இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதற்காக கல்விகற்ற இலங்கையர்கள் உரத்துக் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு முன்னர் ஆளுநரிடமும், படைத்தளபதிகளிடமும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன. எனினும் பணம் படைத்தவர்கள், கல்வி கற்றவர்கள், இன ரீதியிலான பிரதிநிதித்துவம் என நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதன்படி, கொழும்பில் வசித்த பணம்படைத்த படித்த இலங்கையர்களுக்கும், இனரீதியாக […]