இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன. நூலாசிரியர்: ஒய்வின்ட் புக்லறூட் […]