நாட்டில் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தலைவிரித்து தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான திட்டமும் இருக்கவில்லை. அவர்களின் உள்நாட்டு தேசிய பொருளாதாரத் திட்டமெல்லாம் பொய்யாகிக் கொண்டிருந்தது. அக்காலத்தில், மலையக மக்களுக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சேர்ந்த ஏ.அசீஸ் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரால் நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்து மடிவதை பொறுக்கமுடியாமல், அவர்களுக்கு போதுமான உணவு […]
பெருந்தோட்டத்துறை ஒட்டுமொத்தமாக அரசுடைமை ஆக்கப்பட்டபோது அங்கிருந்த ஒரு சாராரும் அரச சார்பு தொழிற் சங்கத்தினரும், இனிமேல் தோட்டத் தொழிலாளிகள் எல்லோருமே அரச உத்தியோகத்தர்கள் ஆகிவிட்டார்கள் என்று கொண்டாடினார்கள். ஆனால் அந்த எல்லா கொண்டாட்டங்களும் ஒருசில மாதங்களிலேயே சூரியனைக் கண்ட பனித்துளிகள் போல் கரைந்து போய்விட்டன. தோட்டங்கள் வெறுமனே வெள்ளை தோல் போர்த்த வெள்ளைக்காரனிடம் இருந்து கருப்புத் தோல் போர்த்த கருப்பு துரைகளிடம் மாறினவே அன்றி, அங்கே உண்மையான மாற்றங்கள் எதுவும் […]
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே கடைசி பிரிட்டிஷ் பிரஜையையும் இலங்கையில் இருந்து விரட்டி விட வேண்டும் என்ற துடிப்பு பேரினவாதிகளிடமிருந்து ஒவ்வொன்றாக வரத் தொடங்கிவிட்டன. அதன் முதலாவது தோட்டா இலங்கையில் இருக்கும் பிரித்தானிய தேயிலை பெருந்தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து தேயிலைத் தோட்டங்களை பிடிங்கிக்கொண்டு அவர்களை இங்கிருந்து விரட்டி விட வேண்டும் என்பதாகும். அதன் முதல் நடவடிக்கையாக இலங்கையின் பெருந்தோட்ட கம்பனிகளை தேசிய உடமைகள் ஆகிவிடுவது என்று ஆலோசனை […]
இலங்கை நாட்டில் சுமார் இருநூறு வருடங்களாக வசித்து வரும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் தம்மை ‘இந்திய தமிழர்கள்’ என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா, அல்லது ‘மலையகத் தமிழர்கள்’ என்று இனம் காண வேண்டுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இம்மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த மக்கள் மத்தியில், இந்தியாவில் ஒருகாலும் இலங்கையில் ஒரு காலும் வைத்துக்கொண்டு, சில சொச்ச நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று, […]
சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த எந்த ஒரு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் பற்றியோ, அவர்களது உரிமை மறுக்கப்படுவது தொடர்பிலோ, அவர்களுக்கும் ஒரு துண்டு நிலம் சொந்தமாக வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலோ ஒருபோதும் குரல் குரல் கொடுத்ததாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. இறுதியாக அவர்கள் நிகழ்த்திய 1000 ரூபா நாட்சம்பளப் போராட்டத்தின் போது மாத்திரம் அதற்குச் சாதகமாக முற்போக்குச் சிந்தனை […]
இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இவர்களுடன் கூட்டு அரசாங்கத்தில் ஈடுபட்ட பிரதான இடதுசாரிக் கட்சிகள்; இவைகள் அனைத்துமே இனவாதத்தைக் கக்கித்தான் இந்த நாட்டை ஆட்சி செய்தன. இவற்றுக்கு மேலதிகமாக அதிதீவிர இடதுசாரித்தத்துவம் என்று கூறிக்கொண்ட, மார்க்சிய-லெனினிய-மாவோவிய-சேகுவேராக் கொள்கைகளை துல்லியமாகக் கடைப்பிடிக்கிறோம் என்று கூவிக்கொண்டு செங்கொடியை தூக்கிப்பிடித்துக் கொண்டுவந்த ஜே. வி. பி என்றழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, இந்திய வம்சாவழித் தமிழர்களை […]
இந்த நாட்டை பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து அதிக காலம் ஆட்சி செய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரே இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பயமுறுத்திய மிகப்பெரிய பூச்சாண்டியாக இருந்திருக்கிறார் என்பதை அவரது அரசியல் காய் நகர்த்தல்களை கவனிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். சாரைப்பாம்பு ஒன்றினை நன்கு புடைத்து அதன் உயிரைப் போக்கி உச்சிவெயிலில் போட்டதுபோல் பிரஜாவுரிமை பறிப்பால் நொந்து நைந்து போயிருந்த இம்மக்களை அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்காமலேயே இந்தியாவுக்கு அனுப்பி […]
1964 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வரலாறு இரண்டு பாதைகளாகப் பிரிகின்றது. ஒன்று இலங்கைப் பிரஜைகளாக அந்தஸ்து பெற்று இங்கேயே தங்கி விட்டவர்கள்; நாடற்றவர்கள் என்ற பெயர் பெற்ற மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. மற்றையது இந்தியப் பிரஜாவுரிமை பெற்று ‘தாயகம் திரும்பியோர்’ (Repatriate) என்ற திருநாமத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. எல்லா உரிமைகளும் […]
ஒரு நாட்டில் ஒரு நல்ல தலைவன் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அந்த நாடு சீரும் சிறப்பும் பெற்று செழித்து வளரும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு நல்ல தலைவனை இழந்து ஒரு கொடுங்கோலனின் ஆட்சியில் ஒரு நாடு விழுந்தால் அந்த நாட்டின் மக்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதற்கும் வரலாற்றிலிருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும் . இந்த வரலாறுகள் எழுதப்படுவதற்கான முக்கியமான காரணமே அவற்றில் இருந்து நாம் […]
1950 களைத் தொடர்ந்துவந்த ஒன்றரை தசாப்த காலம் இலங்கைத் திருநாட்டை சிங்கள நாடாக மாற்றுவது தொடர்பான முயற்சிகளிலேயே கழிந்தது. அதனால் தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையினர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்து வெளிக்காட்டி வந்தனர். இதனால் அவ்வப்போது ரத்தக்களரிகளும் போராட்டங்களும் சத்தியாக்கிரகங்களும் வெடித்த வண்ணமே இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது பிரதமரான டி . எஸ் . சேனநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட இனவாதக் கொள்கைகளை அடுத்து வந்த அனைத்து பிரதமர்களும் உள்ளது […]