாழ்க்கையை தொடங்கினேன். இந்த முப்பது வருடங்களில் மூன்று உலகளாவிய நிறுவனங்களிலும் இரண்டு ஆரம்பத் தொழில்நுட்ப நிறுவனங்களில் […]
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்” -திருக்குறள் (120)- விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். உலகளவில் தொடக்க நிறுவனங்களை (Startup Companies) அதிகமாக உருவாக்கும் இடமான சிலிக்கன் வலியில் தொடங்கப்படும் நிறுவனங்களில் பத்தில் ஒன்பது தோல்வியடைவது உண்மையாகும். அதற்குப் பல காரணங்களை ஆராய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று; […]
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை”-திருக்குறள் (758)- மு. கருணாநிதி விளக்கம் : தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது. பகிர்வுப் பொருளாதாரம் என்பது பொருட்கள், வளங்கள் போன்றன தனிநபர்கள், குழுக்களால் ஒரு கூட்டு வழியில் பகிர்ந்து கொள்ளப்படுவது. எமது மூதாதையர் பல காரணங்களுக்காக, […]
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு” -திருக்குறள் (383)- மு. வரதராசனார் விளக்கம் : காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை. எமது வாழ்க்கையின் இன்றைய நிலையை இரண்டு விதமான நிகழ்வுகள் வடிவமைத்திருக்கும். முதலாவது, நுண் (Micro) அளவில் நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் செயல்கள், முடிவுகள், அதனால் வரும் விளைவுகள். இரண்டாவது, பெரிய (Macro) […]
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்”-திருக்குறள் (664)- மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம். சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம். ஈழத்தில் நாமும் எங்களின் மூதாதையர்களும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். இந்த வறண்ட பூமியையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டு மிகச் சந்தோசமாக வாழ்ந்த நாட்கள் எனது நினைவில் உண்டு. எமது வாழ்க்கையானது ஒவ்வொரு […]
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்”-திருக்குறள்- மு. வரதராசனார் விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும். ஓர் ஆரம்ப நிறுவனத்தை அமைக்க முதலில் ஓர் சிந்தனை (Idea) தேவை. இண்டாவது அந்தச் சிந்தனையை உற்பத்தியாக உருவாக்கும் தகுதி கொண்ட குழுவினர் (People/Team) தேவை. பின்பு அந்த உற்பத்திக்கான சந்தை (Market) அவசியம். இவை […]
“பிறப்பென்னும் பேதைமை நீங்கச்சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு”-திருக்குறள் 358- மு.வரதராசனார் விளக்கம் : பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. இன்றைய உலகில் தொழில்நுட்ப மாற்றங்கள் மிகவும் துரிதப்பட்டுக்கொண்டு வருகின்றது. முதலாவது தொழில்துறை புரட்சி (Industrial Revolution) 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1900ம் ஆண்டுகளின் முற்பகுதிகளிலும் தொடங்கி உலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. 1900ம் ஆண்டுகளின் பின் பகுதிகளில் […]
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது”-திருக்குறள்- சாலமன் பாப்பையா விளக்கம்: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது. எமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கை, நாம் வாழ்ந்த வாழ்க்கையிலும் மிக வித்தியாசமானது. ஈழத்தில் வாழும் தமிழ்ச் சொந்தங்களானாலும் புலம்பெயர்ந்து வாழும் எம்மைப் போன்றவர்களானாலும், அவர்களது அடுத்த தலைமுறையுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஏராளம். இதற்கு சுற்றுச் […]