இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் Archives - Ezhuna | எழுநா

இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல்

தமிழ் கட்சிகளும் சாதி அடையாளமும்

10 நிமிட வாசிப்பு | 16315 பார்வைகள்

தமிழரசுக் கட்சியின் இந்த சமூக சமத்துவமின்மைக்குக் காரணம் அந்தக்கட்சி ஏற்கனவே குறிப்பிட்ட ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்துநிலையின் அரசியல் வடிவமாக இருந்ததோடு,  அந்தக் கருத்துநிலையைப் பேணிப்பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகவும் தொழிற்பட்டது. இந்த சாதி மேலாண்மை சிங்கள அரசின் தமிழ் இன, தமிழ் மொழி ஒடுக்குமுறை காரணமாக மூடிமறைக்கப்பட்டு தமிழ் இனம், தமிழ் மொழி எனும் அடையாளத்துக்குள் தமிழர்களை ஒன்று திரட்ட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த வாய்ப்பினை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் […]

மேலும் பார்க்க

தந்திரோபாயமற்ற தமிழர் போராட்டங்கள்

15 நிமிட வாசிப்பு | 14482 பார்வைகள்

மகாத்மா காந்தி பிரித்தானிய அரசுக்கு எதிரான தனது அகிம்சைப் போராட்டத்தை தனியே தனது இனத்தினை மட்டும் வைத்துக் கொண்டு நடாத்தியவரல்ல. பிரித்தானிய அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் இனம், மதம், பிரதேசம் பார்க்காமல் ஒன்றுசேர்த்து ஒரு மக்கள் போராட்டமாகவே முன்னெடுத்தார். தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக 29 பேர் வாக்களித்திருந்தனர். அவர்களில் 10 பேர் மாத்திரமே தமிழர்களாவர். ஏனையவர்களில் 3 பேர் முஸ்லிம்களும் 16 பேர் சிங்களவர்களுமாவர். இங்கு தமிழ், […]

மேலும் பார்க்க

தமிழ் காங்கிரஸ் X தமிழரசுக் கட்சி

26 நிமிட வாசிப்பு | 17823 பார்வைகள்

1950கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார். இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் […]

மேலும் பார்க்க

டி.எஸ். சேனநாயக்காவும் ஜி.ஜி.பொன்னம்பலமும்

24 நிமிட வாசிப்பு | 18226 பார்வைகள்

சோல்பரி அரசியல் அமைப்புக்கேற்ப நாடாளுமன்ற நடைமுறையினை ஏற்படுத்துவதற்காக 1947 ஆம் ஆண்டு டி. எஸ். சேனநாயக்கா முதலாளித்துவ அடிப்படைவாதக் கருத்துக்களையும் இனவாதக் கருத்துக்களையும் கொண்ட ‘தேசிய காங்கிரஸ்’, ‘சிங்கள மகாசபை’, ‘முஸ்லிம் லீக்’ ஆகிய மூன்று கட்சிகளை தமது தலைமையில் ஒன்றிணைத்து ‘ஐக்கிய தேசியக் கட்சி’ என்ற புதிய கட்சியினை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 1947 ஆம் ஆண்டே இடம்பெற்றது. நாடாளுமன்றத்தக்கான 100 ஆசனங்களில் டி. எஸ். […]

மேலும் பார்க்க

தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல்

24 நிமிட வாசிப்பு | 19864 பார்வைகள்

யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் தமது நலனை முன்னிறுத்தியே செயற்பட்டனர். டொனமூர் அரசியல் திட்டம் தமிழ்மக்களுக்கு போதுமானதாக இல்லை என எதிர்த்தவர்களில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சேர்.பொன்.இராமநாதன், அ.மகாதேவா போன்றவர்கள் முக்கியமானவர்கள். இதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொண்டபோதும் எஸ்.என்.ஆனந்தன் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதால் […]

மேலும் பார்க்க

டொனமூர்க் குழுவினரின் சிபார்சுகளும் தமிழ் தலைவர்களின் நிலைப்பாடும்

22 நிமிட வாசிப்பு | 21099 பார்வைகள்

மானிங் அரசியல் அமைப்பில் இருந்த குறைபாடுகளை நீக்கி இலங்கைக்குப் பொருத்தமான ஓர் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பொருட்டு 1927ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த டொனமூர் குழுவினர் இரண்டு முக்கிய சிபார்சுகளை முன்வைத்தனர். 1. கல்வித் தகமை, வருமானம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட வாக்குரிமையினை நீக்கி 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை. 2. சட்ட நிருபண சபையில் இருந்து வந்த இனவாரி பிரதிநிதித்துவத்தினை நீக்கி அதற்குப் பதிலாக பிரதேச […]

மேலும் பார்க்க

மாக்ஸ்சிசக் கொள்கை அறிமுகமாதல்

22 நிமிட வாசிப்பு | 7449 பார்வைகள்

1890 ஆம் ஆண்டுகளிலிருந்தே மாக்ஸ்சிசச் சிந்தனைகள் இலங்கைக்கு அறிமுகமாயின. இக் காலப்பகுதியில் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் முனைப்புப் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர்கள் தங்களுக்கிடையிலான இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்பவற்றைக் கடந்து வர்க்கங்களாக அணிதிரண்டனர். உதாரணமாக 1893 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைக் குறிப்பிட முடியும். இதில் சிங்களவர், தமிழர், பறங்கியர்கள் சங்க உறுப்பினர்களாகவும் தலைமைப்பீடத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இது போன்றே […]

மேலும் பார்க்க

அடையாள அரசியலும் இலங்கையும்

19 நிமிட வாசிப்பு | 12961 பார்வைகள்

தமிழர்கள் தங்களுடைய போராட்ட அரசியலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 வருடங்கள் எனலாம். இந்த எழுபது வருட காலத்தில் தமிழர்களின் அடிப்படைக் கொள்கையும் அதனை அடைவதற்கான போராட்ட வடிவங்களும் அணுகுமுறைகளும் பலவாறு மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இவை தமிழர்களுடைய அடிப்படை அரசியல் இருப்பை, அதனூடான அரசியல் உரிமைகளை எந்தளவுக்கு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்றொரு கணக்கெடுப்புக்கு வருவோமாயின் நிச்சயமாக மறை பெறுமானத்தில் தான் எமது விடை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இது […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)