யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் Archives - Ezhuna | எழுநா

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்

இலங்கையில் நூலகவியற் கல்வி – பகுதி 2

13 நிமிட வாசிப்பு

இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் பங்கு 1970 ஆம் ஆண்டின் மார்ச் 24 ஆம் திகதி உருவாக்கப்பட்ட 17 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டப்படி 1970 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உருவாக்கப்பட்ட ‘இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின்’ முக்கிய குறிக்கோளும் பொறுப்பும் இலங்கையில் தேசிய நூலகமொன்றை உருவாக்குவதும் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதுமாகும். மேலும் அதன் மற்றொரு முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது, இலங்கையின் நூலகசேவையை நவீனமயப்படுத்தும் வகையில் […]

மேலும் பார்க்க

இலங்கையில் நூலகவியற் கல்வி – பகுதி 1

15 நிமிட வாசிப்பு

ஒரு நாட்டின் பண்பட்ட சமுதாயத்தினை உருவாக்குவதற்குக் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு உதவுகின்றனவோ, அதே போன்ற பங்களிப்பினையே நூலகங்களும் ஆற்றி வருகின்றன. சிறு வயது முதல் மாணவர்களுக்கு அறிவுத் துறையில் ஆர்வத்தையும் அறிவையும் ஊட்ட அக்கறை எடுக்கும் ஓர் ஆசிரியனைப் போலவே நூலகமும் தான் சார்ந்த சமூகத்தினுள்ளே சேவையாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியருக்கு எதைப் போதிப்பது என்றதொரு வரையறை உண்டு. ஆனால் நூலகங்களின் வழங்கல் எல்லையற்றது. சுதந்திரமானதும் விரிவானதுமான தேடலுக்கு ஒருவரை […]

மேலும் பார்க்க

நூலியல் – நூலகவியல் துறைகளில் அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பணி

14 நிமிட வாசிப்பு

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகவியல் துறையின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானதொரு காலகட்டமாக எழுபதுகளின் நடுப்பகுதி கருதப்படுகின்றது. அக்காலகட்டம் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சேவையில் நூலக சேவகர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு கல்வித்தரம் அக்கறையுடன் எதிர்பார்க்கப்படவில்லை. பெருமளவில் கிராமசபை, நகரசபை சிற்றூழியர்களாக இருந்தவர்கள் பதவி உயர்வு கண்டு அவர்களது நிரந்தரப் பணிக்கு மேலதிகமாக தத்தமது கிராம நூலகங்களை பராமரிக்கும் நூலக சேவகர்களாக நியமனம் பெற்றார்கள். கிராமசபை நிர்வாக ஊழியர்கள் சுயவிருப்பின் அடிப்படையில் நூலகத்தையும் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம்: ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 3

19 நிமிட வாசிப்பு

பரமேஸ்வராக் கல்லூரியில் சேர் பொன். இராமநாதன் அவர்களின் நூலகத்தில் இருந்த அரிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் சேர்க்கைகளைக் கட்டியெழுப்பத் தொடங்கியது. நூலகச் சேர்க்கையையும் தளபாட வசதியையும் படிப்படியாக வளர்த்துச் சென்று பின்னாளில் பிரதம நூலகராகப் பதவியேற்ற சி. முருகவேள் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 2

21 நிமிட வாசிப்பு

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் நாள் திருநெல்வேலியில் அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. அதற்கு முன்னரே 1974 இல் ஜூலை 10 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் இயங்கத் தலைப்பட்டுவிட்டதை அதன் முதலாம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கையின் கால எல்லைக் குறிப்பு தெரிவிக்கின்றது (இலங்கைப் பல்கலைக்கழகம் – யாழ்ப்பாண வளாகம் ஆண்டறிக்கை 1974.07.10 […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 1 

17 நிமிட வாசிப்பு

இலங்கையின் உயர்கல்வியில் வட்டுக்கோட்டைக் குருமடம் இலங்கையில் உயர்கல்விக்குரிய வரலாறு மிக நீண்டது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இயங்கிய கிறிஸ்தவ திருச்சபைகளும், உள்நாட்டு சமய மறுமலர்ச்சி இயக்கங்களும், அரசினால் முன்னெடுக்கப்பட்ட கல்விசார்ந்த நடவடிக்கைகள் பலவும் பொதுக்கல்வியின் தேவையை உணரச் செய்திருந்தன. கிறிஸ்தவ மிஷனரிகள் ஏற்கெனவே தமது சமயப் போதனையுடன் விரிவான கல்வி மேம்பாட்டுக்கான அத்திவாரத்தையும் இட்டுவந்தன. வட்டுக்கோட்டைக் குருமடம் (Batitcotta Seminary : 1823 – 1850) இலங்கையில் இருந்த கிறிஸ்தவக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 14

21 நிமிட வாசிப்பு

ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பின்வீதியில், அமைதியான சூழலில் கம்பீரமாகக் காட்சிதந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம், கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் 1964 இல் மறைந்துவிட்ட அவரது அன்பு மனைவி அமரர். ஈவ்லின் விஜயரட்ன இரத்தினம் அம்மையார் அவர்களின் ஞாபகார்த்தமாக 1981 இல் கட்டப்பட்டது.   கட்டடக் கலைஞர் வி.எஸ். துரைராஜா அவர்களின் ‘துரைராஜா அசோஷியேட்ஸ்’ நிறுவனத்தின் (கொழும்பு) வடிவமைப்பில் இரண்டு மாடிக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 13

21 நிமிட வாசிப்பு

ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் தாபகர் வரலாறு ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (13.6.1905 – 04.11.1989), 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியின்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மானிப்பாயில் செல்வாக்குடன் இருந்த ஒரு கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் பண்டத்தரிப்பையும், தாயார் மானிப்பாயையும் சேர்ந்தவர்கள். ருவைற் (Dwight), தப்பான் (Tappan), கார்டினர் (Gardiner) குடும்பத்தினர் இவரது உறவினர்களாவர். தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்கள், […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 12

17 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனித்துவமான சனசமூக நிலைய நூலக மரபு தத்தமது கிராமங்களின் சமூக மேம்பாடு, சமூகத்துக்கான பொது அறிவினை வழங்கல், சமூகத்தினரிடையே ஒற்றுமையைப் பேணல், சுயசிந்தனை கொண்ட அறிவுசார் சமூகமொன்றுக்கான அடித்தளத்தை வழங்கும் வகையில் வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்குதல் என்பன போன்ற காரணிகளை முன்வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாகியதே சனசமூக நிலையச் சிந்தனையாகும்.  அக்காலகட்டத்தில், குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பிரபுக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் மட்டுமே கிட்டியிருந்த […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 11

18 நிமிட வாசிப்பு

ஹண்டி ஞாபகார்த்த நூலகம் (பரி.யோவான் கல்லூரி) 1818 ஆம் ஆண்டு C M S Mission மதப் பணிக்காக இலங்கைக்கு வருகைதந்த வண. ஜோசப் நைட் (Rev. Joseph Knight) அவர்கள் நல்லூரில் வீடு ஒன்றைக் கொள்வனவு செய்து தனது மதக் கல்விப் பணியைத் தொடர்ந்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் பரி. யோவான் கல்லூரி (St. John’s College) உருவாகுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.  வண. ஜோசப் நைட் அவர்கள் நல்லூர் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்