1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமானது ஒட்டுமொத்த இந்திய வம்சாவளித் தமிழர்களினதும் பிரஜாவுரிமையைப் பறித்ததுடன், இந்திய – பாகிஸ்தானிய முஸ்லிம்கள், போரா, மேமன், பார்சி போன்ற ஏனைய இனத்தவர்களின் பிரஜாவுரிமையைக்கூட விட்டு வைக்கவில்லை. இது இலங்கையின் ஜனநாயக அரசியலில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியது. அத்துடன் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக 1949 ஆம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தானியர் வதிவிடப் பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு […]